தன்னையே நபி (ஸல்) அவர்கள் கனவில் பார்த்திருக்கிறார்களா?

நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
=========================

மாதம் : 4

தொடர் எண் : 24 

தன்னையே நபி (ஸல்) அவர்கள் கனவில் பார்த்திருக்கிறார்களா?
==================================

நபி (ஸல்) அவர்கள் தன்னையே இரண்டு முறை கனவில் பார்த்திருப்பதாக ஆதாரப்பூர்வமான இரண்டு நபி மொழிகள் பதிவாகி இருக்கின்றது. 

1. நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களைக் கனவில் பார்த்தார்களா?

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; 
நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் கூறினார்கள். 

"நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் செய்கிறவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். 

நான், "இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரயீலிடம்) கேட்டேன். ‘உமர் பின் கத்தாப் அவர்களுக்குரியது" என்று எனக்கு ஜிப்ரயீல் (அலை) அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். 

அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்” என்று கூறினார்கள். 

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள்.

நூல்: புகாரி : 3242

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்