ஹுசைன் அஹமது மதனி (ரஹ்) அவர்கள் :
ஹுசைன் அஹமது மதனி (ரஹ்) அவர்கள் :
ஹிஜ்ரி 1317 ஆம் ஆண்டு ஹள்ரத் ஷைகுல் இஸ்லாம் ஹுசைன் அஹமது மதனி (ரஹ்) அவர்கள் ஹஜ் செய்துவிட்டு மதீனாவில் வந்து தங்கி இருந்த ஓர் இரவில் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்கள்.
அந்தக் கனவில் நபி (ஸல்) அவர்கள், "உமக்கு என்ன வேண்டும்?" என்று வினவினார்கள். அதற்கு ஹுசைன் அஹமது மதனி (ரஹ்) அவர்கள், "நான் படிக்கும் நூல்கள் என் நினைவுக்கு வந்து விட வேண்டும்; நான் வாசிக்காத நூல்களை வாசித்ததும் அது எனக்கு எளிதில் புரிந்திட வேண்டும்; நினைவாற்றலும் அதை விளக்கிச் சொல்லும் ஆற்றலும், பிறர் புரிந்து கொள்ளும் வகையில் பேசும் வல்லமையும் எனக்கு கிடைக்கப்பெற வேண்டும்" என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் உதவியோடு அது உமக்கு கிடைத்துவிட்டது" என்று கூறினார்கள்.
நூல் : ஸலாஸிலே தய்யிபா
Comments
Post a Comment