செய்ந்நன்றி கொன்ற மகற்கு....
செய்ந்நன்றி கொன்ற மகற்கு....
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
பெரிய குடும்பம்
பெரிய குடும்பம் தான்
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) அப்துல்லாஹ் பின் ஜாபீர் (ரலி) ஆகிய மூவரும் ஹஜ் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
வழியில் மூவருக்கும் கடுமையான பசி ஏற்பட்டது; உண்பதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை; மூவரும் ஏதேனும் வீடுகள் இருக்கின்றதா என தேடிக்கொண்டே வந்தார்கள்; அப்பொழுது ஒரு வீடு தென்பட்டது.
அந்த வீட்டின் வாசலில் நின்று ஸலாம் சொல்லி, "நாங்கள் நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர்; எங்களுக்கு பசிக்கிறது ஏதேனும் உணவளியுங்கள்; ஸதகா - தர்மப் பொருள்கள் எதுவும் எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டாம் அதை நாங்கள் சாப்பிடக்கூடாது" என கூறினார்கள்.
அந்த வீட்டில் வயதான பெண்மணி ஒருவர் இருந்தார்; அவர் அவர்களின் நிலையை உணர்ந்து கொண்டு தம் வீட்டில் இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை அறுத்து சமைத்து பரிமாறினார்.
மூவரும் வயிறார சாப்பிட்டு மனதார வாழ்த்தி விட்டு, "மதீனாவிற்கு வந்தால் எங்களை சந்தியுங்கள்" என சொல்லிவிட்டு சென்றார்கள்.
வயதான மூதாட்டியின் கணவர் ஆடுகளை மேய்த்து விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார்; குட்டி ஆட்டை காணவில்லை; மனைவியிடம் கேட்டார்.
மனைவி, "மூன்று நபர்கள் வந்திருந்தார்கள்; தம்மை நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் என்றும் பசிப்பதாகவும், பசிக்கு உணவு அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களின் சோர்வையும், வார்த்தையில் இருந்த உண்மையையும் புரிந்து கொண்டு, நமது ஆட்டை அறுத்து அவர்களுக்கு விருந்தளித்தேன்; மிச்சம் இருக்கிறது நீங்களும் சாப்பிடுங்கள்" என்றார் .
உடனே அந்தக் கணவர் மிகவும் கோபப்பட்டார்; தன் மனைவியே மிகவும் கடிந்து கொண்டார்; அதிகமான வார்த்தைகளில் வசை பாடினார் திட்டி தீர்த்தார்; "யார் என்றே தெரியாதவர்களுக்கு உணவளித்தாயா? நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் என்று சொன்னதுமே உணவளித்து விட்டாயா?" என்றெல்லாம் கடிந்து கொண்டார்.
சில நாட்கள் கழிந்தது; வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்களை வாங்குவதற்காக இருவரும் மதீனாவிற்கு வந்திருந்தார்கள்.
இப்பொழுது எதார்த்தமாக ஹஸன் (ரலி) அவர்கள் அப் பெண்மணியை கடைவீதியில் வைத்து பார்த்து விட்டார்கள்; மிகவும் சந்தோஷப்பட்டு தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
"நீங்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும்; என வற்புறுத்தி ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து இழுத்த வண்ணம் வீட்டிற்குச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் இருவருக்கும் உயர்தரமான உணவு வகைகள் பரிமாறப்பட்டது அவர்கள் சாப்பிட்டார்கள்.
"அன்று நீங்கள் எங்களுக்கு உணவளித்ததற்காக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்; எங்களின் சிறிய அன்பளிப்பு நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" எனச் சொல்லி ஆயிரம் தினார் தங்க நாணயங்களையும் ஆயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்.
அதனைப் பெற்றுக் கொண்ட பெண்மணி தன் கணவரைப் பார்த்தார்; அந்தப் பார்வையில், ஆயிரம் அர்தங்கள்; அன்று நான் ஒரு ஆட்டை அறுத்து விட்டதாக சொன்னீர்களே! இன்று எப்படி? யாரோ தெரியாதவர்களுக்கு உணவளித்து விட்டதாக சொன்னீர்களே! இன்று நபிகள் நாயகத்தின் குடும்பத்தினருக்கு தான் உணவளித்து இருக்கிறோம்; அவர்கள் நம்மை எவ்வளவு தூரம் கண்ணியப்படுத்துகிறார்கள் பாருங்கள்?" என்பது போன்று பார்த்தார் .
அப்பொழுது ஹஸன் (ரலி) அவர்கள், "தாங்கள் என் தம்பி ஹுசைன் அவர்களின் இல்லத்திற்கும் செல்ல வேண்டும்; நீங்கள் சென்று வாருங்கள்" என சொல்லி ஒரு பணியாளரை அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள்.
