நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டவரை விட

நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

மாதம்  : ------ 3

தொடர் : ------ 17

நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டவரை விட வேறு எவரும் சிறந்தவர்கள் இருக்கிறார்களா? 
=============================

நபி (ஸல்) அவர்களை கனவில் காண்பது மிகப்பெரும் செய்தி; அல்லாஹ் அவருக்கு செய்த பெரும் உதவியும் கண்ணியமும் ஆகும்.  

நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டவருக்கு மட்டும் அது பெரும் பாக்கியம் அல்ல! அவருடைய குடும்பத்தினருக்கும்,அவர் வாழ்கிற பகுதியில் உள்ள முஸ்லிம் பொதுமக்கள் அனைவருக்கும் கூட பாக்கியமே!

நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டவர் தொடர்ந்து நல்ல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார் என்பதை இந்த கனவு சுட்டிக் காட்டுகின்றது. 

மேலும் அவருடைய உள்ளத்தில் ஈமான் நிறைந்திருக்கிறது எனவும் நபி (ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார் எனவும் அதனால் தான் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் கனவில் காட்டி இருக்கின்றான் எனவும் தெரிய வருகிறது.

அந்தஸ்தில், மரியாதையில், கண்ணியத்தில் உயர்ந்தவராக இருக்கும் ஒருவருடைய கனவில்தான் நபி (ஸல்) அவர்கள் தோன்றுவார்கள் என்பதில்லை.

கனவு கண்டவரை ஏதேனும் ஒரு விஷயத்தில் உறுதிப்படுத்தவும், அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தவும், அவரை எச்சரிக்கை செய்யவும், அவருடைய மனக் கவலைகளில் இருந்து அவரை விடுவிக்கவும் ஏற்பட்ட கனவுகளாக கூட அது இருக்கும்.

சில சமயம் சிலருடைய கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றாமல் அல்லாஹ் தடுத்து கூட இருக்கலாம்.

சில சமயம் நபி (ஸல்) அவர்களை கனவில் பார்க்காதவர்கள் நபி (ஸல்) அவர்களை கனவில் பார்த்தவர்களை விடவும் சிறந்தவர்களாக இருப்பர். 

இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் நிறைந்த கூலிகளையும், நன்மைகளையும் சேர்த்துத் தருவான். 

மேலும் இப்படிப்பட்டவருக்கு அல்லாஹ் தன் அருளால் ஏமாற்றம், பெருமை மற்றும் இது போன்ற எந்தத் தீமையையும் இந்த உலகில் அவருக்கு  வழங்க மாட்டான்.

.

.
.
.
.
.
தொடரும்.........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்