தமிழகத்தின் முதல் ஹாஜி
தமிழகத்தின் முதல் ஹாஜி
==========================
===========================
|
|
|
இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும் சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal ) என்பவர் ஆவார்.
இவரது ஆணைப்படியே இந்தியாவில் முதல் மஸ்ஜித் கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மஸ்ஜித் என்று அழைக்கப்படும் இந்த மஸ்ஜிதே உலகின் இரண்டாவது ஜும்மா மஸ்ஜித் ஆகும்.
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா அவர்கள் தொன்மையான சேர வம்சத்தை சேர்ந்தவர்; தென் தமிழகத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது.
அப்போது சேரநாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துசெல்ல இருந்தனர்.
நிலவை பிரிக்கும் அதிசயம் :
============================
மக்காவில் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாகப் பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதைக் கண்டார்கள்.
இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.
அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த அரேபியர் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தம் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்.
அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும், அவர் பெயர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்ப வைப்பதற்காக இந்த நிலவை பிரிக்கும் அதிசயத்தை நடத்தியதாகவும் கூறி
اقْتَرَبَتْ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ
உலக அழிவு நாள் நெருங்கி விட்டது சந்திரன் பிளந்து விட்டது என்கிற திருக்குர்ஆன் வசனத்தை ஓதி காட்டினார்கள்.
இதைக் கேட்டதும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரேபியர்களிடம், தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மக்காவுக்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டார்.
ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த நபித்தோழர்கள் தாங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.
இஸ்லாத்தை ஏற்றல் :
====================
தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார்.
(அதில் ஒரு பிரிவினர் கொச்சின் ராயல் பேமிலி என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).
அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த நபித்தோழர்களான கூட்டத்தாருடன் தனது நெருங்கிய நண்பர்களோடும் அறிஞர்களோடும் புடை சூழ மக்கா புறப்பட்டுச் சென்றார்.
அங்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் லுஹர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்ட பிறகு ஸஃப்புகளை பிரித்துக் கொண்டு கடைசி ஸஃபுக்கு வந்து, ஒருவர் மட்டும் நிற்கிற அளவிற்கு இடை வெளியை ஏற்படுத்தி மற்றவர்களை விலகி நிற்க ஏற்பாடு செய்துவிட்டு முன் சென்று தொழ வைத்தார்கள்.
ஏற்கனவே ஸஹாபாக்களின் கரங்களில் முஸ்லிமாக ஆகி இருந்த சேரமான் பெருமாள் அவர்கள் அந்த இடைவெளியில் நின்று தொழுகையை நிறைவு செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் எழுந்து நின்று, "இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் என் அன்பு சகோதரரே வருக! வருக!!" என அழைத்தார்கள்.
சேரமான் பெருமாள் அவர்கள் தம் காதுகளில் பெரிய கடுக்கன்களை போட்டு, அரச உடையோடு எழுந்துச் சென்றார்கள்.
அந்த ஆடையையும் காதில் இருந்த கடுக்கனையும் பார்த்த சில நபித் தோழர்கள் சிரித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "இவரைப் பார்த்தா நீங்கள் சிரிக்கிறீர்? நீங்கள் அனைவரும் என்னை பார்த்து முஸ்லிமானீர்; இவர் என் ஒரு அற்புதத்தை பார்த்து முஸ்லிமாகி என்னை சந்திக்க வந்திருக்கிறார்" என பெருமிதமாகக் கூறினார்கள்.
சேரமான் பெருமாள் அவர்கள் நபிகள் நாயகத்தின் கரங்களில் மீண்டும் ஒரு முறை கலிமாவை சொல்லி தன்னை இஸ்லாத்தில் நிலைநிறுத்திக் கொண்டார்கள்.
عن أبي سعيد الخدري - رضي الله عنه - قال: ثم أهدى ملك الهند إلى رسول الله صلى الله عليه وسلم - جرة فيها زنجبيل، فأطعم أصحابه قطعة، قطعة، وأطعمني منها قطعة. رواه الحاكم
அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது;
இந்திய அரசர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ஜாடியை அன்பளிப்பாக வழங்கினார். அதில் இஞ்சி கலந்த ஊறுகாய் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் சிறிதளவு சாப்பிட்ட பிறகு தன் தோழர்களுக்கு கொடுத்து, அனைவருக்கும் வழங்கும்படி கூறினார்கள். அவ்வாறே அங்கிருந்த அனைவருக்கும் சிறிதளவு வழங்கப்பட்டது. அதில் எனக்கும் சிறிது அளவு வழங்கப்பட்டது" என அறிவிப்பாளர் கூறுகிறார்.
நூல் : ஹாகிம்
பின்னர் சேரமான் பெருமாள் அவர்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் அங்கு பல மாதங்கள் தங்கி இருந்து நபி (ஸல்) அவர்களுடனோ அல்லது அதற்கு முந்தைய ஆண்டு அபூபக்கர் (ரலி) அவர்களுடனோ சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள்.
இறப்பு :
========
சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (Jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்து வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு இஸ்லாம் மார்க்கத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் தலைமையில் பலரை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார்கள் .
ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள ஸலாலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
மாலிக் பின் தீனார்
அவர்கள் இந்தியா வருகை
==============================
பின்னர் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு, சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர்.
அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மஸ்ஜித்களை கட்டுமாறும் பனித்திருந்தார்.
அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மார்க்கத்தை பரப்புவதற்கும் மஸ்ஜித்களை கட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மஸ்ஜிதை கட்டினார்.
அதன் பிறகு மேலும் பல மஸ்ஜித்களை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.
**************
மேற்கண்ட தகவல்களை மர்ஹூம் மௌலானா என். எஸ். என். அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தம் புரவலர் போர்த்திய பொன்னாடை நூலிலும் ,
மர்ஹூம் எஸ். எஸ். அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தம் தஃப்ஸீரிலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் ஆதாரத்திற்கு கீழ்காணும் வெப்சைடுகளை காணுங்கள்.
https://www.facebook.com/share/p/1DnSJkL4cf/
https://www.islamweb.net/ar/fatwa/249724/%D9%85%D8%A7-%D9%85%D8%AF%D9%89-%D8%B5%D8%AD%D8%A9-%D9%82%D8%B5%D8%A9-%D9%85%D9%84%D9%83-%D9%85%D8%A7%D9%84%D8%A7%D8%A8%D8%A7%D8%B1-%D8%A7%D9%84%D8%B0%D9%8A-%D8%B4%D8%A7%D9%87%D8%AF-%D8%A7%D9%86%D8%B4%D9%82%D8%A7%D9%82-%D8%A7%D9%84%D9%82%D9%85%D8%B1-%D9%88%D8%A3%D8%B3%D9%84%D9%85
https://www.al-jazirah.com/2022/20220429/cm8.htm
https://www.nidaulhind.com/2015/10/blog-post_29.html?m=1
https://ne3matullah.wordpress.com/2010/03/22/tajudhin-al-hindi-raliya-allahu-anhu/#commentform
https://sandith-in.translate.goog/2016/08/28/166/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=imgs
Comments
Post a Comment