சுத்த வரிங்களா?
ஹாஜிகளின் சேவையில்........13
=================================
சுத்த வரிங்களா?
சுத்துரவங்களுக்கு நன்மை :
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ينزل كل يوم على حجاج بيته الحرام عشرين ومائة رحمة ستين للطائفين وأربعين للمصلين وعشرين للناظرين". رواه البيهقي
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜு செய்ய வருகை தந்திருக்கும் ஹாஜிகள் மீது அல்லாஹ் ஒவ்வொரு நாளும் நூற்றி இருபது வகையான அருளை இறக்குகின்றான். கஅபாவை தவாஃப் செய்பவர்கள் மீது அறுபது ரஹ்மத்தும், கஅபாவில் தொழுவோர் மீது நாற்பது வகை ரஹ்மத்தும், கஅபாவை பார்த்துக் கொண்டிருப்பவர் மீது இருபது வகை ரஹ்மத்தையும் இறக்குகின்றான்.
நூல்: பைஹகீ
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، قَالَ : سَمِعْتُ رَسُول اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ يَقُولُ : مَنْ طَافَ بِالْبَيْتِ ، وَصَلَّى رَكْعَتَيْنِ ، كَانَ كَعِتْقِ رَقَبَةٍ.
இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் .
நூல்: முஸ்னது அஹ்மத்
முதன் முதலாக கஃபாவை சுற்றியவர் யார்?
فقد ذكر الإمام القرطبي قولين في هذه المسألة: القول الأول: أن أول من أسس البيت الحرام هم الملائكة ثم طافوا به. القول الثاني: أن أول من أسسه آدم عليه الصلاة والسلام ثم طاف به أيضاً، وذكر الإمام ابن كثير في تفسيره ما معناه: أن الله تعالى أرسل جبريل إلى آدم يأمره ببناء الكعبة فبناها، ثم أُمِرَ بالطواف بها وقيل له أنت أول الناس وهذا أول بيت وضع للناس
இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் முதன் முதலாக தவாஃப் செய்தது யார் என்பது குறித்து இரு கருத்துக்களை கூறுகிறார்கள்.
1. முதன் முதலாக வானவர்களை கொண்டு அல்லாஹ் கஅபாவிற்கு அஸ்திவாரம் அமைத்து பின்னர் அதை தவாஃப் செய்யுமாறு ஆணையிட்டான். அவர்கள் கஅபாவை தவாஃப் செய்தார்கள்.
2. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜிப்ரயீல் (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்களிடம் அனுப்பி கஅபாவிற்கு அஸ்திவாரம் அமைக்கச் சொன்னான்.
ஆதம் (அலை) அவர்கள் அஸ்திவாரம் அமைத்ததும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் "நீங்களே இந்த பூமியின் முதல் மனிதர், இந்த கஅபாவே மனிதர்கள் இறைவனை வணங்கி வழிபட அமைக்கப்பட்ட முதல் ஆலயம் .
எனவே, முதல் மனிதரான நீங்கள் கஅபாவைச் சுற்றி முதலில் வலம் வாருங்கள்! இது அல்லாஹ்வின் கட்டளை" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ஆதம் (அலை) அவர்கள் தவாஃப் செய்தார்கள்.
عن ابن عمر رضي الله عنهما ، : (مَنْ طَافَ أُسْبُوعًا ، يُحْصِيهِ ، وَصَلَّى رَكْعَتَيْنِ : كَانَ لَهُ كَعِدْلِ رَقَبَةٍ) . قَالَ : وَسَمِعْتُهُ يَقُولُ : (مَا رَفَعَ رَجُلٌ قَدَمًا وَلَا وَضَعَهَا : إِلَّا كُتِبَتْ لَهُ عَشْرُ حَسَنَاتٍ ، وَحُطَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ ، وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ) .
ولفظ الترمذي : (لَا يَضَعُ قَدَمًا وَلَا يَرْفَعُ أُخْرَى : إِلَّا حَطَّ اللَّهُ عَنْهُ خَطِيئَةً ، وَكَتَبَ لَهُ بِهَا حَسَنَةً). وصححه الألباني في "صحيح الترمذي" .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எவர் கணக்கிட்டு ஏழு முறை தவாஃப் செய்து விட்டு இரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்கு ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மை கிடைக்கும்"
"தவாஃப் செய்வதற்காக ஒரு காலை உயர்த்தி இன்னொரு காலை பூமியில் ஒருவர் வைக்கும் முன்பாக பத்து நன்மைகள் அவருக்கு எழுதப்படுகிறது. பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படுகிறது"
நூல்: திர்மிதீ, நஸாயீ, அஹ்மத்
Comments
Post a Comment