உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு

உலக இஸ்லாமியத் 
தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு
=================================


மூன்று நாட்களாக (2025 மே 9-11) திருச்சி M.I.E.T. பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 

இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்தும், 
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பெருவாரியாக கலந்து கொண்டார்கள். 

மான்புமிகு தமிழக முதல்வர் MK. ஸ்டாலின் அவர்கள் இவ்விழாவினை துவக்கி வைக்க, அமைச்சர் பெருமக்களும், உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய எழுத்தாளர்கள், பிற மத சகோதர சமயத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரும் வருகை தந்திருந்தார்கள்.

கல்லூரி 100 ஏக்கரில் அமைந்திருந்ததால் ஆங்காங்கே ஒரு கட்டிடம்; அந்த கட்டிடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் நடைபெற்றன. 

அதனால் மக்கள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும், உரையாடிக் கொண்டும், நிழல்களில் நின்ற வண்ணம் இருந்த காட்சி என்றென்றும் நினைவிலிருந்து நீங்காது. 

இஸ்லாமிய இலக்கியக் கழக நிர்வாகிகள் மிகச் சிறப்பாகவும், சாதுரியமாகவும் செயல்பட்டு சாதனை படைத்திருக்கிறார்கள். 

தமிழ் மொழி வழியாக அனைத்து சகோதர சமயத்தவர்களையும் இணைக்கும் பாலமாக இஸ்லாமிய இலக்கியக் கழகம் மிகச்சிறப்பாக களமாடி இருக்கின்றது.

M.I.E.T. கல்வி குழுமம் தமது வரலாற்றில் - தம்மகுடத்தில் ஒரு வைரத்தை சூட்டிக் கொண்டது. 

இந்த மாபெரும் நிகழ்வில் எனக்கும் "இலக்கிய சுடர் விருது" வழங்கி கண்ணியப்படுத்திய இலக்கியக் கழக நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
(ஜஸாகுமுல்லாஹு கைரன்)

அறிமுகம் இல்லாத பல எழுத்தாளர்களோடு அறிமுகம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர்களை சந்தித்தது வரையறுத்துவிட இயலாத பாக்கியம்.

எழுத்தாளர்களோடு அளவலாவிய போது கிடைத்த அனுபவங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷம்.

முதன் முதலில் இறைவன் படைத்த பேனாவை, தான் தேர்ந்தெடுத்த மனிதர்களிடம் வழங்கி சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறான். 

இறைவனால் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களை இலக்கியக் கழகமும் தேர்வு செய்து அவர்களை  ஒரு பேனாவின் மூடி நிழலில் சங்கமிக்க செய்தது வாழ்த்துக்கும், பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. (அல்ஹம்து லில்லாஹ்). 

புகைப்படத்தில், உடன் இருப்பவர்கள் சென்னை, மௌலவி முனைவர் அ. சாகுல் ஹமீது பாகவி அவர்களும், 
எனது ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நல்லாசிரியர் அண்ணன் அக்பர் அவர்களும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்