கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே..

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே..

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ ۝

அல்லாஹ் கூறுகிறான்; நிச்சயமாக மனிதர்களுக்கென அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (மக்கா)விலுள்ளதுதான்; வளம் மிக்கதாக, அகிலத்தாருக்கு (நேர்) வழி காட்டுவதாக (அது அமைந்திருக்கிறது.)
3:96

பூமியில் மனிதன் தோன்றுவதற்கு முன்பே இறைவன், கஃபத்துல்லாஹ்வை படைத்து, அதை வானவர்களை தவாஃப் செய்ய வைத்திருந்தான். ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு வந்ததும் அதை தவாஃப் செய்தார்கள். 

அதாவது மனிதன் பூமிக்கு வருவதற்கு முன்பே இறை ஆலயமான கஃபா பூமியிலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களும் ஹவ்வா அலைஹிஸ் ஸலாம் அவர்களும் இறைக் கட்டளையை மீறி தடை செய்யப்பட்டக் கனியை சாப்பிட்டதால் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதில் ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அன்றைய இந்தியாவின் இலங்கையில் ஒரு மலை மீது இரக்கப்பட்டார்கள். (இன்று அந்த மழையின் பெயர் ஆதம் மலை) ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் இறக்கப்பட்டார்கள். சுமார் இருநூறு உலக ஆண்டுகள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸஜ்தாவில் இருந்த வண்ணம் தவ்பா செய்தார்கள். அது இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்டப்பிறகு எழுந்தார்கள். பிறகு இறை உத்தரவுப்படி இறையில்லம் கஃபாவை நோக்கி பயணமானார்கள்.

அன்று இந்த கஃபா ஒரே சிவப்பு மரகதக் கல்லினால் செய்யப்பட்டிருந்தது. அதாவது நாற்புற சுவர்களும் மரகத கல்லினால் செய்யப்படடிருந்தது. கிழக்கிலும், மேற்கிலும் எதிரெதிரே இருவாசல்கள் இருந்தது. அக்கஃபாவின் உள்புற கூரையில் தங்க விளக்கு வெள்ளி விளக்கு, சொர்க்கத்து ஒளியிலான விளக்குகள் என மூன்று அலங்கார விளக்குகள் தொங்கின. மேலும் இக்கஃபாவின் யமனி மூலை மட்டும் சொர்க்கத்து வெள்ளை மரகத கல்லினால் கட்டப்பட்டிருந்தது.

அதன் ஹரம் எல்லை நெடுகிலும் வானவர்களை அல்லாஹ் காவலுக்கு வைத்திருந்தான். ஏனென்றால் ஷைத்தான்களும், ஜின்களும் இதனை பார்த்து விடக்கூடாது என்பதற்காக.

இப்படி ஆதம் அலை அவர்கள் பூமிக்கு வருவதற்கு முன்பே இறைவனால் கட்டப்பட்ட இந்த கஃபா, மலக்குகளால் தினம் தினம் தவாப் செய்யப்பட்டு வந்தது.

இந்த வரலாற்றின் அடிப்படையில் தான், தமிழ் மொழியில், "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே" என்று சொல்லப்பட்டிருக்கிறது போலும்.

மேலும் ஆதம், ஹவ்வா (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழ்மொழி என்றே அரபு நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

நூல் : தாரிக் மக்கா அல் முகர்ரமா, அக்பரு மக்கா,துர்ருஸ் ஸமீன்

மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் சார்ந்த ஓர் ஆய்வு :

கி.பி 622 செப்டம்பர் 27ல் ( ஹிஜ்ரி 8.3.1) நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவினுள் 
மாலை வேளையில் பிரவேசித்தார்கள். ஒவ்வொருவரும் தம் வீட்டில் தங்க வேண்டும் என வற்புறுத்தியதில் நபிகளார் "என் ஒட்டகத்திற்கு இறைவன் கட்டளையிட்டுள்ளான் அது எங்கு அமர்கிறதோ அங்கு நான் தங்குவேன்" என்றார்கள். அந்த கஸ்வா எனும் ஒட்டகம் முதலில் ஓர் இடத்தில் படுத்தது. ஆனால் நபிகளார் இறங்கவில்லை. பிறகு அந்த ஒட்டகம் எழுந்து சென்று மீண்டும் அதே இடத்தில் வந்து படுத்துக் கொண்டது.

