புதுப்பொலிவுடன் திருக்குர்ஆன் தமிழுரை மறு வெளியீட்டு விழா :
புதுப்பொலிவுடன் திருக்குர்ஆன்
தமிழுரை மறு வெளியீட்டு விழா :
மவ்லவீ, ஆஷிகே ரசூல், O.M. அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் அவர்களும் மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் ஆகிய நானும் திருக்குர்ஆன் தமிழுரை 2018 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு செய்து இருந்தோம்; அதை அமானத் அறக்கட்டளை முதன் முதலில் வெளியிட்டு இருந்தது.
ஒவ்வொரு முறையும் மறு பதிப்பு செய்யும் பொழுது உலகம் முழுவதிலும் இருந்து பலர் சொன்ன தமிழ் திருத்தங்களை சரி செய்து வெளியிட்டு வருகிறோம்.
ஒவ்வொரு முறையும் புதிய பதிப்பு வெளிவரும்போது O.M. ஹள்ரத் அவர்களும் நானும் தனித்தனியாக திருக்குர்ஆன் தமிழ் தர்ஜுமா முழுவதையம் வாசித்து திருத்தங்களை செய்வோம்.
பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து அது குறித்து ஆலோசித்து முடிவெடுத்ததை பதிவு செய்வோம்.
அந்த வகையில் கடந்த பதினைந்து வருடங்களாக மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து வருகின்றோம். தர்ஜுமாவை கவனித்துக் கொண்டும் இருக்கின்றோம்.
ஒவ்வொரு முறையும் பிரிண்டிங்கிற்கு அனுப்பிய பிறகு கம்ப்யூட்டரில் கண்ணுக்குத் தெரியாத சில மாற்றங்கள் ஏற்பட்டு பிரிண்டாகி விடும்.
அப்பொழுது பார்த்தால் ஒரு வரியின் கடைசியில் இருக்க வேண்டிய கமா இரண்டாவது வரியின் தொடக்கத்தில் கமா, அடைப்புக்குறி, முற்றுப்புள்ளி போன்றவைகள் வந்துவிடும்.
இதையும் கவனித்து சிலர் நமக்கு சொன்னார்கள்; அவை அனைத்தும் ஒவ்வொரு முறையும் திருத்தம் செய்து வெளியிட்டு வருகின்றோம்.
அல்லாஹ்வின் பெரும் கருணையின் பொருட்டால் மீண்டும் புது பொலிவுடன், 1732 பக்கங்கள், தரமான தாள், கெட்டி அட்டை மற்றும் கண் கவரும் வண்ணத்தில் தரமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதன் விலை 700/ ரூபாய் ஆகும். அனைத்து இஸ்லாமிய பதிப்பகங்களிலும் திருக்குர்ஆன் தமிழுரை கிடைக்கும். வாங்கி வாசியுங்கள்! பள்ளிவாசல் மற்றும் மதரஸாக்களுக்கு வாங்கி அன்பளிப்பு செய்யுங்கள்.
தொடர்புக்கு ...+919841160044
முதல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் மற்றும் அது சார்ந்த செய்திகள் :
https://chittarkottaisunnathjamath.blogspot.com/2018/07/om_30.html?m=1
https://chittarkottaisunnathjamath.blogspot.com/2018/07/om.html?m=1
Comments
Post a Comment