மதுரை சிக்கந்தர் ஷா தர்கா
மதுரை சிக்கந்தர் ஷா தர்கா
|
|
|
வரலாறுத் தொடர்ச்சி - 2-
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
திருப்பரங்குன்றத்தின் மலை உச்சியில் விஜயநகர மண்டலாதிபதி கம்பணரால் தோற்கடிக்கப்பட்ட மதுரை சுல்தானாக ஆட்சி செய்த மன்னர் சிக்கந்தர்ஷா (ரஹ்) அவர்களின் அடக்கத்தளம் இங்கு அமையப்பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் சுல்தான் சிக்கந்தர்ஷா அவர்களுக்கு அவரது மறைந்த நாளான ரஜப் பிறை 16 ஆம் நாள் அன்று (திருக்குர்ஆன் மஜ்லிஸ், மௌலிது மஜ்லிஸ் மற்றும்) கந்தூரி விழா ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
முஸ்லீம் ஆட்சியாளர்கள் கற்றறிந்த அறிஞர்களை பெரிதும் மதித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து ஆதரித்தனர். கல்வி கற்றவர்கள் முஸ்லிம் சமூகத்தினரால் உயர்வாக மதிக்கப்பட்டார்கள்.
முஸ்லிம்களின் ஆட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்களும் நூல் நிலையங்களும் நிறுவப்பட்டன. கவிஞர்களும், எழுத்தாளர்களும், தத்துவஞானிகளும் முஸ்லீம் ஆட்சியாளர்களின் அவையை அலங்கரித்தனர்.
முஸ்லீம்களின் ஆட்சிக்கு முன்பாக தமிழகத்தில் சாதிக் கொடுமைகள் வேரூன்றி காணப்பட்டது.
பிராமணர்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. அவர்கள் பிற சாதியினரை மிகவும் இழிவாகக் கருதினர். ஆனால் முஸ்லீம்களின் வருகைக்குப் பின்னர் சாதிக் கொடுமைகள் தணிந்தது.
மேலும் முஸ்லிம்களின் வருகையால் தமிழ் நாட்டில் நிலவி வந்த பல பாரம்பரியத் தடைகள் விலக்கப்பட்டன.
இதன் விளைவாக இதுவரை தமிழ் நாட்டினுள்ளே ஒதுங்கி வாழ்ந்து வந்த தமிழர்கள் வெளி உலகுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். ஆடைகள் அணிந்து தெருக்களில் நடமாடினர். இதனால் தமிழர்களின் வெளிஉலகத் தொடர்பு அதிகரித்தது.
இதை சொல்வது நான் இல்லை :
மதுரை பாரம்பரிய நடைப்பயணம்
திருப்பரங்குன்றம் என்ற பிரதியை வெளியிட்ட...
முனைவர்.வெ.வேதசலம்,முனைவர்.கு.சேதுராமன், தொல்லியல்,கலை, வரலாற்றாய்வாளர்கள், மதுரை.
ஆதாரம் :
CULTURAL HERITAGE OF TAMIL NADU UNIT-II
Medieval Period: Madurai Sultanate Vijiyanagar Period Education, Art and Architecture.
மதுரை சுல்தானியர்கள்
தர்காக்களில் அடக்கமாகி
இருப்போர் நல்லது செய்தவர்களே!
==================================
மதுரையை ஆட்சி செய்யத் தொடங்கிய ஜலாலுதீன் ஆசன் கான் 1335 முதல் சிக்கந்தர் ஷா மரணித்த 1378 வரை 43 ஆண்டுகள் முஸ்லிம்களின் ஆட்சி மதுரையில் நடைபெற்றுள்ளது.
1368 முதல் 1378 வரை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த சிக்கந்தர் ஷா அவர்களின் ஆட்சி மிகவும் நேர்மையாகவும், மக்களுக்கு பயன் மிக்கதாகவும் இருந்ததால்தான் இன்றும் இந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அவர் மரணித்த இடத்தில் தர்கா கட்டி வழிப்பட்டு வருகிறார்கள்.
பொதுவாகவே இந்துக்களிடத்தில் ஒரு மரபு உள்ளது. மக்களுக்காக உயிர் கொடுத்த தலைவர்களை, போர்ப்படைத் தளபதிகளை , ஊருக்காக உயிர் நீத்தவர்களை, போர்களின்போது மரணித்த சிப்பாய்களை 'அய்யனார் சாமி' என்று அழைப்பது மட்டுமின்றி கோவில் கட்டியும் கும்பிடுவார்கள் . அப்படி தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன.
அந்த வரிசையில் தான் சிக்கந்தர் ஷா அவர்களுக்கு அவர் பின்பற்றி வந்த இஸ்லாமிய மரபின் அடிப்படையில் தர்காவாக இந்து மக்களும் இஸ்லாமிய மக்களும் கட்டி இன்றும் தரிசித்து வருகிறார்கள்.
மதுரையை ஆட்சி செய்து வந்த மற்ற முஸ்லிம் மன்னர்களுக்கும், இந்து மன்னர்களுக்கும் அடக்க தளம் எங்கு இருக்கின்றது என்றே தெரியவில்லை.
ஆயிரம் வருடங்களைக் கடந்தும் அவரின் அடக்கத் தளம் இன்றும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது என்றால் அவரின் நற்செயல்களும், ஆட்சியும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதில் அடையாளம் அல்லவா?
தமிழ்நாட்டை பல வமிசத்து அரசர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். அவர்களின் அடக்க தளம் இங்குதான் இருக்கிறது என்று எத்தனை அரசர்களின் அடக்க தளம் அடையாளம் காட்ட முடியும்?
சிக்கந்தர் ஷா அவர்களின் அடக்கத்தளம் அடையாளமாக இருப்பது அவர் நல்லாட்சி செய்ததின் அடையாளம்தானே?
மதுரையை
ஆட்சி செய்த சுல்தான்கள்
=========================
சுல்தான் ஆட்சி காலம்
ஜலாலுதீன் ஆசன் கான் 1335-1339
அலாவுதீன் உதாஜி .. 1339
குதுப்துதீன் ஃபிரோஸ் .. 1339-1340
கியாத்துதீன் முகமது தம்கானி. .. 1340-1344
நசுரீதின் தம்கானி .. 1344-1356
ஷம்சுதீன் ஆதில் ஷா .. 1356-1358
ஃபக்ரூதின் முபாரக் ஷா .. 1358-1368
அலாவுதீன் சிகந்தர் ஷா .. 1368-1378
Comments
Post a Comment