நபிகள் நாயகத்தின் ரத்தத்தில் உங்கள் ரத்தம் கலந்தால்....

நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

மாதம்  : ------ 3

தொடர் : ------ 16

நபிகள் நாயகத்தின் ரத்தத்தில் 
உங்கள் ரத்தம் கலந்தால்....
=============================

நபி (ஸல்) அவர்கள் தன் தாடியையும், தன் தலை முடியையும் சீவுவதுப் போன்று எவரேனும் கனவு கண்டால், அவருடைய கவலைகள், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

நபி (ஸல்) அவர்களை மஸ்ஜிதுந் நபவியிலோ அல்லது மக்கா ஹரமிலோ அல்லது அதுபோன்ற இடங்களிலோ இருப்பது போன்று எவரேனும் கனவு கண்டால், அவர் அரசியல், பொருளாதாரம், அறிவு போன்ற ஏதேனும் ஒரு  துறையில் வலிமையையும் கண்ணியத்தையும் பெறுவார்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நடப்பது போன்றோ அல்லது அண்ணலாரை முஸாஃபஹா -  கைகளைப் பிடிப்பது போன்றோ கனவு கண்டால் அவர் சுன்னத் - நபி வழியில் நிலைத்திருக்கிறார் என்று பொருள்.

தன் ரத்தத்தில் நபி (ஸல்) அவர்களின் ரத்தம் கலப்பது போன்று எவரேனும் கனவு கண்டால், அவர் (ஆலிம்) அறிஞர்களை திருமணம் செய்து கொள்வார்; அல்லது கண்ணியமான ஒருவரை மணந்து கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவது போன்று எவரேனும் கனவு கண்டால், அவர் நல்லதை ஏவி தீமையை தடுக்கும் தஃவா - அழைப்புப் பணியில் ஈடுபடுவார்.

நபி (ஸல்) அவர்கள் தனக்கு ஏதேனும் கொடுப்பது போன்று ஒருவர் கனவு கண்டால், அவர் ஞானத்தையும் உண்மை மார்க்கத்தையும் பின்பற்றி பெருவாழ்வு வாழ்வார்.

நபிகள் நாயகம் அவர்கள் வழங்குவதை ஏற்க மறுப்பது போன்று கனவு கண்டால் அவர் பித்அத் -  இஸ்லாம் மார்க்கத்திற்கு விரோதமானதை செய்யத் தொடங்குவார்.

எவரேனும் நபிமார்களில் ஒருவரை  உயிருடனோ அல்லது அவர்களை ஸியாரத் செய்வது போன்றோ  கனவில் கண்டால் அவருக்கு மூன்று நிலைகள் ஏற்படும். 

1. கனவு கண்டவர் இறையச்சம் உடையவராக இருந்தால் மேலும் இறையச்சம் பெருகும்; கனவு கண்டவர் பாவியாக இருந்தால் அவர் தவ்பா -  அல்லாஹ்விடமிருந்து பாவ மன்னிப்புப் பெறுவார். 

2. அவருக்கு கனவில் கண்ட நபியை ஸியாரத் செய்யும் பாக்கியம் கிடைக்கும்; அல்லது பல்வேறு நன்மைகள் அவருக்கு உண்டாகும்.

3. அவர் சொர்க்கவாசி என்றும் வெற்றி பெற்றவர்களில் ஒருவர் என்றும் சொல்லலாம்.

.
.
.
.
.
.
.
தொடரும்.........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்