அந்த இடம் பனீ நஜார் கிளையினருக்கு உரியது. இவர்கள் நபிகளாருக்கு தாய் மாமன்கள் ஆவர். அவர்கள், "தங்கள் வீட்டி வந்து தங்குங்கள்" என நபிகளாரிடம் கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுதே, அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) எனும் நபித்தோழர் நபிகளாரின் பயண சாமான்களை எடுத்துச் சென்று தன் வீட்டினுள் வைத்து விட்டார். 

ஆகவே நபிகளார், "என் பயணப் பொருள்கள் ஒரு வீட்டிலும் நான் ஒரு வீட்டிலும் தங்கஇயலாது நான் இவரது வீட்டில் தங்குகிறேன்" என்றார்கள். அவர்கள் வீட்டில் நபிகளார் தங்க தயாரானார்கள்.

நூல்: இப்னு ஹிஷாம்.

மேலும் மக்களிடையே, "அல்லாஹ்வை வணங்க பள்ளிவாயில் கட்ட வேண்டும், என் ஒட்டகம் படுத்த இடத்தை தேர்வு செய்துள்ளேன், இந்த இடத்திற்குரியவர் யார்?" என நபிகளார் விசாரித்த போது, பனீ நஜார் கோத்திரத்தைச் சார்ந்த 'சஹ்ல், சுஹைல்' என்ற இரு அனாதைச் சிறுவர்களுக்கு உரியது என்று தெரிய வந்தது.

(ஸஹல் - ஸுஹைல் ஆகிய சிறுவர்களின் தந்தையின் பெயர் ராஃபிவு பின் அம்ரு என்பதாகும். இவர்கள் இருவரும் அஸ்அது பின் ஜராரா, மற்றும் முஆத் பின் அஃப்ரா என்பவரின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.)

அவர்களை அழைத்து விபரங்களைக் கூறியதும், அவர்கள் அன்பளிப்பாக அவ்விடத்தைத் தருவதாக கூறினார்கள். ஆனால் அனாதைச் சிறுவர்களிடமிருந்து அப்படி பெறுவதை விரும்பாத நபிகளார் அந்த இடத்திற்கான அன்றைய விலையை நபி (ஸல்) அவர்கள் தந்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம், நீங்கள் பத்து தங்க தீனார்களை  கொடுங்கள் எனக் கூறினார்கள். 

நூல்: புகாரி, திர்மிதீ

அந்த இடத்தில் இருந்த பேரீத்தம் மரங்கள் மற்றும் செடி கொடிகள், அக்ரூட் மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு பைத்துல் முகத்தஸ் கிப்லா திசையில் நடப்பட்டது. 

அங்கிருந்த பாரம்பரியமான காஃபிர்களின் பல கப்ருகளைத் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடங்களில் புதைக்கப்பட்டது.

அரபு நாட்டில் ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் ஒரு இடுகாடு -  மையவாடி இருந்தது. இது பனீ நஜார் கிளையினரின் இடுகாடாக இருந்தது. 

அல்லது சிலர் தம் மூதாதையர்களை தமது சொந்த நிலத்திலேயே அடக்கம் செய்வதுபோல், அங்கே பனீ நஜ்ஜார் கிளையினர் பலரது உடலை அங்கே அடக்கம் செய்திருந்தார்கள்.

குபூருல் முஷ்ரிகீன் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தச் சொல், அங்கே பல அடக்கத் தலங்கள் இருந்தது என்பதையே குறிக்கும் என இப்னு பத்தால் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல் ) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வரும்போது, உடன் வந்திருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் வசம், சுமார் நான்காயிரம் தீனாரிலிருந்து ஐந்து ஆயிரம் தீனார்கள்
வரை எடுத்து வந்திருந்தார்கள். அப்பொழுது அபூபக்கர் (ரலி) அவர்களை அழைத்து, "நீங்களும் கொடுங்கள்" என்று சொன்னதற்கு அவர்கள் பத்து தீனார்களை கொடுத்தார்கள் என்றொரு கூற்றும்,

நபி (ஸல்) அவர்கள் தம் பணத்தை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கொடுத்து வைத்திருந்தார்கள். அப்பொழுது அந்த இடத்திற்கான தொகையை அபூபக்கர் (ரலி) அவர்களிடம், "பத்து கொடுத்து விடுங்கள்"என்று சொன்னதாக ஒரு கூற்றும் உள்ளது.

ஜுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடத்தை நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் என இருவரும் பணம் கொடுத்துதான் அந்த இடத்தில் வாங்கினார்கள்.

இரண்டு முறை கொடுக்கப்பட்ட பணத்தில், ஒருமுறை கொடுக்கப்பட்டது அபூபக்கர் (ரலி) அவர்களின் பணமாகும்.

