ஹஜ் வழிகாட்டு நெறிமுறைகள்

ஹஜ் வழிகாட்டு நெறிமுறைகள்
==================================

தல்பியாவை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். இஹ்ராம் அணிந்த உடன் தல்பியாவை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே
இருக்கவேண்டும்.

எடுத்துக்கொள்ள வேண்டியவைகள்:
==================================

1. நீங்கள் சாப்பிட்டுவரும் மருந்துகள், நாற்பது நாட்களுக்கு டாக்டர் சீட்டுடன் (Prescription) எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. ஐந்து அல்லது 6 செட் உடைகள் (Dresses) (இதில் இரண்டு செட் புதிய உடையாக இருக்க வேண்டும்.) 

3.  மக்கானா 2  இஹ்ராம் 2 செட் .

4. பிரஷ்,பேஸ்ட், சோப்பு சேவிங் செட் போன்றவைகள்.

5. சன் கிலாஸ் ( Sun Glass -UV treated.)

*அதிகமாக வைத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள்:*

உதாரண மாத்திரைகள்

1. ஜுரம்
(TAXIMO/PARACETAMOL
20)

2. ஒற்றைத் தலைவலி
(GRENIL10 )

3. இருமல் சிரப்
(MUCOLITE OR COREX DX
3 BOTTLE )

4. சளி
(ALERID & OFLIN 200MG
30) அல்லது
( SAMAHAN 20 )

5. அலர்ஜி
( ALLEGRA 120 / AVIL 25 )

6. ஆன்டிபயாடிக்
 ( AMOXLIN 500. /10 )

7. வயிற்றுப்போக்கு
( SPORLAC/LOPARAT/GRAMOGYL10 )

8. உடல் நீர் குறைவு (சோர்வு) 
( ELECTRAL POWDER SMALL PACK 10 )

9. மாதவிடாய் தள்ளிப்போக
( REGESTERONE TAB MOR 1 EVE 1 )

10. கால்வலி
( COMBIFIAM 20 )
அல்லது
( NEUROBIAN FORTE 30 )

11. வயிற்று உபாதைகள்
( ZINTAC 150.20)

12. காயம்
( FUCIDIN / BETADINE 1 )

13. விட்டமின் மாத்திரைகள்
( BECATEXAMINE/ MULTI VITAMIN 30 )

மேலே உள்ள மருந்துகளையோ அல்லது வேறு மருந்துகளையோ உங்கள் குடும்ப டாக்டரிடம் கலந்து, அவர்களின் ஆலோசனை கேட்டு, தேவையான அளவு எடுத்து வருவது நல்லது.

லக்கேஜ் 

நம்முடன் கையில் எடுத்துச்செல்லும் கேபின் பேக்கில் (Cabin bag ) 7 கிலோ வரை வைத்துக்கொள்ளலாம். கத்தரிக்கோல், பேஸ்ட் லிக்விட் ஐட்டம்ஸ் போன்றவைகளை இதில் வைக்கக் கூடாது. லக்கேஜில் வைத்துக்கொள்ள வேண்டும். 

சென்னையிலிருந்து செல்லும் போது ஒரு லக்கேஜ் பேக் 23 கிலோவுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறோம். திரும்பி வரும்போது ஹஜ் பயணிகளுக்கு சவூதியா ஏர்லைன்ஸ் அதிகபச்சம் நபர் ஒருவருக்கு பேக்கில் 23 கிலோ வீதம் 2 பேக்குகளில் 46 கிலோ மட்டுமே எடுத்து வர அனுமதிகப்படுவார்கள். ஜம்ஜம்முக்கு எடை கிடையாது (ஐந்து லிட்டர் மட்டுமே கொண்டு வர அனுமதி). 

சென்னை விமான நிலையம் :
============================

இன்ஷா அல்லாஹ்! உங்கள் பயண நாள் தேதிப்படி நீங்கள் தங்குமிடத்தில் இஹ்ராம் கட்டி இஹ்ராமுக்காக சுன்னத் 2 ரக்கஅத், ஸஃபர் நஃபில் 2 ரக்கஅத் தொழுது துஆ செய்து புறப்பட வேண்டும். 

விமான நிலையத்திற்கு விமானம் புறப்படும் நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து, புறப்பாடு Departure இடத்திற்கு எதிரில் பொறுப்பாளர்களிடம் உங்கள் வருகையைப் பதிவு செய்து கொண்டு உங்களுடைய பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவைகளை காண்பித்து சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டியவைகளை பெற்றுக்கொண்டு விமான நிலையத்திற்குள் செல்ல வேண்டும்.

