ஈரானில் தயார் நிலையில் அணு ஆயுதம்?
நேற்று இரவு ஈரான் அணுகுண்டு
சோதனை செய்து விட்டதா?
நேற்று இரவு பின் நேரம் ஈரானில் அணுமின் நிலையத்துக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள அணுமின் நிலையத்துக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருப்பதாகவும், பத்து கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மற்றொரு நிலநடுக்கம், செம்னான் மாகாணத்தில் இருந்து 22 மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இங்கு தான் விண்வெளி மையம் மற்றும் ஏவுகணை வளாகம் அமைந்துள்ளது.
மேலும், அதன் அதிர்வுகள் சோர்கே நகரைச் சுற்றிலும் உணரப்பட்டு உள்ளது. சோர்கே நகரம் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ளதாகும்.
இது நேற்றைய தினமலரில் வெளிவந்த செய்தி! இதை கீழுள்ள வெப்சைட்டில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
https://share.google/YoD2XXsR7U6KxsYYI
நிலநடுக்கமா
அணுகுண்டு பரிசோதனையா?
==============================
அணு ஆயுதம் தயாரித்து வைத்திருப்பவர்கள் அதை முதன் முதலில் சோதனை செய்து பார்ப்பார்கள்.
நிலத்தின் கடின தன்மையை பொறுத்து 100 மீட்டருக்கு குறைவில்லாமல் அதிகமான ஆழத்தில் அணுவை வைத்து வெடிக்கச் செய்வார்கள்.
அப்படி வெடிக்கச் செய்யும் பொழுது அந்த நிலப்பரப்பு மட்டும் சுமார் 5 லிருந்து ஆறு ரிக்டர் அளவிற்கு நில அதிர்வு ஏற்படும் என்பது பொதுவான விதி.
11 / 5/ 1998 ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனை செய்த போது 4.9 முதல் 5.2 ரிக்டர் அளவிற்கு நில அதிர்வு இருந்தது.
28 / 5/ 1998 அன்று பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையை பலுசிஸ்தானில் உள்ள சாகாய் மாவட்டத்தின் ராஸ்கோ மலைப்பகுதியில் நடத்தியது.
அப்பொழுது ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவில் நில அதிர்வு இருந்தது என்பது வரலாறு.
இப்பொழுது ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை படித்து பாருங்கள்; அது நிலை நடுக்கமா அல்லது அணு ஆயுத சோதனையா என்று புரியவரும்.
இரண்டு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இரண்டு இடமும் nuclear bom - அணு ஆயுதம் தயாரிக்கப்படும் அணுமின் நிலையங்களை மைய்யமாக கொண்டு ஏற்பட்டுள்ளதை அறிவீர்கள்.
அதன் ரிக்டர் அளவும் ஐந்திலிருந்து ஆறு வரை இருக்கின்றது.
எனவே வெற்றிகரமாக ஈரான் அணு ஆயுத சோதனையை இரண்டாவது முறையாக நடத்தி முடித்து இருக்கிறது என்பதே உண்மை!
ஏற்கனவே 5/ 10 / 2023 அன்று 27 கி.மி ஆழத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவாகி இருக்கின்றது.
உலக அரசியல் நோக்கர்களும், ராணுவப் படை தளபதிகளும் இவை இரண்டும் அணு ஆயுத பரிசோதனையை தான் ஈரான் நடத்தி முடித்திருக்கிறது என்று தெளிவாக நம்புகிறார்கள்.
மேலும் உங்களுக்கெல்லாம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொன்னது நினைவிருக்கும் என நினைக்கிறேன்.
"ஈரான் இன்னும் எட்டு நாட்களில் அணு ஆயுதத்தை தயாரித்து விடும் நிலையை எட்டியுள்ளது; எனவே அமெரிக்கா தலையிட வேண்டும்" என்று அவர் சொன்னது நினைத்துப் பாருங்கள்.
முதன் முதலில் இஸ்ரேல் அணு நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தியது. அதில் அணு கசிவு ஏற்பட்டுள்ளது; அந்த கசிவை சரிசெய்ய ரஷ்யா மற்றும் சைனா உதவி செய்து வருவதாகவும் நாம் ஊடகங்களில் செய்தியை பார்த்தோம்.
எனவே ஈரான் அணு ஆயுத நாடாக உருவெடுத்து விட்டது என்று அமெரிக்கா முதற்கொண்டு அணு ஆயுத நாடுகளான ஒன்பது நாடுகளுக்கும் நன்கு தெரியும்.
இந்த நிலையில் நேற்று இரவு அமெரிக்கா அணு ஆயுதம் இருப்பதாக சொல்லப்படும் மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகளை போட்டு அணு ஆயுதப் போருக்கு அடிகோல் நாட்டி இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய மூன்று அணு ஆயுத நாடுகளும் சண்டையை தொடர்ந்தால் உலகின் நிலை மற்றும் அதன் போக்கு எப்படி இருக்கும் என்று எந்த நிபுணர்களாலும் கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
மக்களையும் பொருளாதாரத்தையும் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.
இப்பொழுது மூன்றாவது உலகப் போர் மூலாது; ஏனெனில் இன்னும் புத்திசாலிகள் நாட்டில் இருக்கிறார்கள்; ஆட்சியாளர்களாகவும் இருக்கிறார்கள்.
எல்லா நாடுகளிலும் முட்டாள்கள் ஆட்சியில் இருக்கும்போது தான் மூன்றாவது உலகப்போர் மூலும்.
Comments
Post a Comment