அல்லாஹ்வின் கருணையால் தான் ஹஜ் ஒப்புக்கொள்ளப்படுகிறதா? நமது செயல்களால் இல்லையா?

ஹாஜிகளின் சேவையில்.....17
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

அல்லாஹ்வின் கருணையால் தான் 
ஹஜ் ஒப்புக்கொள்ளப்படுகிறதா? 
நமது செயல்களால் இல்லையா?
==================================

இறைநேசர் அபூ அப்துல்லாஹ் ஜவ்ஹரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

நான் ஒரு ஹஜ்ஜின் போது அரஃபாவில் தங்கியிருந்தேன். எனக்கு சிறிது தூக்க மேலிட்டு கண்களை மூடினேன். 

கனவில் இரண்டு மலக்குகள் வானிலிருந்து இறங்கி வருவதைக் கண்டேன். ஒருவர் மற்றவரைப் பார்த்து, "இவ்வருடம் எத்தனைபேர் ஹஜ்ஜுக்கு வந்திருக்கின்றனர்?'' என வினவினார். 

அதற்கு மற்றவர், "ஆறு லட்சம் பேர் வந்திருக்கிறார்கள்."

அவர்களில் எத்தனை பேருடைய ஹஜ் ஒப்புக்கொள்ளப்பட்டது 

ஆறு லட்சம் நபர்களில் வெறும் ஆறு பேரின் ஹஜ்ஜு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்று பதில் அளித்தார்.

இதைக்கேட்ட எனக்கு வருத்தத்தால் உள்ளமே வெடித்து விடும் போலிருந்தது. 

என்னை நானே கன்னத்தில் அறைந்து கொள்ளலாமா, வீறிட்டுக் கதறி அழலாமா என்று எண்ணினேன். 

அப்பொழுது அந்த முதல் வானவர், "யாருடைய ஹஜ்ஜு ஒப்புக் கொள்ளப்பட வில்லையோ அவர்களைப்பற்றி அல்லாஹ் என்ன முடிவு செய்தான்?" என வினவினார். 

அதற்கு மற்றவர் "அவன் கருணையாளன்; தாராள மனப்பான்மையோடு நடந்து கொண்டான்; ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்பட்டஒவ்வொருவரின் பொருட்டால் ஒரு லட்சம் நபர்களின் ஹஜ்ஜை ஏற்றுக் கொண்டான்" என பதிலளித்தார்.

அல்லாஹ் தன் தனிப்பெருங் கிருபையால் யாருக்கு வேண்டுமானாலும் அருள்பாலித்து தனது அன்பு அரவணைப்பில் அணைத்துக் கொள்வான்.

நூல் : ரவ்ழுர் ரைய்யாஹீன்

இந்த நிகழ்ச்சி புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் வரும் ஒரு ஹதீஸை ஒத்து இருக்கிறது.

"இவருடைய கண்கள் உறங்குகிறது; ஆனால் இவருடைய இதயம் விழித்திருக்கிறது" என்கிற நபிமொழியே நீங்கள் வாசித்திருக்க கூடும்.

புகாரி 1147, 3570, முஸ்லிம் 738 , ஆகிய எண்களில் இந்த நபி மொழியை நீங்கள் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்