இப்னு மஸ்வூதே! என்னிடம் வாருங்கள்

நபி ஸல் அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் 
==========================
மாதம். : 4 

தொடர் ........33

10. இப்னு மஸ்வூதே! 
என்னிடம் வாருங்கள்:
========================

ஸலமத் பின் தமாம் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களை சந்தித்தார். அவர், "உங்களின் இந்த நிலை மோசமானது அல்ல! நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவில் நபி (ஸல்) அவர்கள் உயரமான இடத்தில் அமர்ந்திருப்பது போலவும், தாங்கள் அவர்களுக்குக் கீழ் அமர்ந்திருப்பது போலவும் கனவு கண்டேன்; 

அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் உம்மிடம், "இப்னு மஸ்வூதே! என்னிடம் வந்து விடுங்கள்; எனக்கு பிறகு நீங்கள் மிகவும் மெலிந்து விட்டீர்கள்" என்று கூறினார்கள்.

இந்தக் கனவைக் கேட்டதும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அந்த மனிதரிடம், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்வாறு நீங்கள் கனவு கண்டீர்களா?" என்று கேட்டார்கள். 

அதற்கு அவர், "ஆம்! நான் கனவு கண்டேன்; உண்மைதான்" என்று கூறினார் .

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், "என் மீது ஜனாஸா தொழுகை நடத்தப்படும் வரை நீங்கள் மதீனாவிற்கு வெளியே தான் இருக்க வேண்டும் என நான் உறுதியளிக்கிறேன்" எனக் கூறினார்கள். 

அவ்வாறே அவர், இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை சில நாட்கள் மதீனாவிற்கு வெளியே இருந்தார்; பின்னர் இப்னு மஸவூத் (ரலி) அவர்கள் மரணித்து விட்டார் என்கிற தகவலை அறிந்து மதீனாவிற்குள் வந்து இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டார்கள். 

நூல்: கிதாபுல் மனாமாத்

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்