இஸ்லாம் மார்க்கம் வளர்ச்சியடைய காரணம் என்ன? :

இஸ்லாம் மார்க்கம் 
வளர்ச்சியடைய காரணம் என்ன? :
=================================

1. இஸ்லாத்தைப் பாதுகாக்கவும் அதை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையச் செய்யவும், இஸ்லாத்தின் வளர்ச்சியை கொண்டு இஸ்லாமியர்கள் பயனடைவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கவும் அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டதால் இஸ்லாம் அசுர வளர்ச்சி அடைகிறது.

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ. التوبة/33.

தனது தூதரை நேர்வழியுடனும், உண்மையான மார்க்கத்துடனும் அவன்தான் அனுப்பினான்; இணை வைப்பவர்கள் வெறுத்தாலும், அதை அனைத்து மார்க்கங்களுக்கும் மேலோங்கியதாக ஆக்குவதற்காகவே இந்தத் தூதரை அனுப்பினான். 9:33

அதாவது நபி (ஸல்) அவர்கள் வசம் இஸ்லாமிய வாழ்வின் நெறிமுறைகள் அனைத்தையும் வழங்கி, அதன் அடிப்படையில் மக்கள் வாழ வேண்டும் என்கிற சட்டத்தை வகுத்து அல்லாஹ்வே நபிகளாரை அனுப்பி வைத்தான். 

அதனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்தாலும் இஸ்லாம் சிறந்து விளங்கும்; அதற்கு நான் பொறுப்பு என இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ. المجادلة/21.

"நிச்சயமாக நானும் என் தூதர்களும்தான் வெற்றி பெறுவோம்" என்று அல்லாஹ் (விதியில்) எழுதி வைத்து விட்டான். 58:21

அல்லாஹ் வழங்கிய மார்க்கமும் அல்லாஹ் அனுப்பிய தூதர்களும் பூமியில் வெற்றி பெறுவர் என அல்லாஹுவே வாக்களித்து இருப்பதால் இஸ்லாம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது.

وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ. الأنبياء/105.

"நிச்சயமாக நற்செயல்கள் செய்யும் என் அடியார்கள் இந்த பூமிக்கு உரிமையாளர்கள் ஆவர்" என்று (தவ்ராத்துக்கு) பின்னர் ஸபூர் வேதத்திலும் நாம் குறிப்பிட்டு இருக்கிறோம். 21:105

"இறைவன் வழங்கிய நான்கு வேதங்களிலும் இஸ்லாம் வளர்ச்சியடையும் அதற்குக் காரணமாக இருக்கிற நன்மக்களுக்கு பூமி முழுவதையும் வழங்குவேன்" என அல்லாஹ் வாக்களித்து இருப்பதால் மக்கள் இஸ்லாத்தின் பால் சாரை சாரையாக வருகிறார்கள்.

2. இயற்கையோடு ஒத்துப்போகும் எளிய மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாத்தின் ஒழுக்கங்கள் அதன் விழுமியங்கள் வாழ்வியல் வழிகாட்டுதல்கள் ஆகிய ஒவ்வொன்றையும் காண்கிற எவரும் இது மனிதனால் உருவாக்கப்பட்ட மதம் அல்ல! ஒரே இறைவனால் வடிவமைக்கப்பட்ட மார்க்கம் என விளங்கிக் கொள்வர்.

3. ஏற்கனவே வாழ்ந்த முஸ்லிம்கள் உலக பற்றற்ற நிலையில் வாழ்ந்தது, இஸ்லாம் மார்க்கத்தில் இருப்பதை பெருமையாக கருதாமல் இருந்தது, எந்த சூழ்நிலையிலும் பிற மதங்களை கண்ணியக் குறைவாக நடத்தாமல் இருந்தது ஆகியனவும் இன்று இஸ்லாமிய வளர்ச்சிக்குக் காரணமாகும்.

4. இஸ்லாத்தைப் பரப்புவதற்கு என்று பிரச்சாரகர்கள் தனியாக யாரும் இல்லை. ஏனென்றால் பிரச்சாரத்தின் வாயிலாகத்தான் இஸ்லாம் பரவுகிறது என்று வளரும் நினைத்து வைத்திருக்கிறார்கள். 

இஸ்லாத்தைப் பொருத்தமட்டில் இஸ்லாமியர்கள் அனைவருமே பிரச்சாரகர்கள் தாம்!

.
.
.
.
.
தொடரும்...

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்