எழுபது ஹஜ் செய்தும் ஆசை தீராத ஆஷிக்

ஹாஜிகளின் சேவையில்......15
=================================

எழுபது ஹஜ் செய்தும் 
ஆசை தீராத ஆஷிக் 
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷


قال سفيان بن عيينة -: حججت مع عمي سفيان آخر حجة حجها سنة سبع وتسعين ومائة فلما كنا بجمع وصلى استلقى على فراشه، ثم قال: فد وافيت هذا الموضع سبعين عاما أقول في كل سنة: 

اللهم! لا تجعله آخر العهد من هذا المكان، 

وإني قد استحييت من الله من كثرة ما أسأل ذلك، فرجع فتوفي في السنة الداخلة يوم السبت أول يوم من رجب سنة ثمان وتسعين ومائة ودفن بالحجون... وتوفي وهو ابن إحدى وتسعين سنة......

حلية الأولياء 3/4
تاريخ مدينة دمشق 35/160

ஸுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்களின் சகோதரர் மகன் ஹசன் இப்னு இம்ரான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:- 

ஹிஜ்ரி 198 ஆம் ஆண்டு எனது சிறிய தந்தையுடன் ஹஜ் செய்ய சென்றிருந்த போது ஒரு இடத்தில் தொழுது விட்டு படுக்கையில் அமர்ந்திருந்த என் சிறிய தந்தை, "இதோ இந்த இடத்திற்கு நான் எழுபது ஆண்டுகள் வந்து விட்டேன். 

ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த இடத்தில் இருந்து அல்லாஹ்விடம், "அல்லாஹ்வே! இந்த ஆண்டோடு நான் ஹஜ்ஜை நிறைவு செய்யும் ஆண்டாக அமைத்து விடாதே!" என்று துஆ செய்வேன். 

ஆனால், "என் ரப்பிடம் நான் தொடர்ந்து இங்கு வர வேண்டும் என்று கேட்பதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்று கூறினார்கள். 

ஹஜ்ஜை முடித்து அங்கிருந்து ஊர் வந்த பிறகு ஹிஜ்ரி 199 ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் தம் 91 வயதில் மரணித்தார்கள்.

நூல்: ஹுல்யதுல் அவ்லியா , தாரீக் மதீனா திமிஸ்க்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்