தலைப்பு இல்லை
https://www.facebook.com/100047768203982/posts/248388990096706/
இன்று O. M . ஹள்ரத் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். "கொரானா காலம் எப்படி கழிந்தது? நீங்கள் பயான் செய்வதற்காக தினமும் பயணத்திலேயே இருப்பீர்களே? எப்படி நான்கு சுவருக்குள் இருந்தீர்கள்?" எனக் கேட்டேன்.
ஹள்ரத் அவர்கள் சொன்னார்கள்." நீங்கள் சொல்வது உண்மைதான், நானெல்லாம் ஒரு மாதம் வீட்டுக்குள் மட்டுமே இருக்க முடியுமா என பலமுறை யோசித்ததுண்டு. அது முடியாது என நானே சொல்லிக் கொண்டதும் உண்டு.
ஒரு மாதம் வீட்டிலிருக்க வேண்டும் என நான் பலமுறை ஆசைப்பட்டிருக்கிறேன். கொரானா காலம் வந்ததும் நான் ஆசைப்பட்டதை அல்லாஹ் அமைத்துக் கொடுத்தான் என்று எண்ணி சந்தோசப்பட்டேன்.
ஒரு மாதம் வீட்டிலிருக்க ஆசைப்பட்ட எனக்கு அல்லாஹ் பத்து மாதம் - ஒன்றுக்குப் பத்தாக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான். இதனால் மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.
அதேபோல ஒரு மாதம் தனிமையில் வீட்டில் இருக்க முடியுமா எனவும் நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். அப்படி ஒரு மாதம் கிடைத்தால் அதை நாம் எப்படி கழிப்பது என யோசித்தும் இருக்கிறேன். எனவே கிடைத்த இந்த பத்து மாத காலத்தை நான் யோசித்தது போல் பயன்படுத்திக்கொண்டேன்.
முன்னர் வாழ்ந்த பல இறைநேசர்கள் காடுகளில், தனிமையில் வாழ்ந்ததாக நான் படித்திருக்கிறேன். அதுபோல் தனிமையில் நானும் இருக்க ஆசைப்பட்டிருக்கிறேன். அந்த ஆசைகள் இந்த கொரானா காலத்தில் நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்!
"நீங்கள் அந்த பத்து மாதத்தை எப்படி பயன்படுத்தினீர்கள் " என கேட்டேன்.
இறைநேசர்களை போல் இரவெல்லாம் தொழுதேன். தஸ்பீஹ், திக்ர், திலாவதுல் குர்ஆன் என ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி அமல்கள் செய்து வந்தேன். புதிது புதிதாக தஸ்பிஹ், திக்ர், ஸலவாத் என உருவாக்கி, அவற்றை பல முறை தினமும் ஓதி வந்தேன்.
இதுவெல்லாம் இறைவனை நெருங்க நான் எடுத்த முயற்சிகள். கடந்த 72 ஆண்டுகளில் நான் எந்த அளவு இறைவனை நெருங்கி இருப்பேனோ அதைவிட பன்மடங்கு தூரம் இந்த பத்து மாதத்தில் இறைவனை நெருங்கி இருக்கிறேன் என உணருகிறேன்.
எனது வயதான காலத்தில் இபாதத்தோடு கூடிய இப்படி ஒரு தனிமை எனக்குக் கிடைத்தது இறைவன் எனக்கு வழங்கிய அருள்களில் மிகப் பெரியது என நான் கருதுகிறேன்.
கார், பஸ், இரயில், விமானம் ஆகியவற்றில் பயணிக்கும்போது கிடைக்கும் நேரத்தில் நான் அதிகம் திக்ருகள் மற்றும் வளாயிஃப்புகள் ஓதுவேன். இப்படி ஓதுவதற்கு பயணத்தில் தான் நேரம் கிடைக்கும்.
ஓதுவதற்கு நேரம் கிடைக்கிறது என்பதற்காக பயணங்களை நான் விரும்பி மேற்கொண்டேன். ஒருகட்டத்தில் பயணிப்பதே சிரமமாக ஆனபோதுதான் ஒரு மாதம் ஓய்வு கிடைக்காதா என ஏங்கினேன். அல்லாஹ் பத்து மாதங்களை கொடுத்தான். நானும் அந்த நாட்களை முறையாக பயன்படுத்திக் கொண்டேன்.
