76 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

76 வது குடியரசு தின 
நல்வாழ்த்துக்கள்.
====================15 ஆகஸ்ட் 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது. 1950 ஜனவரி 26 அன்று குடியரசு அமைந்தது. 

இந்திய நாட்டிற்காக சொந்தமாக சட்டங்களை வகுத்துக் கொண்டு வாழத் தொடங்கிய இந்நாள் ஆகச்சிறந்த நாள்.

சில அறிஞர்கள், "சுதந்திர தினத்தை விட குடியரசு தினம் ஆக உயர்ந்தது" என கூறுகிறார்கள்.

மன்னராட்சி முறை மிக மோசமானது; மக்களாட்சி முறை தான் சிறந்தது என்று நம்மிடம் நம் முன்னோர்கள் சொன்னார்கள். 

அதனால் தான் நாம் மன்னராட்சி முறையில் இருந்து மக்களாட்சிக்கு மாறினோம்.

மராட்டிய சிவாஜி அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் நல்லாட்சி வழங்கி இருக்கிறார்கள் .

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிட்லர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு போன்ற தலைவர்கள் லட்சக்கணக்கான மனிதர்களை கொன்று குவித்து இருக்கிறார்கள். 

எனவே மக்களாட்சி சிறந்தது என்றோ மன்னராட்சி மோசமானது என்றோ இன்றைய நாளில் நீங்கள் முடிவுக்கு வந்து விடாதீர்கள். 

நமக்கு யார் நல்லாட்சி செய்கிறாரோ, நல்லாட்சியை தருகிறாரோ அவர்தான் நல்லவர்; அந்த ஆட்சி முறை தான் நல்லது என்கிற முடிவிற்கு இந்த நல்ல நாளில் நாம் வருவோம்.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்