ஈஸா (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கனவில் பார்த்தார்களா?

நபி (ஸல்) அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் 
===========================

மாதம் :  4 

தொடர் எண்  : ............25

2. ஈஸா (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கனவில் பார்த்தார்களா?
==================================

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது;
"இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஈஸா (அலை) அவர்களைக் குறித்து "அவர் சிவப்பு நிறமுடையவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. 

மாறாக (இப்படித்தான்) கூறினார்கள்; நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டி ருந்தேன். அப்போது மா நிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒரு மனிதர் தமது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டி ருக்க... அல்லது வழிந்து கொண்டிருக்க... அங்கே இருந்தார். 

நான், "இவர் யார்?'' என்று கேட் டேன். "மர்யமின் குமாரர்'' என்று பதிலளித்தார்கள். 

நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனான, சுருட்டைத் தலை முடியுள்ள, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. 

நான், "யார் இது?'' என்று கேட்டேன், "தஜ்ஜால்'' என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் "இப்னு கத்தன்" தான்.  

நூல்: புகாரீ: 3441

.
.
.
.
.
தொடரும்.......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்