"ஹள்ரத்! நீங்கள் புதிது புதிதாக கண்டுபிடித்த துஆ, ஸலவாத், திக்ரு ஆகியவற்றை எனக்கும் சொன்னால் நானும் ஓதுவேனே" என்று கேட்டேன்.
அதற்கு ஹள்ரத் அவர்கள், சிரித்துக்கொண்டே அதையெல்லாம் இப்ப கேட்காதீங்க! நான் சொல்லமாட்டேன், பிறகு பார்த்துக் கொள்வோம்" என்று சொன்னார்கள்.
நான்,
"சொல்லுங்க ஹள்ரத்!
சொல்லுங்க ஹள்ரத்!"
என கெஞ்சினேன்.
"நான் உங்களுக்கு சொல்லாம இருப்பேனா? இப்ப ஃபோனில் வேண்டாம் பிறகு நேரில் பேசிக் கொள்வோம்" என்று சொன்னார்கள்.
"மேலும் எங்கிட்ட இருந்து அந்த இரகசிய வார்த்தைகளை கரக்காமலா விட்டுவிட போகிறீர்கள்" என்றும் சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.
நீங்கள் இந்த கொரானா காலத்தை எப்படி கழித்தீர்கள்? எப்படியும் இரண்டு, மூன்று புத்தகம் எழுதி இருப்பீர்களே? என்ன புத்தகம் எழுதினீர்கள்? என என்னைப் பற்றி
நன்கு தெரிந்து - புரிந்து வைத்திருந்த ஹள்ரத் அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.
நான் சொன்னேன். கடந்த பிப்ரவரி மாதம் பைத்துல் முகத்தஸ் சென்று வந்திருந்தேன். அந்த நினைவுகளோடு இருந்தேன்.
எனவே
"பைத்துல் முகத்தஸ்
மஸ்ஜிதுல் அக்ஸா வரலாறு"
எனும் நூலை 370 பக்கங்களில், இரண்டு அரபி நூல்களை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்த்திருக்கிறேன்" எனவும் ,
மேலும்
"லால்பேட்டை மன்பவுல் அன்வார் ஃபத்வாக்கள் ஓர் ஆய்வு"
எனும் நூலையும்,
எனது ஊர் சம்பந்தமாக,
"வரலாற்று ஒளியில் பெரிய வடகரை " என்ற ஒரு நூலையும் எழுதி இருக்கிறேன் "என்று சொன்னேன்.
அதற்கு ஹள்ரத் அவர்கள், "அப்ப! உங்க பத்து மாதமும் பயனுள்ளதாகவே கழித்திருக்கிறீர்கள் போல தெரிகிறது. பத்து மாதத்தில் மூன்று புத்தகங்களை பிரசவித்திருக்கிறீர்கள். அல்லாஹ்! உங்கள் நேரத்தில் பரகத் செய்யட்டும்" என்ற பிரார்த்தனையோடு எங்கள் உரையாடல் முடிவுற்றது.
இதைப் படித்த ஒவ்வொருவரும்
ஓ. எம். ஹள்ரத் அவர்களுக்கு
அல்லாஹ் நீண்ட ஆயுளையும், நோய்நொடி இல்லாத வாழ்க்கையையும், உலக வாழ்வாதாரங்களையும்
எல்லாம் வல்ல அல்லாஹ்
நிரப்பமாக அருள நீங்கள்
பிரார்த்திக்க வேண்டும் என
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும்
எனக்கும்
மேற்கண்ட துஆக்களை
தாங்கள் செய்வதோடு, எனது நூல்கள் சிறப்பாக வெளிவர உங்கள் துஆவை எதிர்பார்த்தவனாக ......
அன்புடன்
உங்கள் சமுதாய ஊழியன்
கலீலுர் ரஹ்மான்
25/2/2021
Comments
Post a Comment