மவ்லவீ, ஹாஃபிழ் அவ்ரங்கசீப் ரஹ் :

மவ்லவீ, ஹாஃபிழ் அவ்ரங்கசீப் ரஹ் :
==================================


முஹ்யித்தீன் அபுல் முளஃப்பர் முஹம்மது அவ்ரங்கசீப் (ரஹ்) எனும் இயற்பெயரை கொண்ட முஹம்மது அவ்ரங்கசீப் (ரஹ்) அவர்கள் 24/10/ 1618 ( 15 /11/1027 ) ஆம் வருடம் குஜராத் மாநிலம் Dahod தஹோத் எனும் ஊரில் மன்னர் ஷாஹ்ஜஹான்,  மும்தாஜ் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்கள்.

பல மார்க்க அறிஞர்களிடம் மார்க்க கல்வியை முறையாக கற்று ஆலிம், ஃபாஸிலாகவும் தேறிய பின்னர் ஹள்ரத் க்வாஜா முஹம்மது மஃஸும் ஸர்ஹிந்தி (ரஹ்) அவர்களிடம் பைஅத் பெற்றார்கள். 

எப்பொழுதும் இறை சிந்தனையில்  திளைத்த ஆபிதாகவும், துறவு வாழ்வை மேற்கொள்பவராகவும், குர்ஆன் பிரதியை எழுதி விற்பது மூலமும், தொப்பி தைத்து விற்பனை செய்வதின் மூலமும் வரும் வருமானத்தில்  எளிமையான வாழ்வை மேற்க்கொண்ட மன்னராகத் திகழ்ந்தார்கள்.

அவுரங்கசீப் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தம் மகனை சிறு வயதிலேயே  ஹாஃபிளாகினார்கள். தன் மகனுக்கு தன் தந்தை ஷாஹ் ஜஹான் அவர்களின் துஆ வேண்டி அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள்.

ஹாஃபிழான தன் பேரக் குழந்தையை கண்டு ஷாஹ் ஜஹான் (ரஹ்) அவர்கள் அழ ஆரம்பித்தார்கள். 

"ஏன் அழுகிறீர்?" எனக் கேட்டதற்கு ஷாஹ்ஜஹான் (ரஹ்) அவர்கள் "ஹாஃபிழின் பெற்றொருக்கு  மறுமை நாளில் சூரியனை விட பிரகாசமான கிரீடம் அணிவிக்கப்படும்.

உன் மகன் ஹாஃபிழ் என்பதால் உனக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். உன்னை ஹாஃபிழாக்கி இருந்தால் எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்திருக்குமே என நினைத்து அழுகிறேன்" என்றார்கள்.

இதனை கேட்டு கண் கலங்கிய ஹள்ரத் அவுரங்கசீப் அவர்கள் வெறும் ஆறே மாதத்தில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து ஹாஃபிளாகி வந்து தன் தந்தையிடம் உங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும்" என்று கூறினார்கள். 

இப்போது ஷாஹ்ஜஹான் அவர்கள் தம் மகனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.

49 வருடங்கள் அன்றைய அகன்ற இந்தியாவை அவுரங்கசீப் அவர்கள் ஆட்சி செய்தார்கள். அவருடைய ஆட்சியின் கீழ் 16 கோடி இந்தியர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 22.7 GTP growth இருந்தது. அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த நிலையை அடைந்ததில்லை. இன்று 2024 இல் 6.5 GTP growth உள்ளது.

ஒரு ஆலிம் இந்தியாவை எப்படி கட்டமைத்தார் என்பதற்கு அவுரங்கசீப் நிகழ்ச்சி ஓர் அழகிய முன்மாதிரி. ஆலிம்கள் அவுரங்கசீப் போல் எல்லாத் துறையிலும் திறன் பெற்றவர்களாகத் திகழ வேண்டும்.

ஒரு ஆலிம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மேற்கண்ட கட்டுரையின் தொடர்ச்சி கீழ்காணும் தளத்தில் இடம்பெற்றுள்ளது. 

ஆதாரப்பூர்வமான பல செய்திகள் இடம் பெற்றுள்ளது. விரும்புவோர் கீழுள்ள வெப்சைட்டில் பாருங்கள்.

https://bmkmanbayee.blogspot.com/p/blog-page_12.html

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்