தூதரின் தூதர்

தூதரின் தூதர் :
==≠=============

மக்காவிலிருந்து தொலைதூர  நிலப்பரப்பான மதீனாவிற்கு  முதன் முதலில் இஸ்லாத்தை கொண்டுச் சென்றத்  தூதர் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் ஆவார்கள். 

இவர்களின் முயற்சியும் ராஜதந்திரங்களும் வழிகாட்டுதலும் இஸ்லாம் அசுர வளர்ச்சி அடைவதற்கு ஒரு காரணமாக இருந்தது.

இவர் இஸ்லாம் ஆவதற்கு முன் செல்வ செழிப்போடு வாழ்த்தவர்; நேரத்திற்கு ஒரு உடையும் சூழ்நிலைக்கு ஏற்ற அத்தரையும் பயன்படுத்தி வந்த மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவர். 

இவர் இஸ்லாத்தில் இணைந்த பிறகு துறவர மனநிலையோடும் தூய்மையான மனநிலையிலும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 

அதனால்தான் உஹது போர்க்களத்தில் ஹம்ஸா (ரலி) அவர்களைத் தேடி கொலை செய்தது போலவே இவரையும் தேடிச் சென்று எதிரிகள் கொலை செய்தார்கள். 

அதனால் இஸ்லாத்தை முதன் முதலில் வெளி நகரங்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் நபரின் மரணம் அந்த உஹதில் நடந்தது. அவரின் உடலைக் கண்ட அனைத்து நபி தோழர்களும் நபிகளாரும் அழுத அழுகையின் அளவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அளவிட முடியாது.

இஸ்லாம் அறிமுகமானதில் இருந்து 12வது வருடத்தில் இரண்டாவது அகபா உடன்படிக்கையின் போது மதீனாவில் இருந்து 70 முஸ்லிம்களோடு மக்காவிற்கு வந்து ஹஜ் செய்தார். 

பிறகு எழுபது முஸ்லிம்களையும் அழைத்துக் கொண்டு மினாவின் ஓர் பகுதியில் நபி (ஸல்) அவர்களை சந்திக்க வைத்த சாதனையாளர் இவர்.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்து மதீனாவிற்குள் நுழைவதற்கு முன் 20% சதவீத வீடுகளில் இஸ்லாம் நுழைந்து விட்டது. அதாவது சுமார் 2000 வீடுகளுக்குள் இஸ்லாம் நுழைந்துவிட்டது. 

இரண்டு ஆயிரங்களுக்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். அவர்களில் 600 ஆண்களும், மற்றவர்கள் முதியவர்களும், பெண்களும், சிறுவர்களுமாக இருந்தார்கள். இந்த அரியப் பணியை செய்தவர் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் ஆவார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்