உலகின் ஆகச்சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் காலமானார்கள்
உலகின் ஆகச்சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் காலமானார்கள் :
==================================
1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் பேங்க் கவர்னராக மன்மோகன் சிங் அவர்கள் இருந்தார்கள்.
அப்பொழுது சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். சவூதி மன்னர் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் அவர்கள், "எங்கள் நாட்டை குறுகிய காலத்தில் வளர்ச்சி அடையச் செய்ய ஒரு வழியை சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
சில வினாடி மௌனத்திற்கு பிறகு மன்மோகன் சிங் அவர்கள், "உங்கள் நாட்டிற்கு பல்வேறு வகைகளில் வருமானம் வரும்; அவற்றில் பெட்ரோலியம் மூலமாக அதிக லாபம் வரும்.
ஒரு லிட்டர் பெட்ரோலில் கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் பத்து பைசாவை மட்டும் எடுத்து உங்கள் நாட்டின் சாலைகளை சீர் செய்யுங்கள்; கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே சாலைகள் வழியாக தொடர்பை ஏற்படுத்துங்கள்; ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலைகள் தான் முக்கியம்" எனக் கூறினார்.
அவரின் ஆலோசனையை ஏற்று அன்று முதல் இன்று வரை அந்த நாட்டு அரசாங்கம் சின்னச் சின்ன கிராமங்களுக்குக் கூட சாலைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
அதனால் ஆங்காங்கே உற்பத்தியாகும் பொருட்கள் நகர்ப்புறங்களுக்கு கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விற்பனை செய்து நல்ல லாபத்தைப் பார்த்தார்கள்.
இன்று சவூதி அரேபியாவில் இரண்டு வழி, மூன்று வழி, நான்கு வழி என தார் சாலைகள் பெருகி இருக்கின்றன; ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு குறுகிய நேரத்தில் சென்று விட முடியும்.
ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு லாரிகளில், கண்டெய்னர்களில் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வியாபாரம் பெருகி இருப்பதற்குக் காரணம் தார் சாலைகள் தாம்.
இந்தியாவின் பொருளாதாரம் இவர் பிரதமராக இருந்த காலத்தில் தான் ஆக உச்சத்தில் இருந்தது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிட GDP growth அளவை கொண்டு அளவிடுவார்கள். இவர்கள் காலத்தில் GDP growth 7.4 ஆக இருந்தது. மக்களிடம் பணப்புழக்கம் தாராளமாகவும் இருந்தது.
10 வருடம் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் GTP growth 7.4 ஆக ஆக்கினார்.
12 வருடம் பிரதமராக இருக்கும் தற்போதைய பிரதமர் 6. 5 ஆக ஆகியிருக்கிறார்.
மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருக்கும் போது தமக்கு முன்னால் இருந்த பிரதமர்கள் இந்தியப் பொருளாதாரத்தை எந்த இடத்தில் விட்டு சென்றார்களோ அந்த இடத்தில் இருந்து வளர்ச்சி பாதையில் இழுத்துச் சென்று மேலும் வளர்ச்சி அடையச் செய்தார்.
தற்போதைய பிரதமர் ஏற்கனவே இருந்த பொருளாதார வளர்ச்சியை பின்னோக்கி இழுத்துச் சென்று இருக்கிறார்.
மன்மோகன் சிங் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் சவூதி அரேபியா அமைத்தத் தார் சாலைகளில் இன்று இந்திய ஏழை இளைஞர்கள் டிரைவர்களாக பணியாற்றுகிறார்கள்.
அவர்களின் மரணத்திற்கு என் இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Comments
Post a Comment