துக்ளக் விமர்சனம்

நமது ஊர் குறித்த வரலாற்று நூல் சோ அவர்கள் நிறுவிய துக்ளக் 25/12/2024 இந்த வார பத்திரிக்கையில் விமர்சனம் வெளிவந்துள்ளது. படித்துப் பாருங்கள். ஆங்காங்கே இருப்பவர்கள் இந்த துக்ளக் இதழை வாங்கி வாசியுங்கள். 

நமது ஊர் குறித்த நூல் நாளேடுகள் மற்றும் பல்வேறு வார பத்திரிகைகள் மாத பத்திரிகைகள் ஆகியவற்றில் விமர்சனங்கள் வெளிவந்துள்ளது அவற்றை தொகுத்து விரைவில் வழங்குகிறேன். 

துக்ளக் விமர்சனம்


புத்தக விமர்சனம்

நூல்: வரலாற்று ஒளியில் பெரிய வடகரை. ஆசிரியர்: மவ்லவி B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ M.A., M.Phil. பக்கம்: 192. விலை: ரூ.150/-. கிடைக்குமிடம்: ஸலா பப்ளிகேஷன், 21/10, 14-வது குறுக்குத் தெரு, மந்தைவெளிப்பாக்கம், -28. : 9444314976, 98428279249.

இது வரை 38 இஸ்லாமிய நூல்களை இயற்றியுள்ள இந்நூலாசிரியர், தனது சொந்த ஊரின் பண்டைய வரலாற்றுத் தகவல்களையும், தற் போதைய தகவல்களையும் சேகரித்து இந்நூலை உருவாக்கியுள்ளார். 

பெரம்பலூர் வட்டாரத்தில் உச்சிமலைக் குன்றுகளில் உருவாகும் அருவிகள் பல்கிப் பெருகி 'கல்லாறு' என்ற பெயரில் சீறிப் பாய்ந்து செல்லும், ஆற்றின் வடக்கு கரையில் அமைந்திருக்கிறது 'பெரிய வடகரை' என்ற பழமையான ஊர். 

கற்காலம் தொட்டே இப்பகுதிகளில் உள்ள பல ஊர்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது ஆய்வாளர்களின் கூற்று. 

அதில் ஒன்றுதான் பெரியவடகரை. இவ்வூரின் 2,000 வருடங்களுக்கு மேற்பட்ட சில விவரங்களை எடுத்துக் கூறும் ஆசிரியர், முஸ்லிம்கள் எவ்வாறு இங்கு குடியேறினார்கள் என்றும், இங்கு வாழும் முஸ்லிம்களும் மற்ற மதம் மற்றும் ஜாதியினரும் தொன்று தொட்டு ஒருவரையொருவர் மதித்து எப்படி இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் ஆசிரியர் கூறுவது, நல்லதொரு எடுத்துக் காட்டு. 

தவிர, முஸ்லிம்கள் இப்பகுதிகளில் ஆற்றியுள்ள சமுதாயச் சேவைகளும், தங்கள் சமூக மக்களுக்கு ஆற்றியுள்ள சமயச் சேவைகளும் ஏராளம். இப்படி இவ்வூரின் பல்வேறு தகவல்களைச் சேகரித்து இந்நூலில் பதிவு செய்துள்ளது, அடுத்து வரும் தலைமுறையினர் அதை அறிவதற்கு உதவுகிறது. 

இதைப் படிப்பவர்களுக்கும் கூட நம் ஊர் பற்றிய நல்ல தகவல்களைச் சேகரித்து, நாமும் இப்படி ஒரு பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவது நிச்சயம்.


பரக்கத்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்