ரகசியமான செய்தி ! விரும்புவோர் ரகசியத்தை தெரிந்து கொள்ள வாருங்கள்

இந்த வருடம் ஏப்ரல் 12 ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள ஒன்று கூடினர். 

"அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டேன்" என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள்" என்று அமெரிக்கா கேட்டது. 

அதற்கு இஸ்ரேல் ஒன்பது நாட்டினர் நியூக்ளியர்  வைத்திருக்கிறார்கள்; நான் ஏன் இதில் கையெழுத்து போட வேண்டும்? ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக மட்டுமே அணுவை பயன்படுத்துவேன்; நீங்கள் கேட்பது போன்று ஒப்புக்கொண்டு கையொப்பம் இடம் முடியாது" என கூறியது. 

உடனே அமெரிக்கா, "அப்படி என்றால் இன்னும் 60 நாள் அவகாசம் தருகிறேன்; அதற்குள் கையொப்பம் இடவில்லை என்றால் போர் தொடுப்போம்" என கூறியது 

அதைப்போல் ஜூன் 13 ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் இஸ்ரேல் ஈரானை தாக்கியது. 

இந்த தாக்குதல் இஸ்ரேலில் இருந்து ஏவுகணைகளை ஈரான் மீது தாக்க வில்லை. 

இஸ்ரேலியர் ஈரானுக்குள் ஊடுருவி வந்து ஈரானை தாக்கினர். அந்த வகையில் இந்த தாக்குதல் சற்று வித்தியாசமானது. 

ஆமாம்! இரண்டு வருடங்களுக்கு முன்பே தன் உளவு அமைப்பான மொசாத்தை சேர்ந்த உளவுத்துறையினர் 100 பேரை ஈரானுக்குள் அனுப்பியது; அதில் ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். 

மிகத் துல்லியமாக ஈரானின் முக்கிய இடங்களை கண்டறிந்து மேப்புகளை தயார் செய்து புகைப்படங்களோடு மொசாத்துக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த ஆவணங்களின் அடிப்படையில் ஜூன் 13 அன்று மொசாத் ஈரானுக்குள் இருந்தே ஈரானை தாக்கியது. 

இது மொசாத்தின் திறமை என்றும் புத்திசாலித்தனம் என்றும் ஊடகங்கள் போற்றினாலும் மொசாத்தின் வருகையும் அதன் நடமாட்டங்களையும் ஈரான் தெரிந்து கொண்டே அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது. 

ஈரான் எதிர்பார்த்தது போன்றே அவர்கள் முதன் முதலில் தாக்குதலை நடத்தினார்கள்.

அதிலிருந்து நூல் பிடித்தார் போல் ஈரான் ராணுவம் திட்டமிட்டு இருந்ததை இன்று வரை மிகச் சரியாக செய்து கொண்டு வருகிறார்கள். 

இதுவரை 31 மொசாத் உளவுத்துறையினரை கைது செய்து தூக்கிலிட்டு இருக்கிறார்கள். இன்னும் 13 பேர் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றும் பலர் தேடப்பட்டு வருகிறார்கள். 

சிலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று தன் உயிரை பாதுகாத்துக் கொண்டதாக நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களையும் கொள்ள ஈரான் ராணுவம் ஆட்களை அனுப்பி வைத்திருப்பதாக ஈரான் அரசு கூறுகிறது.

ஈரான் இரண்டாவது நாளில் மொசாத்தின் தலைமையகத்தை அடித்து முதலில் எலும்பு கூடாக நிற்க வைத்தது. 

பின்னர் எலும்புக்கூடையும் நொறுக்கி மொசாத் தலைமையகம் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் ஆக்கிவிட்டது.

எந்த மொசாத்தை மிகப்பெரிய அறிவாளி, உளவாளிகள் என்று உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றதோ அவர்களால் தான் இன்று இஸ்ரேல் அழிந்து கொண்டிருக்கிறது. 

மூன்று நாட்களுக்கு முன்பு எனது முகநூலில் இஸ்ரேல் குறித்து ஒரு தகவலை எழுதிவிட்டு அதற்கு பலம் சேர்க்கும் விதமாக எலும்பு கூடாக இருந்த மொசாத் தலைமையக  உருக்குலைந்த கட்டிடத்தின் புகைப்படத்தை போட்டு இருந்தேன் .

இரண்டு நாட்களுக்குப் பிறகு தாங்கள் பதிவிட்டுள்ள புகைப்படம் யூகத்தின் அடிப்படையில் பதிவிட்டு இருக்கிறீர்கள் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை இந்த படத்தை டெலிட் செய்து விடுங்கள் என facebook நிறுவனம் எனக்கு குறுஞ்செய்தியை அனுப்பியது. 

நான் அதைக் கண்டு கொள்ளவில்லை. 24 மணி நேரத்திற்கு பிறகு அந்த புகைப்படத்தை தெரியாதவாறு அவர்கள் மறைத்து விட்டார்கள். 

முகநூலில் எனக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றது. ஒன்றில் மறைத்து விட்டார்கள் ஒன்றில் அந்த புகைப்படம் இருக்கின்றது. 

பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர்கள் நான்கு பேர் இருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் யூதர்கள். ஒருவர் தன் மதத்தை வெளி காட்டிக் கொள்ள விரும்பவில்லை. 

நான் போட்ட புகைப்படத்தை எனது முகநூலில் 7000க்கும் மேற்பட்டவர்கள் இருந்தாலும் ஆயிரம் பேர் மட்டுமே  பார்த்திருப்பார்கள்.

ஆனால் பேஸ்புக் காரன் சரியாக பார்த்துவிட்டு எனது புகைப்படத்தை மறைத்திருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிவாளியாக இருப்பதைவிட 
அன்பாளியாக இருந்து பார் 
அதில் அநேக லாபம் உண்டு என்று அரபி பழமொழி ஒன்று உண்டு !

https://www.facebook.com/share/p/12Hf4Mtivhc/

20 சேர் 30 லைக் இரண்டு கமெண்ட் பெற்றுள்ள இந்தக் குறுந்தகவலை பேஸ்புக் நிறுவனம் எப்படி கண்காணிக்கிறது என்பதை கவனியுங்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்