உங்கள் மனைவியை காதலியுங்கள்; அது மட்டும் தான் உண்மையான காதல்!
உங்கள் மனைவியை
காதலியுங்கள்; அது மட்டும் தான்
உண்மையான காதல்!
وكان الامام أحمد بن حنبل رحمة الله عليه يثني علي زوجها وماتت وهو حيٌّ فيقول أقامت امّ صالح معي ثلاثين سنة فما اختلفت انا وهي في كلمة (طبقات الحنابلة)
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் மனைவி உம்மு ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் இறந்த போது இமாம் அவர்கள் மிகவும் அழுதார்கள்; பிறகு அவர்கள் கூறினார்கள்.
"நான் என் மனைவி உம்மு ஸாலிஹ் (ரஹ் ) அவர்களுடன் முப்பது வருடங்கள் குடும்பம் நடத்தி இருக்கின்றேன்; ஒரு முறை கூட எனக்கும் என் மனைவிக்கும் இடையே ஒரு கருத்தில் கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டதில்லை."
நூல் : தபகாதுல் ஹனாபிலா
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
நீங்கள் அமைதி பெறுவதற்காக உங்கள் இனத்திலிருந்தே உங்களுக்கு மனைவியரை படைத்திருப்பதும் அவன் அற்புதங்களில் உள்ளதாகும்;
உங்களுக்கிடையே அன்பையும், பரிவையும் அவனே ஆக்குகிறான்; நிச்சயமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் இறைச்சான்றுகள் இருக்கின்றன. 30:21
அன்பையும் பரிவையும் கணவன், மனைவி மீதும், மனைவி, கணவன் மீதும் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதுவே காதல்.
திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் இனக்கவர்சியால் ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார்கள்.
இனக்கவர்சியால் ஈர்க்கப்பட்டவர்களின் செய்கைகளுக்கு 'காதல்' என்னும் சொல்லை பயன்படுத்தவே கூடாது.
'காதல்' مَوَدَّةً எனும் சொல் கணவன் மனைவிக்கு மட்டுமே உரியது.
Comments
Post a Comment