பெருவாழ்வு உண்டு

நபி ஸல் அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் 
==========================

மாதம் : 4

தொடர்......31

8. பெருவாழ்வு உண்டு :
========================

ஆஸிம் பின் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறுவதாவது; பிலால் பின் அல் ஹாரிஸா அல் முஸ்னீ (ரலி) அவர்கள் ஒரு பஞ்சமான காலத்தில் இருந்த போது அவரது குடும்பத்தினர்  தாம் உண்ணுவதற்காக ஒரு நாட்டை அறுக்கும் படி பிலால் பின் அல் ஹாரிஸா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

அவரிடம் இருந்த ஆடு மிகவும் மெலிந்து காணப்பட்டது; அதில் இறைச்சி எதுவும் இல்லை; அவர்கள் வலியுறுத்தி கூறியதன் காரணமாக அவர் அந்த ஆட்டை அறுத்தார்; அதன் எலும்புகள் சிகப்பு நிறத்தில் காணப்பட்டது.

பிலால் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் தம் குடும்பத்தினரில் இருந்த ஒருவரை பார்த்து, 'முஹம்மதே! நேற்று இரவு நான் நபி (ஸல்) அவர்களை கனவில் பார்த்தேன்; அப்பொழுது அவர்கள், 

"பெரும் மழை பொழிய இருக்கின்றது; அதன் காரணமாக பெரும் வாழ்வு உங்களுக்கு காத்திருக்கின்றது; நீங்கள் இதை சுபச் செய்தியாகப் பெறுங்கள்; நீர் உமர் (ரலி) அவர்களுக்கு எனது ஸலாத்தைச் சொல்லுங்கள்!

மேலும் அவரிடம்  "உமரே! நான் சென்று வருகிறேன்; உங்களோடு உள்ள எனது உடன்படிக்கை மிகவும் இறுக்கமாக இருக்கின்றது" என்று சொல்லுங்கள் எனக் கூறினார்கள். 

பிலால் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து அங்கிருந்த சிறுவரிடம் தாம் வந்திருப்பதாக சொல்லி அனுப்பினார்கள்; 

சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள்; அவர்களிடம் நேற்று இரவு கண்ட கனவை விவரமாக எடுத்துச் சொன்னார்கள். 

அதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் திடுக்க முற்றார்கள்! பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்று மிம்பரின் மீது ஏறி நின்ற நிலையில் மக்களுக்கு சொன்னார்கள்.

"உங்களை இஸ்லாத்தின் பால் வழி நடத்திய இறைவன் மீது ஆணையாக! உங்களிடம் நான் கேட்கிறேன்; என்னிடம் ஏதேனும் வெறுக்கத்தக்க செயல்களையோ, சொல்லையோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? "

மக்கள் :  அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு போதும் அவ்வாறு  இல்லை.

பின்னர் பிலால் பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறிய கனவை விபரமாக மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள்; ஒரு சிலரைத் தவிர மக்கள் அனைவரும் அறிவாளிகள் அதைப் புரிந்து கொண்டார்கள்.

மக்கள்: "மழைக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதை விட்டும் ஷைத்தான் (உமரே) உம்மை தாமதப்படுத்தி விட்டான்; எனவே உடனே நமக்காக நீங்கள் அல்லாஹ்விடம் மழையைக் கேளுங்கள்" என்று கூறினார்கள்.

அப்பொழுதே மக்கள் அனைவரையும் பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டது; மக்கள் பெருந்திரளாக கூடிய பிறகு சுருக்கமான சொற்பொழிவு நிகழ்த்தி, சுருக்கமாக இரண்டு ரக்அத்து மழை தொழுகையை தொழ வைத்தார்கள்.

"இறைவா! எங்களுக்கு உதவிகளை செய்வோர் இயலாதவர்கள்; பலவீனமானவர்கள்; எங்களுக்குத் தேவையான உதவியையும் பலத்தையும் எங்களால் உருவாக்கிக் கொள்ள முடியாது; எங்களால் எதையும் செய்ய இயலாது;

இறைவா! உன்னைத் தவிர சக்தியாளனும் வலிமை மிக்கவனும் வேறு யாரும் இல்லை; 

இறைவா! நல்ல மழையை எங்களுக்கு வழங்குவாயாக! அதன் காரணமாக மக்களையும் ஊரையும்  உயிர் பெறச் செய்வாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள்.

பின்னர் மக்கள் மழையில் நனைந்தபடி தம் இல்லங்களுக்குச் சென்றார்கள்.

நூல்: அல் பிதாயா வந் நிஹாயா, தாரீஹுல் உமம் வல் முலூக் .
.
.
.
.
.

தொடரும்.........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்