பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளரே! வருக!! வருக!!!
நபி ஸல் அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 6
தொடர் : 41
பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளரே! வருக!! வருக!!!
===========================
நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அபூ யஹ்யா பின் நபாதா (ரஹ்) அவர்கள் தம் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஜும்ஆ உரையின் மூலம் மிகப்பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இவர்களைப் போன்று ஜும்ஆ பிரசங்கத்தை அறிவார்ந்த முறையிலும், அறிவியல் சார்ந்த ஆதாரங்களின் அடிப்படையிலும் அந்த நூற்றாண்டில் யாரும் பேசியதாக வரலாறு இல்லை.
இவர்கள் ஒரு ஜும்ஆ நாளில் கனவில் பிரசங்கம் செய்வது போன்று கனவு கண்டார்கள்.
அந்தக் கனவை நான் விவரிக்கிறேன்; சனிக்கிழமை இரவு நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடைய தோழர்கள் நிறைந்த ஒரு கூட்டத்தினரையும் ஓர் கபர்ஸ்தானில் வைத்து நான் பார்த்தேன்.
நான் அவர்களை முன்னோக்கி சென்ற பொழுது, "பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளரே வருக! வருக!! " என நபி (ஸல்) அவர்கள் என்னை வரவேற்றார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் அடக்கத் தலங்களை சுட்டிக்காட்டி, "பேச்சாளரே! இவர்கள் குறித்து என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்கள்.
இப்னு நபாதா (ரஹ்) ஆகிய நான் கூறினேன்; "இப்பொழுது இவர்களுக்கு எந்த சந்தோசமும் இல்லை; இவர்கள் செய்த செயல்களுக்கான நன்மையையோ தீமையையோ அணு அளவும் குறைவின்றி அனுபவித்து வருகிறார்கள்; இவர்கள் மீண்டும் உயிர்பெற்று வந்து வாழ்வதற்கும் வாய்ப்பில்லை;
இவர்கள் படைக்கப்பட்டதே மரணிப்பதற்கு தான்; அவர்களைப் பேச செய்தவனே அவர்களை இப்பொழுது மௌனிதிருக்க செய்திருக்கிறான்; மரணித்திருக்கும் இவர்களை மீண்டும் உருவாக்கும் ஆற்றல் பெற்றவனாக அல்லாஹ் ஒருவன் மட்டுமே இருக்கின்றான்;
இங்கே தனித்தனி கப்ருகளில் பிரிந்து கிடக்கும் இவர்களை அல்லாஹ் மறுமையில் ஒன்றாக எழுப்பி நிறுத்துவான்.
தன் உரையின் இறுதியில் " நீங்கள் பிற மனிதர்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக 2 : 143 எனும் வசனத்தை ஓதி காட்டும் பொழுது நபி (ஸல்) அவர்களோடு இருந்த நபித்தோழர்களை சுட்டி காட்டினேன்;
இந்தத் தூதர் உங்களுக்கு சாட்சியாகவும் இருக்கிறார் 2 : 143 எனும் வசனத்தை ஓதி காட்டி நபி ஸல் அவர்களை சுட்டிக்காட்டினேன்.
இவ்வாறு நான் என் உரையை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், "மிகச் சிறப்பாக செய்தீர்" என சொல்லி எனது முகத்தில் முத்தமிட்டார்கள்; மேலும் எனது வாயில் தன் உமில் நீரை துப்பினார்கள்; "அல்லாஹ் உமக்கு போதுமானவன்" என்று பிரார்த்தனையும் செய்தார்கள். பின்னர் நான் விழித்துக் கொண்டேன்.
இந்த செய்தியை அறிவிக்கும் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்தக் கனவு அவர்களுக்கு மிகப் பெரும் நிகழ்வு, மிகப்பெரும் சந்தோஷத்தை வழங்கியது;
இந்தக் கனவை கண்ட பிறகு அவர்களின் முகத்தில் ஒளியும் சந்தோசமும் கரை புரண்டோடியது.
இந்தக் கனவை கண்ட 18 நாட்களுக்குப் பிறகு அவர்கள் இறந்து விட்டார்கள்; இந்த நாட்களில் அவர்கள் எதையும் உண்ணவில்லை;
ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தம் உமிழ்நீரை ஊட்டிய பரக்கத்தின் பொருட்டால் பசி ஏற்படவே இல்லை; அவர்கள் மரணிக்கிற வரை அவர்களின் மீது கஸ்தூரி மனம் கவிழ்ந்து கொண்டே இருந்தது.
நூல் : வஃபயாதுல் அஃயான், ஷதராதுத் தஹப், அல் பிதாயா வந் நிஹாயா.
Comments
Post a Comment