அள்ள அள்ள குறையாத பணமும், அளவிட முடியாத ஆரோக்கியமும் உள்ளவர்கள் கூட இனி ஹஜ் செய்ய இயலாது???
ஹாஜிகளின் சேவையில்......16
=============================
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
عَنْ ابى هريرة رضى الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ أَسْوَدَ أَفْحَجَ يَنْقُضُهَا حَجَرًا حَجَرًا . يَعْنِي الْكَعْبَةَ . رواه البخاري
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : يُخَرِّبُ الْكَعْبَةَ ذُوالسُّوَيْقَتَيْنِ مِنْ الْحَبَشَةِ ، وَيَسْلُبُهَا حِلْيَتَهَا وَيُجَرِّدُهَا مِنْ كِسْوَتِهَا ، وَلَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ أُصَيْلِعَ ، أُفَيْدِعَ يَضْرِبُ عَلَيْهَا بِمِسْحَاتِهِ وَمِعْوَلِهِ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்”
நூல்: புகாரி
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் இப்போதும் பார்ப்பது போன்றிருக்கிறது''
நூல்: புகாரி
ابو سعيد القدر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ليحجن البيت وليعتمرن بعد خروج يأجوج ومأجوج
அபூஸயீத் (ரலி) அறிவிக்கின்றார்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
”யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும்; உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்”
நூல்: புகாரி
ஹஜ் செய்ய முடியாத ஒரு காலம் ஏற்படும். அந்த காலம் வருவதற்கு முன் ஹஜ் செய்து கொள்ளுங்கள்.
இந்த வருடம் தனியார் ஹஜ் டிராவல்ஸ் மூலம் இந்தியாவிலிருந்து 42525 பேர் ஹஜ் செய்ய இயலாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் இரண்டு அரசுகளும் தான்.
இனி எதிர்காலத்தில் காசு வைத்திருப்பவர்கள், உடல் ஆரோக்கியம் பெற்றிருப்பவர்கள் கூட ஹஜ் செய்ய இயலாத நிலை ஏற்படும் சூழல் உருவாகி இருக்கின்றது.
كان عبد الله بن وهب قد قسم دهره أثلاثا: ثلثا في الرباط، وثلثا يعلم الناس بمصر، وثلثا في الحج، وذكر أنه حج ستا وثلاثين حجة.
அப்துல்லாஹ் இப்னு வஹப் (ரஹ்) அவர்கள் தங்களுடைய ஒரு வருஷத்தை மூன்று பகுதிகளாக பிரித்து விடுவார்கள்.
ஒரு பகுதி இரவு வணக்கங்களுக்காக, இரண்டாம் பகுதியை அவர்கள் வாழ்ந்த மிஸ்ரில் கல்விச் சேவைகளுக்காக, மூன்றாம் பகுதியை ஹஜ்ஜுக்காக, என அவர்கள் தம் வாழ்நாளில் முப்பத்து ஆறு ஹஜ் செய்திருக்கிறார்கள்.
وعن محمد بن سوقة قال: قيل لمحمد بن المنكدر: تحج وعليك دَيْن؟ قال: الحج أقضى للدين ـ قال: يعني إذا حججت قضى الله عني ديني -.
முஹம்மது இப்னு முன்கதிர் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் உங்களுக்கு கடன் இருக்கும் நிலையில் ஹஜ் செய்கின்றீர்களே? என்று கேட்கப்பட்ட போது, நான் ஹஜ் செய்வதே கடனை அடைப்பதற்காக தான்" என்றார்களாம்.
அதாவது, நான் ஹஜ் செய்வதால் அல்லாஹ் என் கடனை (அடைப்பதற்குரிய பொருளாதார வளத்தை, அந்த பொருளாதார வளத்தில் பரக்கத்தை தந்து) நிறைவேற்றி விடுகிறான்". இப்படியாக அவர்கள் தம் வாழ்நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஹஜ் செய்திருக்கின்றார்கள்.
இவர்களெல்லாம் அதிகமதிகமாக ஹஜ் செய்து நன்மைகளை கொள்ளை அடித்தது போன்று எதிர்காலத்தில் நாமும் அதிகமதிகமாக ஹஜ் செய்ய அல்லாஹ் அருள் செய்வானாக!
Comments
Post a Comment