மதுரை சிக்கந்தர் தர்ஹா :

மதுரை சிக்கந்தர் தர்ஹா :
=========================

இந்தியாவிற்குச் சமயம் பரப்ப வந்தவர்களை முதன்முதலில் கேரளப் பகுதி மன்னர்கள் வரவேற்றுள்ளனர். அவ்வாறு மதம் பரப்ப வந்தவர்கள்தான் 'ஜித்தா' என்ற துறைமுக நகரின் ஆளுநராக இருந்த சையது சிக்கந்தர் பாதுஷாவும், இப்ராஹீமும் இந்தியாவிற்கு வந்த இவர்களை சேர மன்னன் கொல்லத்தில் வரவேற்றுள்ளான். 

இதனிடையே பாண்டிய மன்னன் மதம் பரப்ப வந்தவர்களுடன் சண்டையிட்டான். அதிர்ஷ்டவசமாக இஸ்லாமியப் படை வென்றதால் மதுரை முகம்மதியர்கள் வசம் வந்துள்ளது. 

அதனால் சையது இப்ராஹிம் அவர்கள்  மதுரைக்கு சிக்கந்தர் பாதுஷாவை மன்னராக  ஆக்கிவிட்டு அவருடைய தளபதி அமீர் அப்பாஸுடன் ராமநாதபுரத்தில் உள்ள ஏர்வாடி என்ற ஊருக்குச் சென்று விட்டார்.

கி.பி.1182-ஆம் ஆண்டிலிருந்து சிக்கந்தர் பாதுஷா மதுரையை ஆட்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் வீரபாண்டியன் சிக்கந்தர் பாதுஷாவை எதிர்த்து போரிட்டு வென்றதை.

"வீரபாண்டியன் திருப்பதிக்குச் சென்று பெரும் படை திரட்டி வந்து தன் மகன் குலசேகரனுடன் சேர்ந்து சிக்கந்தருடன் போரிடுகிறார். சிக்கந்தர் பாதுஷா உதவி கேட்டு இப்ராஹீமிடம் ஏழு பேரை அனுப்புகிறார். 

பாண்டியர்கள் அவர்களை சிலைமான், சக்கிமங்கலம் கார்சேரியிலும் மற்றவர்களை மானாமதுரைக்கு முன்னும் கொல்கிறார்கள். சிக்கந்தர் சுல்தான் பாதுஷா திருப்பரங்குன்ற மலையில் தஞ்சமடைகிறார். 

வீரபாண்டியனும் குலசேகரப் பாண்டியனும் திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் இருப்பதை அறிந்து மலைக்கு வந்து சிக்கந்தரின் ஆலோசகரான தர்வேஸையும், அவரது படைத்தலைவரான பால மஸ்தானையும், மருத்துவரான ஹக்கீம் லுக்மானையும் கொல்கிறார்கள். 

(சிக்கந்தர் பாதுஷா அவர்கள் அரசராக இருக்கும் போது இம்மலைக்குக் குதிரையில்  அவ்வப்பொழுது வந்துச் சென்றிருக்கிறார்; அதனால் இப்பொழுது பாதுகாப்பு தேடி இந்த மலை மீது பதுங்கி இருந்தார்.) 

மன்னரின் குதிரைகள் மலைமீதுள்ள குளம் அருகில் கட்டப்பட்டிருந்தது. மலைமீது வந்த வீரபாண்டியனும் குலசேகர பாண்டியனும் இறைநேசரான சிக்கந்தரை கொன்றார்கள்"

மேற்கண்ட வரலாற்று கூற்றின் மூலம் சிக்கந்தர் பாதுஷா இறந்த அவரது நினைவிடத்தில் தான் தர்கா அமைந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. 

திருப்பரங்குன்றம் மலையின் கீழ் கந்தரும், இம்மலையின் மேல் சிக்கந்தரும் இருப்பதன் மூலம் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குச் சான்றாக இம்மலை விளங்குவதைக் காணமுடிகிறது. 

மேலும், அனைத்துச் சமூக மக்களையும் ஒன்றிணைக்கும் இடமாகத் தர்காக்கள் விளங்குகிறது என்பதே இந்து முஸ்லிம்களின் உண்மையான மன ஓட்டம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்