விமான நிலையம் உள்ளே செல்லுமுன் ஹாஜிகள் (Hand Bag) கைப்பையில் வைத்திருக்க வேண்டியவை : 

1. பாஸ்போர்ட் / வீசா

2. போர்டிங் பாஸ் அல்லது டிகேட் (Ticket copy) 

3. சவூதி எமிகிரேஷன் ஃபாரம்

4. தடுப்பூசி அட்டை

5. PIP கார்டு

6. அடையாள அட்டை (Identification Card)

7. covid-19 தடுப்பூசி சர்ட்பிகேட்

8. PCR டெஸ்ட் சர்டிபிகேட்

விமான நிலைய 
எமிகிரேஷனில் காட்டுபவை:
==============================

எமிகிரேஷன் உள்ளே சென்று அங்குள்ள ஆபீஸரிடம் காட்ட வேண்டியவை

1.பாஸ்போர்ட் 
2‌ விசா 
3. போர்டிங் பாஸ்

மற்றவைகளை பாஸ்போர்ட் கடைசி அட்டைக்கு முன் வைத்து நன்றாக பின் அடித்து அனைத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். 

பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸில் முத்திரை (seal) வைத்தபின் திருப்பித் தருவார்கள். இதற்குப்பிறகு சென்னையில் பாஸ்போர்ட்டை யாரிடமும் காட்ட வேண்டியதில்லை. 

ஆகவே சிறிய ஹேண்ட் பேக்கில் (Hand Bag / Pouch) சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஆனால் விமானம் உள்ளே நுழையுமுன் போர்டிங்பாஸை காட்ட வேண்டும். ஆகவே தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு மைய சோதனை 
=========================

விமான நிலையத்தினுள் உங்களையும் உங்கள் லக்கேஜ்களையும் செக்யூரிட்டி பரிசோதனை (check) செய்த பிறகு அங்குள்ள ஹாலில் ஜித்தா செல்லும் உங்களது விமானம் புறப்படும் வரை அமர்ந்து இருக்கவேண்டும். சவூதி விமானத்தில் சீட் - இருக்கை எண்னை சரி பார்த்து அமர வேண்டும். 

ஹஜ்ஜு தமத்துஃ உம்ராவின் நிய்யத்து:

வீட்டில் குளித்து, இஹ்ராமிற்கான தொழுகையை தொழுதுவிட்டு, உம்ராவிற்கான நிய்யத்தையும் வீட்டிலேயே வைத்துக் கொண்ட பிறகு புறப்பட வேண்டும். நிய்யத் 

اللهم إني أريد العمرة فيسرها لي وتقبلها مني

"அல்லாஹும்ம இன்னீ உரீதுல் உம்ரத ஃப யஸ்ஸிர்ஹா லீ வதகப்பல்ஹா மின்னீ" 

பொருள்: யா அல்லாஹ்! நான் உம்ரா செய்ய நாடுகிறேன். இதை எனக்கு இலேசாக்கித் தருவாயாக! என்னிடமிருந்து இந்த உம்ராவை ஏற்றுக் கொள்வாயாக!

விமான டாய்லெட் :
===================

நமதூர் உம்ரா பயணிகள் சிலர் விமான டாய்லெட் பற்றி அறியாது இருக்கிறார்கள். எல்லா உம்ரா பயணிகள் உளூச் செய்யும் போது கால்களை நன்றாகத் தண்ணீர் விட்டு கழுவுவதால், டாய்லெட்டில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. 

இதனால் அபாயம் ஏற்படக்கூடும். ஆகவே பயணிகள் தண்ணீரை W/C (கக்கூஸ்) உள்ளே தண்ணீர் ஓடும்படியாக காலைத் தூக்கி வைத்து காலை கழுவுவதே நல்லது. 

அல்லது டிஷ்யூ பேப்பரில் தண்ணீரை நனைத்து துடைத்துக் கொள்ள வேண்டும். அல்லது தண்ணீரால் மஸஹ் செய்து கொண்டால் போதுமானது. (ஆனால் இயன்ற அளவு விமான டாய்லெட்டை பயன்படுத்தாமல் இருப்பது மிக நல்லது. 

அதேபோல் விமானத்தில் உளூவுடன் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். )

சவூதி விமான நிலையம்:
========================

இன்ஷா அல்லாஹ்! விமானம் சென்றடைந்த பின் பயணிகள், ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக எமிகிரேஷனுக்காக நிறுத்தப்படுவார்கள். 

அவர்களிடம் 1. பாஸ்போர்ட் 2. சவூதி எமிகிரேஷன் பாரம் காட்டி முத்திரை (சீல்) அடித்தவுடன் திரும்ப வாங்கி கொண்டு வெளியே வரும்போது, வாயில் பரிசோதகரிடம் காண்பித்து கைப்பையில் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து லக்கேஜ் வருகிற இடத்தில் (Luggage belt) அவரவர் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டு அங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளின் ஸ்கேன் மிசினில் லக்கேஜ், கேபீன் சூட்கேஸ், கைப்பை போன்ற அனைத்தையும் வைக்க வேண்டும். 

