பெருமைக்கு அல்ல! பதிவுக்கு..!!
வரலாற்று ஒளியில் பெரிய வடகரை
=================================
பெருமைக்கு அல்ல! பாதுகாப்புக்காக
==================================
எனது சொந்த ஊர் குறித்த வரலாற்று நூல் இது.!
இந்நூல் வெளிவந்து இரண்டு மாதங்கள் ஆகின்றது.
இந்த நூல் குறித்து
தமிழ் ஹிந்து
தினத்தந்தி
தினகரன்
தினமலர்
பெரம்பலூர் தின செய்தி
துக்ளக்
பேசும் புதிய சக்தி
மக்கள் உரிமை
குர்ஆனின் குரல்
சமூக இதய குரல்
போன்ற பல பத்திரிகைகளில் இந்த நூலின் விமர்சனம் மற்றும் வெளியீட்டு விழா, நூல் அறிமுக விழா ஆகியன வெளியானது.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அறிஞர்கள், எழுத்தாளர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூலகங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், நிஸ்வான்கள், சில அரசியல் தலைவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்கள் , எங்கள் ஊரில் உள்ள அனைத்து மத முக்கியஸ்தர்கள், எனது ஆசிரியர்கள், சென்னையில் உள்ள சில லைப்ரரிகள் என பலருக்கும் இந்த நூலினை வழங்கப்பட்டது.
இதன் வழியாக எங்களுடைய ஊரின் வரலாறு பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் இருக்கின்றது. இவை பெருமைக்காக அல்ல! காலத்தின் சூழல் கருதி பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள முன்னெடுப்பு.
இந்த நூல் வெளிவர காரணமாக இருந்த பெரிய வடகரை ஜமாஅத்தார்கள், வெளிநாடுகளில் வாழும் எங்கள் ஊர் பிரதிநிதிகள், மற்றும் எழுத்தாளர்கள், பிரமுகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் உரித்தாக்குகிறேன்.
.
.
.
.
Comments
Post a Comment