நபி (ஸல்) அவர்கள் நேற்று இரவு உமக்கு அதிகமாக கொடுத்திருந்தால் நானும் கொடுத்திருப்பேன்:

நபி ஸல் அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் 
==========================

மாதம் : 4 

தொடர்.........30

7. நபி (ஸல்) அவர்கள் நேற்று இரவு உமக்கு அதிகமாக கொடுத்திருந்தால் நானும் கொடுத்திருப்பேன்:
==================================

அலீ (ரலி) அவர்கள் கூறுவதாவது; நான் சென்ற இரவு ஒரு கனவு கண்டேன்; அந்த கனவில் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகையை தொழு வைத்தார்கள். 

நான் அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதேன்; தொழுகை முடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராபின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். 

அப்பொழுது ஒரு பெண் கனிந்த ஈரமான பேரித்தம் பழத்தை ஒரு கூடையில் வைத்து கொண்டு வந்தார். 

அதை நபி (ஸல்) அவர்களுக்கு எதிரில் வைத்தார்; அதிலிருந்து ஒரு பழத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். 

என்னையும் எடுத்துக் கொள்ளச் சொல்லி கூறினார்கள்; நான் ஒரு பழத்தை எடுத்துக் கொள்ள கைகளை நீட்டினேன்; அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் தம் கைகளில் எடுத்து வைத்திருந்த ஒரு பழத்தை எனக்கு ஊட்டினார்கள்; 

"அலியே! இன்னொரு பழம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். 

நான், "அப்படியே ஆகட்டும் அல்லாஹ்வின் தூதரே!" எனச் சொல்லி அதை எடுப்பதற்காக எனது கையை நீட்டினேன்; 

நபி (ஸல்) அவர்கள் தம் கைகளில் எடுத்து வைத்திருந்த மற்றொரு கனியை எனது வாயில் வைத்தார்கள்;  

பின்னர் (ஃபஜ்ருடைய பாங்கொலியை கேட்டு) நான் எழுந்தேன். என் இதயம் நபி (ஸல்) அவர்களின் நினைவால் நிரம்பி இருந்தது; எனது வாயில் கனிந்த பேரித்தம் பழத்தின்  இனிப்புச் சுவை ஒட்டி இருந்தது.

நான் உளூ செய்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றேன்; உமர் (ரலி) அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதேன்; அவர்கள் தொழுகைக்குப் பிறகு மிஹ்ராபில் சாய்ந்து அமர்ந்தார்கள்; 

நான் அவர்களிடம் எனது கனவு குறித்து பேச வேண்டும் என விரும்பினேன்; நான் பேச தயாரான போது ஒரு பெண் பள்ளிவாசலின் வாசலில் வந்து நின்றார்; 

அவரிடம் கனிந்த ஈரமான பேரித்தம் பழக் கூடை ஒன்று இருந்தது; அதை அவர் உமர் (ரலி) அவர்களுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தார்; 

உமர் (ரலி) அவர்கள் ஒரு பேரித்தம் பழத்தை எடுத்துக் கொண்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "அலியே! இதிலிருந்து எடுத்து சாப்பிடுங்கள்" என்று கூறினார்கள். 

நான், "அப்படியே ஆகட்டும்" எனக் கூறி ஒரு பழத்தை எடுத்தேன்; 

உமர் (ரலி) அவர்கள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ஒரு பழத்தை எனது வாயில் ஊட்டினார்கள்; மற்றொன்றை எடுத்தார்கள்; "அலியே! இன்னொரு பழத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். 

நான், "அப்படியே ஆகட்டும்" என சொல்லிவிட்டு எடுக்கச் சென்றேன்; மற்றொரு பழத்தையும் எனக்கு ஊட்டினார்கள். 

பின்னர் உமர் (ரலி) அவர்களுக்கு வலது புறத்திலும், இடது புறத்திலும் இருந்த நபித்தோழர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. 

நான் அதிலிருந்து இன்னொரு பழத்தை எடுத்துச் சாப்பிட விரும்பி கேட்டேன்; அப்பொழுது உமர் (ரலி) அவர்கள், "சகோதரரே! கடந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒன்றை அதிகமாகக் கொடுத்திருந்தால் நானும் ஒன்றை அதிகமாக கொடுத்திருப்பேன்" என்று கூறினார்கள்.

நான் ஆச்சரியப்பட்டேன்; நான் கடந்த இரவில் பார்த்த கனவை அல்லாஹ் அவர்களுக்கும் காட்டி கொடுத்து இருக்கிறான்; நான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்; 

அப்பொழுது உமர் (ரலி) அவர்கள், "அலியே! இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பேரொளியின் வெளிச்சத்தில் அனைத்தையும் பார்க்கிறார்கள்"என்று கூறினார்கள்.

இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் உண்மையை சொன்னீர்கள்; நான் இவ்வாறு தான் சென்ற இரவு கனவு கண்டேன்; நபி (ஸல்) அவர்களின் கரங்களால் எனக்கு ஊட்டப்பட்ட கனியில் இருந்த அதே சுவையை உங்களது கரங்களால் எனக்கு ஊட்டப்பட்ட கனியிலும் நான் சுவைத்தேன்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். 

நூல் : அர் ரியாழுந் நழ்ரா ஃபீ மனாகிபில் அஷ்ரா

.
.
.
.
.
.
தொடரும்.........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்