நபி ஸல் அவர்களை இறந்ததாகக் கண்டால்....
நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷
மாதம் : ------ 3
தொடர் : ------ 15
நபி ஸல் அவர்களை
இறந்ததாகக் கண்டால்....:
==========================
கனவில் நபி (ஸல்) அவர்களை இறந்த நிலையில் கண்டால் கனவு கண்டவரின் குடும்பத்தில் உள்ள கண்ணியமான ஒரு மனிதர் மரணிப்பார்;
கனவில் நபி (ஸல்) அவர்களின் ஜனாஸாவைப் பார்த்தால் கனவு கண்டவர் இருக்கும் பகுதியில் மிகப்பெரிய பேரழிவுகள் ஏற்படும்.
நபி (ஸல்) அவர்களின் ஜனாஸாவை கபுர் - அடக்கவிடம் வரை எடுத்துச் செல்லப்படுவது போன்று பார்த்தால், கனவை கண்டவர் இஸ்லாத்திற்கு எதிரான (பித்அத்) வழிகளில் சாய்ந்திடுவார்.
நபி (ஸல்) அவர்களை ஸியாரத் செய்வது போன்று கனவு கண்டால், அதிகமான செல்வங்களைப் பெறுவார்.
நபி (ஸல்) அவர்களின் சந்ததியில் இல்லாத ஒருவரை நபி (ஸல்) அவர்களின் மகன் என்பது போல் கனவு கண்டால், அவர் இறைநம்பிக்கையில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறார் என்று பொருள்.
ஆயுதம் ஏந்திய நபி (ஸல்) அவர்கள் :
=================================
நபி (ஸல்) அவர்கள் ஆயுதம் ஏந்திய நிலையில் ஓர் படையில் இருக்கிறார்கள்; சிலர் அவர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள்; சிலர் ஆச்சரியப்படுகிறார்கள் என்பது போன்று எவரேனும் கனவு கண்டால், அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் ஏதேனும் யுத்த களங்களை சந்திக்க நேரிடும்; அதில் அவர்களுக்கு தோல்வி ஏற்படும்.
குறைந்த வீரர்கள் உள்ள ஒரு படையில் நபி (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள்; படையினரிடம் சரியான ஆயுதங்களும் இல்லை; மேலும் படையினர் அனைவரும் பணிவாகவும் அல்லாஹ்வின் மீது அச்சத்தோடும் இருப்பது போன்று எவரேனும் கனவு கண்டால், அந்தப் பகுதியில் நடைபெறவிருக்கும் யுத்தத்தின்போது முஸ்லிம்கள் உதவி செய்யப்படுவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்;
وَلَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ بِبَدْرٍۢ وَأَنتُمْ أَذِلَّةٌ
நீங்கள் குறைந்த எண்ணிக்கையாக இருந்தும் அல்லாஹ் பத்ர் களத்தில் உங்களுக்கு உதவினான் 3:123.
பத்ரு போர்க்களத்தில் முஸ்லிம்கள் குறைவாகவும் ஆயுதம் மற்றும் சிப்பாய்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்தபோது அல்லாஹ் உதவி செய்தான் என்பது நினைவுகூரத் தக்கது.
Comments
Post a Comment