ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி என்ன?

ஹாஜிகளின் சேவையில்.......14
===========================

ஒப்புக்கொள்ளப்பட்ட 
ஹஜ்ஜின் கூலி என்ன?
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

عبد الله بن مسعود قال: قال رسول الله صلى الله عليه وسلم: «تابعوا بين الحج والعمرة؛ فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة، وليس للحجة المبرورة ثواب إلا الجنة».

அப்துல்லாஹ் பின் மஸ்வூத்ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தொடர்படியாக ஹஜ் மற்றும் உம்ரா செய்து வாருங்கள்! ஏனெனில், அவ்விரண்டும் வறுமையையும் பாவத்தையும் நம்மை விட்டு அகற்றி விடுகின்றது. 

பொற்கொல்லனின் நெருப்பு தங்கத்தின்  மீதும் வெள்ளியின் மீதும் இரும்பின் மீதும் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றி விடுவது போல. 

மேலும், ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்கத்தை தவிர கூலி வேறேதுவும் இல்லை"  

நூல் : முஸ்னது அஹ்மத் 

 أنها قالت: يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد؟ قال: «لا لكن أفضل الجهاد حج مبرور».

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி  (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதை பெண்களாகிய நாங்கள் மிகச் சிறப்பான அமலாக கருதுகின்றோம்?" ஆகவே, நாங்கள் ஜிஹாதில் பங்கேற்கலாமா?" என்று கேட்டார்கள். 

அதற்கு நபி ஸல் அவர்கள், "இல்லை, ஜிஹாதில் சிறந்தது ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் ஆகும்"  என்று  கூறினார்கள்.

நூல்: இப்னு மாஜா

 سبعين حجة، وعاش مائة سنة.

இப்னு அபீ  லைலா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- நூறு ஆண்டுகள் வாழ்ந்த  அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் 70 ஹஜ் செய்துள்ளார்கள்.

அதிகம் ஹஜ் உம்ரா செய்யுங்கள். அது உங்களை ஆன்ம ரீதியாக பலப்படுத்தும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்