ஹுசைன் (ரலி) அவர்கள் இருவரையும் வரவேற்று உபசரித்து நிறைய மளிகை சாமான்களை வாங்கி கொடுத்து, ஆயிரம் தினாரையும் ஆயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்.
அப்பொழுதும் அந்தப் பெண் தன் கணவரை எப்படி? என்பது போன்று பார்த்தார். கணவர் தலையை கீழே குனிந்து கொண்டார் .
ஹுசைன் (ரலி) அவர்கள், "எனது தம்பி அப்துல்லாஹ்வை நீங்கள் பார்க்க வேண்டும்" எனச் சொல்லி ஒரு பணியாளரை உடன் அனுப்பி வைத்தார்.
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இருவரையும் வரவேற்று உபசரித்து இரண்டு ஆயிரம் தீனார் தங்க நாணயத்தையும் இரண்டு ஆயிரம் ஆடுகளையும் வழங்கினார்.
அவர் வழங்குவதாக சொன்ன வார்த்தையை கேட்டதும் மனைவி எங்கே தம்மை திரும்பிப் பார்ப்பாரோ என்று எண்ணிய கணவர் மனைவியை பார்க்காதவாறு திரும்பிக் கொண்டார்.
ஆனால் மனைவி நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார்; மனைவி கழுத்தை திருப்பி இருப்பார் என்று நினைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தார். மனைவி பார்த்துக் கொண்டே இருந்தார்; மீண்டும் வெட்கித் தலை குனிந்தார்.
"எனது அண்ணன்கள் ஹசன் ஹுசைன் இருவரும் ஆயிரம் ஆடுகளையும் ஆயிரம் தினார்களையும் கொடுத்தார்கள்; அது அவர்களுக்குப் பொருத்தமானது. ஏனென்றால் அவர்கள் நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர்; நான் அப்படி அல்ல! நான்
இரண்டு ஆயிரம் தீனார்களையும் இரண்டு ஆயிரம் ஆடுகளையும் வழங்கினால்தான் அவர்களின் நன்மை அளவிற்கு நான் நன்மை பெற முடியும்" எனக்கூறி வழி அனுப்பி வைத்தார்கள்.
பெரிய குடும்பம் பெரிய குடும்பம் தான்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
நூல்: திருக்குறள் 110
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
ومنها ما رواه أبو الحسن المدائني قال: خرج الحسن والحسين وعبد الله بن جعفر (رضي الله عنهم) حجاجا ففاتهم أثقالهم، فجاعوا وعطشوا فمروا بعجوز في خباء لها فقالوا: هل من شراب؟ فقالت: نعم، فأناخوا بها وليس لها إلا شويهة في كسر الخيمة، فقالت: احلبوها، وامتذقوا لبنها، ففعلوا ذلك وقالوا لها: هل من طعام؟
قالت: لا إلا هذه الشاة، فليذبحنها أحدكم حتى أهيئ لكم شيئا تأكلون.
فقام إليها أحدهم فذبحها وكشطها ثم هيأت لهم طعاما فأكلوا ثم أقاموا حتى أبردوا فلما ارتحلوا قالوا لها: نحن نفر من قريش نريد هذا الوجه، فإذا رجعنا سالمين فألمي بنا فإنا صانعون إليك خيرا، ثم ارتحلوا. وأقبل زوجها وأخبرته عن القوم والشاة فغضب الرجل، وقال: ويحك تذبحين شاتي لأقوام لا تعرفينهم ثم تقولين: نفر من قريش، ثم بعد مدة ألجأتهم الحاجة إلى دخول المدينة، فدخلاها وجعلا ينقلان البعير إليها ويبيعانه ويعيشان منه، فمرت العجوز في بعض سكك المدينة فإذا الحسن (رضى الله عنه) على باب داره جالس فعرف العجوز وهي له منكرة.
فبعث غلامه فردها فقال لها: يا أمة الله تعرفيني؟ قالت: لا، قال: أنا ضيفك يوم كذا، فقالت العجوز بأبي أنت وأمي، فأمر الحسن (رضي الله عنه) فاشترى لها من شاء الصدقة ألف شاة وأمر لها بألف دينار وبعث بها مع غلامه إلى أخيه الحسين (رضي الله عنه) فقال:
بكم وصلك أخي الحسن فقالت: بألف شاة وألف دينار، فأمر لها بمثل ذلك، ثم بعث بها مع غلامه إلى عبد الله بن جعفر (رضي الله عنه) فقال: بكم وصلك الحسن والحسين (رضي الله عنهما)؟ فقالت: بألفي دينار وألفي شاة فأمر لها عبد الله بألفي شاة وألفي دينار، وقال: لو بدأت بي لأتعبتهما، فرجعت العجوز إلى زوجها بذلك.
Comments
Post a Comment