எனக்கு நபிகள் நாயகம் அவர்கள் ஸலாம் சொல்லி அனுப்பினார்களா?
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 7
தொடர் : 46
என்ன காரணமாக இருக்கும்?
∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆
முஹம்மது பின் யஹ்யா அல் குர்மானீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; அபூ அலீ பின் ஷாதான் (ரஹ்) அவர்களிடம் நானும் வேறு சிலரும் இருந்தோம்; அப்பொழுது ஒரு இளைஞர் எங்களிடையே வந்தார்; அவர் யார் என்று எங்களில் யாருக்கும் தெரியவில்லை; இந்நிலையில் அவர் எங்களுக்கு ஸலாம் சொன்னார்.
பின்னர் உங்களில் யார் அபூ அலீ பின் ஷாதான் (ரஹ்) எனக் கேட்டார்; நாங்கள் சம்பந்தப்பட்டவரை சுட்டிக்காட்டினோம்.
அவர் அவர்களிடம் நெருங்கி வந்து, "ஷைகு அவர்களே! நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள் அபூ அலீ பின் ஷாதான் அவர்களை சந்தித்து எனது ஸலாத்தினை எத்தி வையுங்கள் என்று கூறினார்கள்; அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ"
பின்னர் அந்த இளைஞர் சென்றுவிட்டார்;
அபூ அலீ பின் ஷாதான் (ரஹ்)
அவர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள்.
அழுகையின் இடையே நபிகளாரின் இந்த வார்த்தையை நான் பெறுவதற்கான எந்த அமலையும் செய்ததாக நான் அறியவில்லையே! ஒரு சமயம் நான் ஹதீஸ்களை பொறுமையாக படிப்பதின் காரணமாக இருக்குமோ? அல்லது நபி (ஸல்) அவர்களின் நினைவு வரும் பொழுதெல்லாம் அவர்கள் மீது நான் ஸலவாத்து ஓதுவதின் காரணமாக இருக்குமோ" என்று கூறினார்கள்.
நூல் : அல் வாஃபீ பில் வஃபயாத்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
Blogger: Posts https://share.google/Z22JfjuBUunvwFzSs
Comments
Post a Comment