பாகியாதுஸ் ஸாலிஹாதில் பட்டம் பெறும் மானவர்களுக்கு தலைப்பாகை துணிக்கு தனி வக்ஃபு
பாகியாதுஸ் ஸாலிஹாதில்
பட்டம் பெறும் மானவர்களுக்கு தலைப்பாகை துணிக்கு தனி வக்ஃபு :
=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~
மர்ஹூம் கிப்லா ஹலரத் நினைவு மலரிலிருந்து....
இந்தக் கட்டுரையை எழுதியவர் மௌலவி மு. அப்துல் பத்தாஹ் பாகவி அவர்கள்
வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரிக்கு P.A. முஹம்மது அபூபக்கர் கிப்லா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் பேராசிரியராகவும் நாஜராகவும் இருந்தபோது நிரந்தர பல வக்ஃபு நிறுவனங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு வக்ஃபு வித்தியாசமானது.
==================================
பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் பட்டம் பெரும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தலைப்பாகை அணிவிப்பது வழக்கம். அந்தத் தலைப்பாகை துணியை வாங்கி தருவதற்காக உத்தம பாளையத்தைச் சேர்ந்த செல்வந்த பெண்மணியான ஹஜ்ஜா சின்ன கத்தம்மாள் என்பவரிடம் பேசி அவர்கள் மூலம் சொத்து ஒன்றை தலைப்பாகைகாக எழுதி வைக்க கிப்லா ஹள்ரத் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
கிப்லா ஹள்ரத் அவர்கள் மதரஸா பாகியாதுஸ் ஸாலிஹாத்தில் நீண்ட காலம் பேராசிரியராக பணியாற்றியதால் அங்கு எந்தத் துறையில் வக்ஃபு இல்லை என்பதை அல்லது குறைவாக இருக்கிறது என்பதை நன்கு அறிந்து கொண்ட பிறகு தலைப்பாகைக்காக தனி ஒரு வக்ஃபை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க தவறக் கூடாது.
வக்ஃபு திருத்த சட்டக்காரர்களுக்கு இந்த நல்ல நோக்கங்கள் எல்லாம் எங்கே புரியப் போகிறது?
அன்புடன்
மவ்லவி பி. எம். கலீலுர் ரஹ்மான் மன்பயீ
19/4/2025
Comments
Post a Comment