நபிகள் நாயகத்திற்கு வக்ஃபு செய்த நபித்தோழர் :
நபிகள் நாயகத்திற்கு
வக்ஃபு செய்த நபித்தோழர் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
யூதர்களில் பனீநுளைர் சமூகத்தில் பனு கையின்கா பிரிவைச் சேர்ந்த முகைரீக் என்பவர் இஸ்லாத்தில் இணைந்தார்.
இவர் ஓரு துறவி / பாதிரியாரும் ஆவார்; இவருக்கு மனைவி மக்கள் எவரும் இல்லை. தவ்ராத் வேதத்தை நன்கு அறிந்திருந்த மார்க்க மேதை ஆவார்.
நபி (ஸல்) அவர்கள் குபா பகுதியில் இருக்கும் போதே தேடிச்சென்று இஸ்லாத்தில் இணைந்து விட்டார்.
நபி (ஸல்) அவர்களை நபி என தாம் முதலில் ஒப்புக்கொண்டு, "இவர்தான் இறுதி நபி, எதிர்பார்க்கப்பட்ட நபி, பஷாரத் - நன்மாராயம் சொல்ல வந்த நபி, தவ்ராத் இன்ஞீல் போன்ற வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட , வர்ணிக்கப்பட்ட நபி என்று தம் சமூகத்தினருக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
இவர் நபிகள் நாயகம் அவர்களை முதன் முதலில் பார்த்ததும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.
உஹது போர்க்களத்தில் கலந்து கொண்டு மிக வீரதீரமாக போர் செய்து பலரை கொன்று குவித்தார்கள்; இறுதியில் தானும் படுகாயங்கள் அடைந்து மரண தருவாயில் இருக்கும் பொழுது
اموالي الى محمد يضعها حيث يشاء
"எனது செல்வங்கள் அனைத்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு உரியதாகும்; அவர்கள் விரும்பியதை செய்து கொள்ளலாம்" என்று இறுதி வசியத் செய்து தனது செல்வங்கள் அனைத்தையும் நபிகளாருக்காக வக்ஃபு / ஹதியா செய்து விட்டார்கள்.
முகைரீக் (ரலி) அவர்களுக்கு தோட்டங்களும் வீடுகளும் வீட்டு மணைகளும் என ஏழு இடங்களில் சொத்துகள் இருந்தது.
அந்த ஏழு இடங்களில் ஒரு இடத்தை நபி (ஸல்) அவர்கள், இப்ராஹிம் (ரலி) அவர்களின் தாயார் மாரியா கிப்தியா (ரலி) அவர்களுக்கு ஹவாலி எனும் பகுதியில் இருந்த வீட்டை வழங்கினார்கள்; அவர்கள் அதில் குடியிருந்தார்கள். அங்கு தான் இப்ராஹிம் (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.
மற்றொரு இடத்தை ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள்.
فقال رسول الله صلى الله عليه وآله وسلم: «مخيريق سابق يهود وسلمان سابق فارس وبلال سابق الحبشة
நபி (ஸல்) அவர்கள் இப்படி சொல்லுவார்கள்; முகைரிக் (ரலி) அவர்கள் முன்னால் யூதர் ஆவார்; ஸல்மான் (ரலி) அவர்கள் முன்னாள் ஃபார்ஸீ ஆவார்; பிலால் (ரலி) அவர்கள் முன்னாள் ஹபஷீ ஆவார்.
மதீனாவில் நிகழ்ந்த முதல் வக்ஃபு இதுதான் என சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அந்த ஏழு நிலங்களுக்கும் தனி தனிப் பெயர்கள் இருக்கின்றன. அவை; அல் மைஸப், அஸ் ஸாயிஃபா, அல் தலால் , ஹுஸ்னா, பரகா, அஃவாஃப் , மஷ்ரபா உம்மு இப்ராஹீம்.
மேலும் விபரங்களுக்கு
https://lib.eshia.ir/86813/1/62
https://ar.lib.eshia.ir/86813/1/57
https://www.islamweb.net/ar/library/content/200/17178/%D9%82%D8%AA%D9%84-%D9%85%D8%AE%D9%8A%D8%B1%D9%8A%D9%82-%D8%AE%D9%8A%D8%B1-%D9%8A%D9%87%D9%88%D8%AF
நூல் : துர்ருல் மன்சூர் , ஸீரது இப்னு ஹிஷாம், பிஹாருல் அன்வார்
Comments
Post a Comment