ஷாமி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள், ஏற்கனவே கொடுத்த தொகை போக, மேலும் பத்து தீனார்களை (அனாதைச் சிறுவர்கள் என்பதற்காக) அதிகமாக கொடுத்தார்கள்.

நபி ஸல் அவர்கள் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலை ஹிஜ்ரி முதலாம் ஆண்டில் ஒரு முறையும், ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஒரு முறையும் என இரண்டு முறை கட்டினார்கள். அதனால் இரண்டாவது முறையாக மேலும் சில நிலத்தை அந்த சிறுவர்களிடமிருந்து பெற்று பள்ளிவாசலை அகலப்படுத்த முனைந்த போது, இன்னும் கொஞ்சம் பணம் தரும்படி நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

அல்பிலாதிரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அனாதைச் சிறுவர்களில் ஒவ்வொருவருக்கும் பத்து தீனார்கள் வழங்கப்பட்டது. இறுதியில் இருவருக்கும் சேர்த்து பத்து தினார் அதிகபட்சமாக வழங்கப்பட்டது. இந்த வியாபாரத்தை உடனிருந்து பேசி முடித்து கொடுத்தவர் அஸ்அது பின் ஜராரா (ரலி) முஆத் பின் அஸ்ரார் (ரலி) ஆவார்கள். அதே போல் அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) அவர்கள்தான் இச்சிறுவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, பெருமானார் தரும் பணத்தை பெற்றுக் கொள்ளும்படிக் கூறினார்கள்.

ஜுஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் கொண்டு வந்திருந்த பெருந்தொகை, நல்வழியில் செலவாக வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பினார்கள்.

நூல்கள் :

அபூதாவூத் 
ரகீகுல் மக்தூம்  
ஃபதஹுல் பாரி 
ஷரஹு அல்லாமா ஸர்கானி

மேற்கண்ட தமிழ் மொழிபெயர்ப்பிற்கான அரபு வாசகங்களும், ஆதார நூல்களும் கீழே இடம் பெற்றுள்ளன.

https://ta.quora.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/answers/237030339?ch=15&oid=237030339&share=a8880f38&srid=h4fLzL&target_type=answer

بناء المسجد النبوي, قصة النبي ﷺ مع بني النجار لبناء مسجد - سنن أبي داود
سنن أبي داود | كتاب الصلاة  باب في بناء المساجد (حديث رقم: 453 )

453- عن أنس بن مالك، قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فنزل في علو المدينة في حي يقال: لهم بنو عمرو بن عوف فأقام فيهم أربع عشرة ليلة، ثم أرسل إلى بني النجار فجاءوا متقلدين سيوفهم، فقال أنس: فكأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم على راحلته، وأبو بكر ردفه، وملأ بني النجار حوله حتى ألقى بفناء أبي أيوب، وكان رسول الله صلى الله عليه وسلم يصلي، حيث أدركته الصلاة، ويصلي في مرابض الغنم، وإنه أمر ببناء المسجد، فأرسل إلى بني النجار فقال: «يا بني النجار، ثامنوني بحائطكم هذا» فقالوا: والله، لا نطلب ثمنه إلا إلى الله عز وجل، قال أنس: وكان فيه ما أقول لكم، كانت فيه قبور المشركين، وكانت فيه خرب، وكان فيه نخل، فأمر رسول الله صلى الله عليه وسلم بقبور المشركين، فنبشت وبالخرب فسويت وبالنخل فقطع فصفوا النخل قبلة المسجد، وجعلوا عضادتيه حجارة، وجعلوا ينقلون الصخر، وهم يرتجزون والنبي صلى الله عليه وسلم معهم، وهو يقول: «اللهم لا خير إلا خير الآخره فانصر الأنصار والمهاجره» (1) 454- عن أنس بن مالك، قال: كان موضع المسجد حائطا لبني النجار فيه حرث ونخل، وقبور المشركين، فقال رسول الله صلى الله عليه وسلم «ثامنوني به» فقالوا: لا نبغي به ثمنا، فقطع النخل وسوى الحرث ونبش قبور المشركين، وساق الحديث، وقال: «فاغفر» مكان «فانصر»، قال موسى: وحدثنا عبد الوارث، بنحوه، وكان عبد الوارث، يقول: خرب، وزعم عبد الوارث، أنه أفاد حمادا هذا الحديث 

فالغلامان اللذان اشترى منهما رسول الله صلى الله عليه وسلم أرض المسجد النبوي هما سهيل وسهل، غلامان يتيمان من الأنصار. روى البخاري

