அமெரிக்கா இரட்டைக் கோபுர தாக்குதலில் இஸ்லாமியர்களின் வளர்ச்சி:
அமெரிக்கா இரட்டைக் கோபுர தாக்குதலில் இஸ்லாமியர்களின் வளர்ச்சி:
==================================
(அமெரிக்கா இரட்டைக் கோபுரம் முஸ்லிம்களால் தாக்கப்படவில்லை; அந்த கோபுரம் கட்டப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் அதை இடிக்கும் நிலையில் இருந்தது.
அதை இடிக்கும் அதே நேரத்தில் அந்த குற்றத்தை முஸ்லிம்கள் மீது போட்டு விடுவது என முடிவு செய்து செயல்பட்டது ஒரு சதிகார கூட்டம். )
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட செப்டம்பர் 11. 2001 காலகட்டத்திற்கு பிறகு இஸ்லாம் மார்க்கம் உலகில் உள்ள அனைத்து ஆட்சியாளர்களாலும் பகிரங்கமாக எதிர்க்கப்பட்டது.
அந்த எதிர்ப்பை கண்கூடாகக் கண்ட இஸ்லாமிய ஆர்வலர்கள் இஸ்லாம் மார்க்கம் அழிவை நோக்கி செல்கிறதோ என்று எண்ணவும் தொடங்கினர்.
ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இஸ்லாம் மிகப் பெரிய அளவில் அசுர வளர்ச்சியை அடைந்திருப்பதாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
1.8 பில்லியன் மக்கள் அதாவது உலக அளவில் உள்ள முஸ்லிம் மக்களின் மக்கள் தொகையில் .24 சதவீதம் பேர் ஆண்டுதோறும் இஸ்லாத்தில் இணைந்து வருகிறார்கள் என்கிற புள்ளிவிபரத்தை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகிறார்.
எதிர்வரும் முப்பது வருடங்களுக்குள் அதாவது 2050 க்குள் உலக முஸ்லிம் மக்கள் தொகையும் கிறிஸ்துவ மக்கள் தொகையும் சம அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்த்ததை விட , கணிப்புகளை விட இஸ்லாத்தின் வளர்ச்சி ஓர் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என நியூ ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் - New England Adolescent Research Institute (NEARI) அறிஞர்கள் கூறுகிறார்கள்
மத்திய ஆசியா, இந்தோனேசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா, வட ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் வேறு சில பகுதிகளில் இஸ்லாம் மேலாதிக்க மார்க்கமாக உள்ளது. மேலும் ஆசியா-பசிபிக் பகுதியில் அதிக முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது.
முஸ்லிம்களின் மக்கள் தொகை ஏன் அதிகரிக்கிறது என்கிற கேள்விக்கு The Guardian எனும் பிரிட்டிஷ் பத்திரிக்கையில் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒர் ஆய்வறிக்கை.
முஸ்லிம்களிடம் குழந்தைகள் பிறப்பு விகிதம் எப்பொழுதும் போல் சம அளவில் இருக்கின்றது. அதனால் அவர்களிடம் இளைஞர்களும் இளைஞிகளும் நிறைந்துக் காணப்படுகின்றார்கள்.
இவர்கள் படிப்பதற்காகவும் வேலைகளுக்காகவும் சொந்த ஊர், நாடு மற்றும் நகரங்களை விட்டுச் சாதாரணமாக இடம் பெயர்ந்துச் செல்கிறார்கள்.
சென்ற இடங்களில் இவர்களின் வாழ்க்கை முறையே இஸ்லாமிய பிரச்சாரமாக அமைகிறது. பிறகு அவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாத்தில் இணைகிறவர்களுக்கு அழைப்பு மையங்களை தனியாகக் கட்டி அதன் வழியாக சேவைகளை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளுக்கு முஸ்லிம்கள் கல்வியை கற்கச் சென்றார்கள். முஸ்லிம்களிடம் ஐரோப்பியர்கள் ஒழுக்கம், கூட்டுக் குடும்பம் போன்ற விலைமதிப்பற்ற வாழ்வியல் முறையை கற்றுக் கொண்டார்கள்.
அனைவரிடமும் இன்டர்நெட் வசதி இருந்த நேரத்தில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு உலக அரசாங்கங்கள் இஸ்லாத்தைக் குறித்துத் தவறாக செய்திகளை பரப்பியது. அது உண்மையா என அறிந்து கொள்ள ஆய்வு செய்த பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.
ஒரே நேரத்தில் உலகின் பல பாகங்களில் பலர் இஸ்லாத்தில் இணைந்ததால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
யூதர்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் இஸ்லாமியர்களை அழித்துவிட வேண்டும், இஸ்லாமிய நாடுகளை பிளவு படுத்தி பலவீனமாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தது போல் நாடுகள் பலவீனமடைந்தது; முஸ்லிம்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் அழிந்தார்கள்; ஆனால் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும், அகதிகளாகவும் குடி பெயர்ந்தார்கள். அதனாலேயே ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இந்த அதிகரிப்பு அவர்களின் ஆட்சியை ஆட்டம் காணச் செய்கிற அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுவே உனக்கும் நடக்கும் என்று பழமொழி சொல்வது போல் அவர்களின் நிலை உருவாகியுள்ளது.
Comments
Post a Comment