ஆலிமிற்காக அரசரிடம் பேசிய அண்ணல் நபி ஸல் அவர்கள்
நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

மாதம் : ------ 4
தொடர் : ------ 34
11. ஆலிமிற்காக அரசரிடம்
பேசிய அண்ணல் நபி ஸல் அவர்கள் :
==================================
ஈரான், தஜிகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், சமர்கந்து, புகாரி, பாகிஸ்தான் போன்ற நிலப்பரப்புகளோடு இன்றைய ரஷ்யாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி கி.பி. 819 முதல் 999 வரை சாமானியா எனும் இஸ்லாமிய வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களில் முதலாமவர் இஸ்மாயில் சாமானி (ரஹ்) ஆவார்.
ஒருநாள் நபிமார்களின் வாரிசான ஆலிம் அபூ அப்துல்லாஹ் முஹம்மது பின் நஸ்ரு (ரஹ்) அவர்கள் அரசர் இஸ்மாயில் சாமானி (ரஹ்) அவர்களிடம் இரவு இஷா தொழுகைக்கு பிறகு வந்தார்கள். அரசர் அவர்கள் எழுந்துச் சென்று அந்த ஆலிமை முகமலர்ச்சியுடன் வர
வேற்று கண்ணியப்படுத்தி, இரவு உணவளித்து உபசரித்தார்கள்.
ஆலிம் அவர்கள் தம் கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரி தரும்படி கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொண்டார்கள்.
பின்னர் ஆலிம் அவர்கள் அரசரிடம் இருந்து விடை பெற்று சென்ற பொழுது அரசர் சாமானி அவர்கள் ஏழு அடி தூரம் வரை அந்த ஆலிமுடன் வெளியே வந்து அவரை வழி அனுப்பி வைத்தார்கள்.
பின்னர் அரசர் தம் அலுவல்களை முடித்துக் கொண்டு இரவு படுக்கைக்குச் சென்றார்கள்.
அந்த இரவில் அரசர் இஸ்மாயில் சாமானி (ரஹ்) அவர்களின் கனவில் நபி (ஸல்) அவர்கள் தோன்றி, "இஸ்மாயிலே! எனது வாரிசான ஆலிமுக்கு நீங்கள் மரியாதை செய்ததற்காக உங்களை இரு உலகிலும் கௌரவப்படுத்த வேண்டுமென்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து இருக்கின்றேன்.
மேலும் நீங்கள் அந்த ஆலிமுடன் ஏழு அடி தூரம்வரை சென்று அவரை வழியனுப்பியதற்காக உங்கள் சந்ததியில் ஏழு நபர்கள் ஒருவர் பின் ஒருவராக அரசராக வேண்டுமென்றும் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன்" எனக் கூறி மறைந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துஆவை அல்லாஹ் ஏற்று கொண்டான் போலும். இஸ்மாயில் சாமானி (ரஹ்) அவர்களின் வாரிசுகளில் ஏழு பேர் ஒருவர் பின் ஒருவராக நீதியுடன் ஆட்சி செய்ததாக வரலாறு பதிவாகி இருக்கின்றது.
நூல் : ஹுல்யதுல் அவ்லியா
மக்கள் பிரச்சினைகளுக்காக ஆலிம்கள் முன் நின்றால் அந்த ஆலிமுக்கு பின்னால் அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் துஆவும் உடனிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
12. 23 அடி நீளமுள்ள தலைபா:
=============================
கலீஃபா அபூ ஜஃபருல் மன்சூர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
23 அடி நீளமுள்ள தலைப்பாகையை எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டி விட்டார்கள்.
மேலும், "இதை வளமையாக்கி கொள்! உன் சமூகத்தினரையும் வளமையாக செய்து வரும்படி சொல்" என்று நபி (ஸல்) அவர்கள் எனக்கு கனவில் கூறினார்கள்.
அதாவது நபி (ஸல்) அவர்களின் இறுதி 23 வருட வாழ்வை பின்பற்றி நடக்கும் படி சொல்லி இருக்கிறார்கள் என்பதாக விளக்கம் கூறப்படுகிறது.
.
.
.
.
.
தொடரும்.......
Comments
Post a Comment