நபிகள் நாயகம் அவர்களால் "ஷைகுல் ஹதீஸ் அவர்களே!" என அழைக்கப்பட்டவர் யார்?
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 7
தொடர் : 48
நபிகள் நாயகம் அவர்களால்
"ஷைகுல் ஹதீஸ் அவர்களே!" என அழைக்கப்பட்டவர் யார்?
===============================
இமாம் அப்துல் காதிர் ஷாதுலீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தன் நூலின் முன்னுரையில் கூறுகிறார்கள்.
ஜலாலுத்தீன் சுயூத்தி (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்; நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்; அப்பொழுது நபிகள் நாயகம் அவர்கள், "ஷைகுல் ஹதீஸ் அவர்களே!" என்று என்னைப் பார்த்து சொன்னார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! நான் சொர்க்கவாதிகளில் ஒருவரா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்!" என்று கூறினார்கள்.
"எந்த வேதனையும் இல்லாமல் நான் முந்தி சென்று விடுவேனா!" என்று மீண்டும் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த வாய்ப்பு உமக்குத்தான் உண்டு!" என்று கூறினார்கள்.
நூல் : அந்நூருஸ் ஸாஃபிர் அன் அக்பாரில் கர்னில் ஆஷிர், ஷதராதுத் தஹப்.
இமாம் அப்துல் காதர் ஷாதுலீ நாயகம் அவர்கள் விழித்த நிலையில் எழுபதுக்கும் மேற்பட்ட முறை நபி (ஸல்) அவர்களை கண்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கனவில் கண்டதாகவும் சில நூல்களில் பதிவாகி இருக்கின்றது.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
Blogger: Posts https://share.google/Z22JfjuBUunvwFzSs
Comments
Post a Comment