உலகத்தில் எத்தனை கடவுள்கள் உள்ளனர்? :

உலகத்தில் எத்தனை
கடவுள்கள் உள்ளனர்? :
=======================

இந்து மதத்தினர் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற சொற்தொடரை பயன்படுத்துவார்கள். அதை நீங்கள் செவியேற்று இருக்கலாம். 33 கோடி தெய்வங்கள் இருப்பதாக இந்தச் சொல் கூறுகிறது.

கோடி எனும் சொல்லுக்கு வகை என்றும் கடைசி என்றும் பொருள் உண்டு. அந்த வகையில் இந்து மதத்தில் 33 வகை கடவுளர் அல்லது 33 கடவுளர் மட்டுமே உள்ளனர் என்றும் சிலர் விளக்கம் கூறுகிறார்கள்.

"இந்து மக்கள் வணங்காதவற்றை வரிசைப்படுத்தி விடலாம்; வணங்குகிறவற்றை வரையறுக்க இயலாது" என்று சொல்லுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் வணங்கும் தெய்வங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாடு வாரியாக, மொழி வாரியாக, சாதி வாரியாக, இனம் வாரியாக, குடும்பம் வாரியாக இந்தியாவில் கடவுளர் இருக்கின்றார்கள்.

இதுபோல் உலகம் முழுவதும் இனம், மொழி, சாதி, குடும்பம் வாரியாக பல கடவுள்கள் இருக்கின்றனர்.

உலகத்தில் 4200 மதங்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றது.

இந்தியாவில் முக்கிய சாதிகளாக  3,000 சாதிகளும், துணை சாதிகளாக 25,000 சாதிகளும் இருக்கின்றது. 

எனவே சாதிக்கு ஒரு கடவுள், மதத்திற்கு ஒரு கடவுள் என வைத்துக் கொண்டாலும் பல்லாயிரக்கணக்கான கடவுளர்கள் உலகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இஸ்லாம் மார்க்கத்தின் கடவுள் கொள்கை அறிவுப்பூர்வமானது.  உலகில் எந்தப் பகுதியில் வாழும் முஸ்லிமுக்கும் இறைவன் ஒருவன் தான். அவன் பெயர் 'அல்லாஹ்' தான்

ஆதி கால தமிழ் கலாச்சாரம் கூட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று சொல்லி வந்தது.

மனிதன் தேசம், மொழி, சாதி என பிரித்ததாலும், பிரிந்ததாலும் பல கடவுள்கள் தோன்றினர். 

காற்று, மழை, சூரியன், சந்திரன், நிலம், ஆகாயம், வானம் ஆகிய அனைத்தும் ஒன்றுதான்! அனைவருக்கும் ஒன்றுதான்! ஆனால் கடவுள் மட்டும் ஏன் இத்தனை? 

ஒரு மனிதனுக்குக் கீழ் பணியாற்றுகிறவன் நிம்மதியாக பணியாற்றுவான். பல முதலாளிகளுக்குக் கீழ் ஒருவன் பணியாற்றும்போது நிம்மதி இழந்து காணப்படுவான். 

அது போல தான் ஒரு கடவுளை மட்டும் வணங்குகிறவனின் நிலையும் பல கடவுளரை வணங்குகிறவனின் நிலையும்.

மொழி கலப்பு திருமணம் செய்கிற தம்பதியரின் பிள்ளைகள் எந்த கடவுளை வணங்குவர்? 

புலம் பெயர்ந்து பிழைப்பு நடத்தும் தொழிலாளி எந்த கடவுளை வணங்குவான்? 

ஒவ்வொரு மனிதனும் தனக்கு இரண்டு அப்பாக்கள் இருப்பதை  விரும்புவானா? அதைக் கேவலமாக கருதுகிறான். ஆனால் கடவுள் விஷயத்தில் மட்டும் அறிவீனமான வார்த்தைகளை உதிர்க்கிறான்.

எனவே இஸ்லாத்தின் பலமே ஒரே இறைவன் என்பதுதான்! இந்த கருத்தில் உள்ள உண்மைகளை உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும், ஆய்ததறிந்து அறிந்த பிறகு தான் மக்கள் இஸ்லாத்தின் பால் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.

ஓர் இறைக் கோட்பாட்டை குறித்து சிந்தியுங்கள். 

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்