நபி (ஸல்) அவர்களை நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?
நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : ------ 3
தொடர் : ----- 20
நபி (ஸல்) அவர்களை
நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?
=============================
இந்த உலகத்தில் அல்லாஹ்வின் செயல் இல்லாமல் எந்த ஒன்றும் அசையாது; அல்லாஹ் எதை செய்ய வேண்டும் என தீர்மானித்து இருக்கின்றானோ அது மட்டுமே இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.
إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
நிச்சயமாக (உலகத்தில் உள்ள) ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட அளவோடு தான் நாம் படைத்திருக்கின்றோம். 54:49
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; உனக்கு என்ன கிடைத்ததோ அதை உன்னிடம் இருந்து வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது; உனக்கு என்ன கிடைக்கவில்லையோ அதை வேறு யாரும் உனக்கு கொடுத்து விட முடியாது.
நூல்: அபூதாவூத், முஸ்னது அஹ்மத்
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணத்தை இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்; அந்தக் காரணங்களின் அடிப்படையிலே தான் செயல்கள் அனைத்தும் நிகழ்கின்றது;
அந்த செயல்களின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதரின் வரலாறும் இறைவனிடம் பதிவாகி வருகிறது;
மேலும் தம் இறைவன் மீது உண்மையாக நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கை அவரவர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மர்யம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா?
பேரீத்தம் மரத்தின் அடிப்பாகத்தை நீங்கள் அசைத்தால் கனிந்த பேரீத்தம் பழம் கீழே விழும்;
அந்தப் பேரித்த மரத்தை வேறு ஒருவர் உழுக்க வேண்டும் என்று நாட்டம் இருந்தால் அவரும் உழுக்குவார் ;
(அதனால் ) உழுக்குதல் அவருடைய செயல்; ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கின்றது; என்று ஒரு கவிஞர் கூறுகிறார்.
அதாவது உலகில் நடைபெறும் அனைத்து அசைவுகளும் காரண காரியங்கள் உடனே நடைபெறுகின்றது.
உங்களுடைய கனவில் உங்களுடைய நபி வர வேண்டுமென நீங்கள் விரும்பினால், அதற்காக நீங்களும் சில செயல்களைச் செய்ய வேண்டும்.
1. ஈமான் - இறை நம்பிக்கை உறுதியாக இருத்தல் :
===========================
ஒரு மனிதரிடம் ஈமான் - இறை நம்பிக்கை உறுதியாகவும், அதிகமாகவும் இருக்கும் போது அவருடைய அந்தஸ்து அல்லாஹ்விடத்தில் உயர்ந்து காணப்படும். மேலும் அவருக்கு அல்லாஹ் தன் புறத்திலிருந்து தாராளமாக வளங்களை வழங்குவான்; மேலும் சில வெற்றிகளையும் தருவான்.
وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰٓ ءَامَنُواْ وَٱتَّقَوْاْ لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَٰتٍۢ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ
அவ்வூர்வாசிகள் இறை நம்பிக்கை கொண்டு இறையச்சத்துடன் வாழ்ந்தால் அவர்களுக்கு வானிலிருந்தும், பூமியிலிருந்தும் வளங்களை நாம் திறந்து விட்டிருப்போம்... 7 : 96
என்று அல்லாஹ் சொல்வது போல் இறை நம்பிக்கையில் உறுதியாக இருந்தால், இறைவன் தன் புறத்திலிருந்து தாராளமாக ஒவ்வொருவருக்கும் வளங்களை வாரி வழங்குவான்.
இறை நம்பிக்கையாளர்களுக்கு அளவின்றி உலக வாழ்வாதாரங்கள் வழங்கப்படும்.
அந்த வகையில் உள்ள ஒரு பாக்கியம் தான் நபி (ஸல்) அவர்களை கனவில் காண்பது. இது மிகப்பெரும் பேரருள்; மிகப்பெரும் வெற்றி!
ஒரு கவிஞர் கூறுகிறார்;
அறிஞர்களின்
இதயத்திற்கு
கண்கள் உண்டு!
நாம் பார்க்காததை
அவர்கள் பார்க்கிறார்கள்!
இறகுகளும்
இறக்கைகளும் இல்லாமல்
அவர்களின் இதயம் பறக்கின்றது!
அகிலத்தைப் படைத்தாலும்
அல்லாஹ்வின் சிம்மாசனத்திற்கு
பறந்துச் செல்கின்றன!
.
.
.
.
.
.
. தொடரும்........
Comments
Post a Comment