ஹாஜிகளின் கனிவான கவனத்திற்கு....
ஹாஜிகளின்
கனிவான கவனத்திற்கு....
ஹரம் ஷரீஃபில்
ஜனாஸா தொழுகை முறை
==========================
ஹஜ் மற்றும் உம்ரா செல்லக்கூடிய அனைவரும் கீழ்காணும் தகவலை முழுமையாகப் படித்து விளங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.
இரண்டு ஹரம் ஷரிஃப்களிலும் ஒவ்வொரு வக்து தொழுகைக்கு பிறகும் ஜனாஸா தொழுகை நடைபெறும்.
அந்த ஜனாஸா தொழுகையில் ஆண்களும் பெண்களும் அங்கு கலந்து கொள்ளலாம்.
பெண்கள் ஜனாஸா தொழுகை தொழுவதற்கு ஹரம் ஷரீஃபில் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. உலகத்தில் வேறு எந்த பகுதியிலும் அந்த வாய்ப்பு அவர்களுக்கு இல்லை.
எனவே ஜனாஸா தொழுகையின் முறையை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லப்படும். ஒவ்வொரு தக்பீருக்கு பிறகும் ஓத வேண்டிய துஆக்களை கீழே குறிப்பிட்டுள்ளேன்.
இப்பொழுது மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தக்பீரை இமாம் சொன்ன பிறகும் கீழ்காணும் துஆக்களை ஓத வேண்டும்.
ஜனாஸா தொழுகையின் சிறப்பு :
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؛ قَالَ مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ وَلَمْ يَتْبَعْهَا فَلَهُ قِيرَاطٌ فَإِنْ تَبِعَهَا فَلَهُ قِيرَاطَانِ قِيلَ وَمَا الْقِيرَاطَانِ قَالَ أَصْغَرُهُمَا مِثْلُ أُحُدٍ
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்ற ஒருவர் (அதை அடக்கம் செய்யும்வரை) பின் தொடர்ந்து செல்லவில்லையனால், அவருக்கு ஒரு ‘கீராத்’ (நன்மையே) உண்டு;
அதை (அடக்கம் செய்யும்வரை) பின்தொடர்ந்தால் அவருக்கு இரண்டு ‘கீராத்’ (நன்மை) உண்டு” என நபி (ஸல்) கூறினார்கள்.
அப்போது “இரண்டு ‘கீராத்’ என்றால் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு, “இரண்டு ‘கீராத்’களில் மிகச் சிறிய அளவு, உஹுத் மலை அளவாகும்” என்று விடையளித்தார்கள்.
நூல் : முஸ்லிம், திர்மிதீ
ஜனாஸா தொழுகை நிய்யத் :
============================
'இந்த மய்யித்திற்கு துஆ செய்தவனாக இந்த இமாமைப் பின்பற்றி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விற்காகத் தொழுகிறேன்" என்று நிய்யத் செய்து தக்பீர் கட்ட வேண்டும்.
முதல் தக்பீருக்குப் பிறகு:
=========================
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ و جل ثناءك وَلَا إِلَهَ غَيْرُكَ
ஸுப்ஹானகல்லாஹும்ம, வ பிஹம்திக, வ தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக்க, வ ஜல்ல ஸனாவுக, வ லா இலாஹ கைருக.
முதல் தக்பீர் தவிர பின்னுள்ள மூன்று தக்பீரின் போதும் கைகளை உயர்த்தக் கூடாது.
ஷாஃபியீ மத்ஹபைச் சேர்ந்தவர்கள் முதல் தக்பீருக்கு பிறகு அல்ஹம்து சூராவை ஓதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் தக்பீருக்கு பிறகு:
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ و عَلَى آلِ مُحَمَّدٍ، كَما صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ عَلَى آلِ مُحَمَّدٍ، كما باركت على إبراهيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.
தரூத் இப்ராஹீமை ஓத வேண்டும்,
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.
மூன்றாம் தக்பீர்ருக்கு பின்:
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا ، وَشَاهِدِنَا وَغَائِبِنَا ، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا ، وَذَكَرْنَا وَأَنْثَانَا
اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَان، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ
அல்லாஹும்மங்பிர் லி ஹய்யினா, வ மய்யிதினா, வ ஷாஹிதினா, வ காயிபினா, வ ஸகீரினா, வ கபீரினா, வ தகரினா, வ உன்ஸானா, அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹு மின்னா ஃப அஹ்யிஹீ அலல் இஸ்லாம், வமன் த வஃப்பைதஹு மின்னா ஃப தவஃப்பஹு அலல் ஈமான்.......
மய்யித் குழந்தையாக இருந்தால் (மூன்றாம் தக்பீருக்குபின்):
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَاجْعَلْهُ لَنَا اَجْرًا وَ ذُخْرًا وَ اجْعَلْهُ لَنَا شَافِعًا وَ مُشَفِّعًا.
'அல்லாஹும்மஜ்அல்ஹூ லனா ஃபரதன் வஜ்அல்ஹு லனா அஜ்ரன் வ துக்ரா வஜ்அல்ஹு லனா ஷாஃபிஅன் வ முஷஃப்பஆ என்ற துஆவை ஓத வேண்டும்.
நான்காம் தக்பீருக்கு பிறகு:
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ..
'ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் என்ற துஆ ஓத வேண்டும்.
அன்புடன்
மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் அவர்கள்
27/04/2025
https://www.facebook.com/share/p/1KkcBbNXio/
Comments
Post a Comment