بناء المسجد النبوي

 

الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الصادق الأمين، وعلى آله وصحبه والتابعين.. أما بعد:

فمن أول ما فعله رسول الله صلى الله عليه وسلم بعدما دخل المدينة أن بنى المسجد الذي هو مكان لتجمع المسلمين، ومكان لعبادة الله رب العالمين، تلقى فيه المواعظ والتوجيهات، والخطب النافعات، وتجيش منه الجيوش، وتربى فيه الأجيال، ويأوي إليه المسكين، ويستريح بظله المتعبون من ذوي الفقر والعالة، مع ما في المسجد من اجتماع المسلمين وتآلف قلوبهم، وتعاونهم على البر والتقوى..

أما عن بناء المسجد النبوي وما جرى في ذلك من أحداث فيحدثنا أنس بن مالك رضي الله عنه كما ذكر ذلك الإمام البخاري رحمه الله: فعن أنس بن مالك رضي الله عنه قال: لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة نزل في علو المدينة في حي يقال لهم: بنو عمرو بن عوف، فأقام فيهم أربع عشرة ليلة، ثم أرسل إلى ملأ بني النجار فجاءوا متقلدي سيوفهم، قال: وكأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم على راحلته، وأبو بكر ردفه، وملأ بني النجار حوله، حتى ألقى بفناء أبي أيوب، قال: فكان يصلي حيث أدركته الصلاة، ويصلي في مرابض الغنم، قال: ثم أمر ببناء المسجد فأرسل إلى ملأ بني النجار فجاءوا فقال: (يا بني النجار ثامنوني بحائطكم هذا) فقالوا: لا والله لا نطلب ثمنه إلا إلى الله عز وجل. قال: فكان فيه ما أقول لكم: كانت فيه قبور المشركين، وكانت فيه خرب، وكان فيه نخل، فأمر رسول الله صلى الله عليه وسلم بقبور المشركين فنبشت، وبالخرب فسويت، وبالنخل فقطع، قال: فصفوا النخل قبلة المسجد، وجعلوا عضادتيه حجارة، قال: فجعلوا ينقلون ذلك الصخر وهم يرتجزون، ورسول الله صلى الله عليه وسلم معهم يقول:

اللهم إنه لا خير إلا خير الآخرة *** فانصر الأنصار والمهاجرة1

وقد ثبت في صحيح البخاري في موضع آخر عن الزهري عن عروة أن المسجد الذي كان مربداً -وهو المكان الذي يجفف فيه التمر- كان ليتيمين كانا في حجر أسعد بن زرارة، وهما سهل وسهيل فساومهما فيه رسول الله صلى الله عليه وسلم فقالا: بل نهبه لك يا رسول الله، فأبى حتى ابتاعه منهما وبناه مسجداً.. فجعل رسول الله صلى الله عليه وسلم يقول -وهو ينقل معهم التراب

من دفع ثمن شراء أرض المسجد النبوي ؟

روى ابن سعد في الطبقات الكبرى (184/1) : أن النبي ﷺ اشترى الأرض الذي ابتنى فيه المسجد من غلامين هما ابنا عفراء، وأراد الغلامان أن لا يأخذا شيئا من رسول الله ﷺ، لكنه رفض لأنهما يتيمان، فاشترى منهما الأرض بعشرة دنانير، دفعها عنه أبو بكر الصديق رضي الله عنه.

وبما أن النبي صلى الله عليه وسلم يقول: (من دل على خير فله مثل آجر فاعله) رواه مسلم
 فكل من ركع وسجد، واعتكف وتلى، وتعبد وتهجد، في المسجد النبوي، فثوابه له، ومثله لأبي بكر الصديق رضي الله عنه، والعبادة في الحرم النبوي مضاعفة بألف ..

سلام الله عليك سيدي أبا بكر ..
سلام الله عليك أيها الصِدّيق الأكبر ..

منقول من صفحة الدكتور وليد الحسيني

وهما سهل وسهيل ابنا رافع بن عمرو من بني النجار فيما قال موسى بن عقبة ، وكانا في حجر أسعد بن زرارة .

وقال ابن إسحاق : كان المربد لسهل وسهيل ابني عمرو ، وكانا في حجر معاذ بن عفراء .

وغلط ابن منده فقال : كان لسهل وسهيل ابني بيضاء ، وإنما ابنا بيضاء من المهاجرين

மேலும் சில பக்கங்கள் இமேஜாக வழங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்