மக்கா வெற்றி கொள்ளப்பட்ட இரவை போன்று இஸ்ரேலில்....
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட
இரவை போன்று இஸ்ரேலில்....
இந்த வீடியோவை முதலில் பார்த்துவிட்டு கீழ் இருக்கும் தகவலை படியுங்கள் :
நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்ள சென்றிருந்த போது அதற்கு முதல் நாள் இரவில் மக்காவை சுற்றி இருந்த மலைகளில் நபித்தோழர்கள் தங்கி இருந்தார்கள்.
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வொருவரும் இரண்டு அடுப்புகளை மூட்டி சமையல் வேலையைப் பாருங்கள் ; இயன்றவரை நள்ளிரவு வரை அடுப்புகள் அனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று உத்தரவிட்டிருந்தார்கள்.
இந்த உத்தரவின் உண்மையான நோக்கத்தை பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்களே என்பதற்காக அனைவரும் அதனைச் செய்தார்கள்.
மக்காவில் வாழ்ந்த இறை மறுப்பாளர்கள், குறைஷிகள் மற்ற அனைவரும் ஒவ்வொரு மலையிலும் அடுப்புகள் எரிவதைப் பார்த்து இலட்சக்கணக்கானவர்கள் வருகை தந்திருக்கிறார்கள் போலும் என்று எண்ணிக் கொண்டார்கள்.
ஏனென்றால் சமையல் செய்கிறவர்கள் ஐந்து பேர், பத்து பேர் சேர்ந்து தான் சமையல் செய்வார்கள்.
ஒரு அடுப்புக்கு ஐந்து பேர் என்றோ பத்து பேர் என்றோ வைத்துக் கொண்டாலும் இங்கே எரிகிற 20000 அடுப்புகளுக்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்று அவர்களாகவே ஒரு கணக்கை போட்டுக்கொண்டு அந்த இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தார்கள்.
அடுப்பு கணக்குகளை பிறரிடம் சொல்லி ஊர் முழுவதும் பயத்தை பற்ற வைத்தார்கள்.
அதனால் தான் மறுநாள் நபி (ஸல்) அவர்கள் மலைகளில் இருந்து இறங்கும்பொழுது எவரும் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை.
நபி (ஸல்) அவர்களின் அந்த சுன்னத்தையும், புத்திசாலித்தனத்தையும் பின்பற்றி ஈரான் ராணுவம் இரவு நேரங்களில் இஸ்ரேலை தாக்குகிறது.
இந்த காணொளியில் நீங்கள் காணும் குண்டின் பெயர் "கிளஸ்டர் பாலிஸ்டிக்.
இந்த ஏவுகணை தரையில் இருந்து ஏழு கிலோமீட்டர் உயரத்தில் வெடிக்கிறது;
அதிலிருந்து சுமார் 200 சிறிய குண்டுகள் பிரிந்து செல்கின்றன.
பிரிந்த ஒவ்வொரு குண்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான குண்டுகள் தேங்காய், மாங்காய் வடிவத்தில் வானில் சிதறி விழுகின்றன. இது இஸ்ரேலின் எட்டு கிலோமீட்டர் சுற்றளவில் விழுந்து மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த குண்டை உலக நாடுகள் பயன்படுத்தக் கூடாது என ஒப்பந்தங்கள் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஈரானும் இஸ்ரேலும் கையெழுத்து இட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான குண்டுகள் விழுவதைப் பார்க்கின்ற இஸ்ரேலியர்கள் அலறுகிறார்கள்; அச்சப்பட்டே பழக்கப்படாத இவர்கள் அச்சத்தின் உச்சத்திற்கு சென்று பைத்தியம் பிடித்ததுப் போன்று பிதற்றுகிறார்கள்.
இவ்வாறான குண்டுகளை பார்க்கின்ற இஸ்ரேலியர்களின் நிலை, ஃபதஹ் மக்கா இரவில் மக்கா இறை மறுப்பாளர்களும் குரைஷியர்களும் பார்த்தது போன்று இருக்கின்றது.
வினை விதைத்தவன்......
முற்பகல் செய்யின்......
மற்றொரு காணொளியில் யூதர்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறும் காட்சி....
தங்கள் நாட்டுத் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாததின் வெளிப்பாடு.....
Comments
Post a Comment