பிறகு ஸ்கேன் மிசினுக்கு வெளியே லக்கேஜ் வந்தவுடன் எடுத்துக் கொண்டு வெளியே வர வேண்டும். வரும்போது பெரிய லக்கேஜ்களை வாங்கி டிரக் வண்டியில் ஏற்றிக்கொண்டு ஏர்போர்டில் நம் குருப் தங்குமிடத்தில் திரும்ப தந்துவிடுவார்கள். ஆனால் முக்கியமானவைகள், பணம் உள்ளவைகளை நாம் கையில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். 

சாப்பிட்டு முடித்தபின் பஸ்ஸுக்குப் பொறுப்பானவர்கள் பஸ் ரெடி செய்து கூப்பிடுவார்கள். பஸ்ஸுக்குப் பொறுப்பான சவூதிகள் ஒவ்வொரு பஸ்ஸுக்கும் ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக நிற்கச்சொல்லி எண்ணி சரி செய்வார்கள். 

அதன் பிறகு அந்தந்த பஸ்ஸுக்கு நின்றவர்களிடம் லக்கேஜ்களை ட்ரக்கில் வைக்கச்சொல்லுவார்கள். தாங்கள் செல்லும் வாகனத்தில் லக்கேஜ்களை ஏற்றிவிட்டார்களா என்று உறுதி செய்து கொள்ளவேண்டும். 

பஸ்ஸில் ஏறுமுன் உங்கள் பாஸ்போர்ட்களை .  ஊருக்கு திரும்பும்போதுதான் மீண்டும் பாஸ்போர்ட் ஏர்போர்ட்டில் வைத்து தருவார்கள்.

இன்ஷா அல்லாஹ்! மக்கா வந்தவுடன் அனைவரும் ஹரமுக்கு உம்ரா செய்ய செல்வதற்கு, பொறுப்பாளர்கள் சொல்லுகின்ற நேரத்தில் மட்டுமே உலமாக்களின் வழிகாட்டுதலுடன் செல்லவேண்டுகிறோம். 

பொறுப்பாளர்கள் சொல்லுகின்றவற்றினைச் சரியாக கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக கூட்டத்தில் வழி தவறிவிட்டால் ஹரமில் எங்கு நிற்கச் சொல்கிறார்களோ அந்த இடத்தினை சரியாக பார்த்துக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இஹ்ராம் அணிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவை:

1. தேவை என்றால் குளித்துக் கொள்ளலாம். 

2. தேவை என்றால் இஹ்ராம் துணிகளை துவைக்கவோ மாற்றவோ செய்யலாம். 

3. முடிகள் உதிர்ந்து விடாத அளவிற்கு உடம்பையோ, தலையையோ சொறிவதில் குற்றமில்லை.

4. மோதிரம், வாட்ச், கண்ணாடி, பெல்ட், பணப்பை, கைப்பை அனிந்துகொள்ளலாம். 

இஹ்ராம் அணிந்த நிலையில் செய்யக்கூடாதவை:
==============================

1. அவரவர் வழக்கமாக அணியும் தைக்கப்பட்ட ஆடைகளையோ உள்ளாடைகளையோ அணியக்கூடாது.

2. நறுமணத்தை நுகரவோ, பூசவோ கூடாது.

3. ஆண்கள் தலை, முகம் மற்றும் பாதங்களின் மேல்பாகங்களை மறைக்கக்கூடாது. பெண்கள் முகம் மறைக்கக்கூடாது (அந்நிய ஆண்களுக்கு முன்னால் ஏதேனும்
பொருளை கொண்டு முகத்தை மறைத்துக் கொள்ளலாம்).

4. உடலின் எந்தப் பகுதியிலிருந்தும் முடி எடுக்கக்கூடாது.

5. நகம் வெட்டக்கூடாது.

6. கணவன் மனைவிக்கிடையிலோ, மற்ற வழிகளிலோ உடல் ஆசைகளைத் தூண்டும் பேச்சுக்கள்,
செயல்கள், செல்போன் வழி காட்சிகள் கூடாது.

7. எந்தப்பிராணியையும் வேட்டையாடவோ, கொல்லவோ கூடாது.

8. புல், பூண்டு, மரங்களை வெட்டக்கூடாது.

9. சண்டை, சச்சரவு, வீண்பேச்சு, அதிக சப்தமிட்டு பேசுதல் போன்றவைகளில்
ஈடுபடக் கூடாது.

10. திருமணம் சம்பந்தமான எந்தப் பேச்சும் பேசக்கூடாது,

11. ஆண்கள் கரண்டைக்கால் மற்றும் காலின் மேல்பகுதியை மறைக்கும் அளவிற்கு காலணிகள் அணியக் கூடாது.

சென்ற வருடம் நடைமுறையில் இருந்த அனைத்துத் தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

இந்த வருடம் சில அடையாள அட்டைகள் மற்றும் சில விபரங்கள் குறையவோ கூடுதலாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது.

எனவே இவற்றில் உள்ள தகவல்களில் ஏதேனும் விவரம் தெரியவில்லை என்றால் அதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டாம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்