அல்லாஹ் நாடியவரின் கனவில் நபிகள் நாயகம்....

நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

மாதம்  : ------ 3

தொடர் : ------ 18

அல்லாஹ் நாடியவரின் 
கனவில் நபிகள் நாயகம்....
==========================

நபி (ஸல்) அவர்களை கனவில் காணும் பாக்கியத்தை அல்லாஹ், தான் நாடியவருக்கு வழங்குவான்; தான் நாடியவருக்கு வழங்காமல் தடுத்து விடுவான். அதை அல்லாஹ் கூறுகிறான்;

ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ

(இந்த இறைத்தூதர் உங்களுடைய கனவில் கிடைக்கப்பெற்றது) அல்லாஹ் செய்த  பேரருளாகும்; தான் விரும்பியோருக்கு அதை அவன் தருகிறான்; அல்லாஹ் மகத்தான தயாளகுணம் உடையவன் ஆவான். 62:4

நபி (ஸல்) அவர்கள் இந்த உலகத்தில் வாழும் போது சிலர் அவர்களை ஈமான் - நம்பவில்லை புறக்கணித்து விட்டார்கள்; அவரை பின்பற்றவும் அவருக்கு கட்டுப்பட்டு நடக்கவும் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அபூலஹப், அபூ ஜஹல் போன்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது உள்ள விரோதத்தின் காரணமாகவும், கோபத்தின் காரணமாகவும், புறக்கணித்தே வாழ்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களை நபியாகவே அவர்கள் பார்க்கவில்லை; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்கிற கோணத்திலேயே அவர்கள் பார்த்தார்கள்.

மேலும் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பார்த்த பிறகும், நபிகளாரின் அற்புதங்களை கண்கூடாகக் கண்ட பிறகும் அவரின் சிறப்பு தன்மைகளை நோக்கிய பிறகும் அவர்கள் நபிகளாரை  ஏற்றுக் கொள்ளாமலே மரணித்துப் போனார்கள். இதை அல்லாஹ் கூறுகிறான்; 

يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا ۚ وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ

அதைக் கொண்டு அதிகமானவர்களை அவன் வழி தவறச் செய்கிறான்; அதைக் கொண்டு அதிகமானவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்; (ஆனால்,) வரம்பு மீறியவர்களை தவிர வேறு எவரையும் அதைக் கொண்டு அவன் வழிதவறச் செய்வதில்லை . 2:26

நபி (ஸல்) அவர்களை யார் வாழும் போதோ அல்லது கனவிலோ பார்க்கவில்லையோ அவர் அவரைக் காண ஆசை கொள்ள வேண்டும்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போரில் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள். அவர்களில் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும்கூடத் தியாகம் செய்ய விரும்புவார். 

நூல்: முஸ்லிம் 5447.

.
.
.
.
.
.
.
தொடரும்.........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்