அறிவை நம்பி மோசம் போன அபூ ஜஹலின் வாரிசுகள் ட்ரம்பும் நெதன்யாகுவும்
அறிவை நம்பி மோசம் போன
அபூ ஜஹலின் வாரிசுகள்
ட்ரம்பும் நெதன்யாகுவும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட போது, "எங்களுடைய உளவு அமைப்பினரும் மொசாத் உளவு அமைப்பினரும் ஈரான் குறித்து தவறான புள்ளி விபரங்களை சொன்னதால்தான் போரில் இறங்கினோம்" என்று கூறினார்.
அதாவது கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக பொருளாதார தடை இருக்கின்ற இந்த ஈரானில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் இருக்காது, ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இருக்க மாட்டார்கள் என்று அமெரிக்க உளவுத்துறை மற்றும் இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையினர் அனைவரும் தனது அறிவால் சிந்தித்தும் யூகித்தும் கணித்ததை ரிப்போர்ட்டாக எழுதி அனுப்பி வைத்து விட்டார்கள்.
அதை, உண்மை என்று நம்பி தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் போரில் குதித்தது; ஆனால் இரண்டு நாடுகளும் புறமுதுகிட்டு ஓடுகிற அளவிற்கு ஈரான் தன் வல்லமையையும், ஆற்றலையும், அறிவையும் நிரூபித்து விட்டது.
இது இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வை ஒத்திருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது ஸவ்ர் குகையில் தங்கி இருந்தார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பதற்காக அல்லாஹ் சிலந்தி வலையை பின்னச் செய்தும், காட்டுப் புறாவை கூடு கட்டச் செய்தும் வைத்திருந்தான்.
நபி (ஸல்) அவர்களைத் தேடிக் கொண்டு ஸவ்ர் குகை வாசலுக்கு வந்த அபூ ஜஹலும் மற்றொருவனும் அந்தக் குகையை நோட்டமிட்டார்கள்.
அப்பொழுது உடன் வந்திருந்த நபர் அபூ ஜஹலிடம், "ஒரு சமயம் இருவரும் இந்த குகைக்குள் இருப்பார்களோ?" என்று கேட்டு கொண்டே குணிவதற்கு முனைந்தான் .
அப்பொழுது அபூ ஜஹல் அவனுடைய சட்டை காலரை பிடித்து, குனிய விடாமல் தடுத்து, அதன் நுழைவாயிலை சுட்டிக்காட்டி, "சிலந்தி வலை கிழியாமல் இருக்கின்றது; காட்டுப்புறா கூடுகட்டி முட்டையிட்டு வாழ்கிறது; அவர்கள் இருவரும் இதற்குள் செல்ல வேண்டுமானால் இந்த இரண்டு ஜீவன்களையும் அப்புறப்படுத்தி விட்டுதான் சென்று இருக்க வேண்டும்; எனவே அவ்விருவரும் இந்தக் குகைக்குள் இல்லை" என்று அபூ ஜஹல் அறிவாளித்தனமாக பேசினான்.
அதனால்தான் இவனுக்கு அபூ ஜஹல் - பெரிய முட்டாள் என நபிகள் நாயகம் அவர்கள் பெயர் சூட்டினார்கள்.
அந்த வகையறாவில் வந்தவர்கள் தாம் டொனால்ட் ட்ரம்பும், பெஞ்சமின் நெதன்யாகுவும்; மற்றும் அவ்விருவரின் உளவுத்துறையினரும்.
நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஈரானில் பொருளாதார தடை இருப்பதின் காரணமாக மட்டுமே அவர்கள் எந்த பலமும் இல்லாமல் இருப்பார்கள் என்று அறிவாளித்தனமாக யோசித்து முட்டாள்களாகி முச்சந்தியில் நிற்கிறார்கள்.
ஈரான் பயன்படுத்திய ராக்கெட்டுகளின் பெயர்கள்:
1. ஷஹாப்-1, குறுகிய தூர பாலிஸ்டிக் ராக்கெட்.
2. ஷஹாப்-2, (இது ஷஹாப்-1 ஐ விட மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு கொண்டது; மற்றும் அதிக தூரம் செல்லக்கூடியது.)
3. ஷாபின், (இது நடுத்தர தூர பாலிஸ்டிக் ராக்கெட்)
4. சஜ்ஜில், (இது இரண்டு நிலை திட எரிபொருள் ராக்கெட் ஆகும், இது அதிக தூரம் செல்லக்கூடியது.)
5. கைபர் பர்சான் (இது ஒரு நடுத்தர தூர பாலிஸ்டிக் ராக்கெட்)
6. ஸ்கட்-பி,
7. ஸ்கட்-சி,
8. ஃபாத்தே-110
போர் விமானங்கள் மூலம் போர் செய்யாமல், உட்கார்ந்த இடத்திலிருந்து போரை 12 நாட்கள் இரண்டு வல்லரசு நாடுகளையும் அலறவிட்ட ஈரான் உண்மையாகவே சுப்ரீம் ஸ்டார் தான்!
இரண்டு வல்லரசு நாடுகளிலும் இல்லாத ஆயுதங்கள் ஈரானிடம் இருப்பதைக் கண்டுதான் இரண்டு நாடுகளும் பின்வாங்கி இருக்கின்றன.
ஈரான் உடைய ஆயுதங்களின் விபரங்கள்
ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கின் அட்டவணை | ஈரான் கண்காணிப்பு https://share.google/wyrK1tVxSmAEd9WaJ
Comments
Post a Comment