அணு குண்டு தயாரிப்பு ஃபத்வா என்ன?

அணு குண்டு தயாரிப்பது குறித்து இஸ்லாத்தின் ஃபத்துவா தீர்வு என்ன?
==================================

உலகத்தில் 195 நாடுகள் இருக்கின்றது. இவற்றில் ஒன்பது நாடுகளில் மட்டும் அணு ஆயுதங்கள் குறிக்கின்றன. இவற்றில் ஒரு இஸ்லாமிய நாடு பாகிஸ்தான் ஆகும்.

அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வது  யானையைக் கட்டித் தீனி போடுவது போல!  இதற்கான தொழிற்சாலை கட்டுமானம், அறிவியல் ஆய்வாளர்கள் சம்பளம் மற்றும் பல வழிகளில் ஆகின்ற செலவுகள் ஒரு நாட்டின் மொத்த வருவாயில் இரண்டு சதவீதத்தை ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக் கொள்ளும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அணுவின் பயன்கள் :
=====================

1. அணு ஆயுதம் உள்ள நாட்டின் மீது எந்த ஒரு நாடும் போர் தொடுக்க அச்சப்படுகின்றது. அதனால் அந்த நாடு தன் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி குறுகிய காலத்தில் மிக பெரும் வளர்ச்சியை அடைய முடியும். 

அதே நேரம் தன் நாட்டின் மீது பிறர் படையெடுத்து விடுவார்களோ என்கிற அச்சப்படத் தேவையே இல்லை.  

2.  புகை இல்லாமல் அணு மின் நிலையங்களில் அணுக்கரு பிளவு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

3.  அணுக்கருவைக் கொண்டு புற்றுநோய் போன்ற நோய்களைக் கண்டறியவும், அணுவைக் கொண்டே சிகிச்சை அளிக்கவும், புற்றுநோய் செல்களை அழிக்கவும் அணு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

4 . அணுசக்திகள் மூலம் பெறப்பட்ட கதிரியக்கங்களைக் கொண்டு பயிர்களின் வளர்ச்சி, உற்பத்தி திறனை மேம்படுத்துதல், பூச்சிகளை கட்டுப்படுத்துதல், உணவுப் பொருட்களை பாதுகாக்குதல் போன்ற விவசாய பணிகளுக்கு பயன்பட்டு வருகின்றது .

அதாவது மருத்துவம், விவசாயம், மின்சாரம், மற்றும் பல தொழில் துறைகளில் அணு ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அணுவின் தீமைகள் :
=====================

1. அணு உலைகளில் ஏற்படும் விபத்துகளால் அணு கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

2. அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதும், அகற்றியதை பாதுகாப்பாக வைத்துப் பராமரிப்பதும் மிகப் பெரும் ஆபத்தான செயல்.

3. அணுவை உற்பத்தி செய்த பிறகு அதை தொடர்ந்து பராமரித்து வருவது மிகப்பெரும் சிக்கலும், பொருளாதார நஷ்டமும் ஆகும்.

4. அணு உலைகளை குளிர்விக்க தொடர்ந்து தண்ணீரை பயன்படுத்தி வரும்பொழுது நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உண்டு.

5. அணுக்களை பிளக்கும் பொழுது எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. 

6. ஆயுதமாக அணுவை பயன்படுத்த நினைத்து மற்றொரு நாட்டின் மீது ஏவினால், மனிதர்களும் மற்ற உயிரினங்களும் அழிவது மட்டுமின்றி அந்த நிலப்பரப்பை சில பத்தாண்டுகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

அணு ஆயுதங்களை  உற்பத்தி செய்வதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? தடை செய்கிறதா என்று கேட்டால் இரண்டு வகையான கருத்துக்கள் நிலவுகின்றன.

அணு ஆயுதங்களை 
வைத்திருப்பது ஆகுமானதே! :
=============================

அல் கிதாலு ஃபில் இஸ்லாம் அஹ்காமுஹு வ தஷ்ரீஆதுஹூ -    இஸ்லாத்தில் போரிடுவதின் விதிகளும் சட்டங்களும் / அல் கிதாலு ஃபில் இஸ்லாம் - இஸ்லாத்தில் போர்க்களங்கள் / அல் ஜிஹாது வல் கிதாலு ஃபிஸ் ஸியாஸதிஷ் ஷர்இயதி - இஸ்லாமிய அரசு மார்க்க முறைப்படி போர் செய்தல் "  

ஆகிய மூன்று நூல்களில் அதன் ஆசிரியர்கள் கூறும் கருத்து என்னவென்றால் அணு ஆயுதங்களை தயாரிப்பது ஆகுமானதே என்பதுதான். 

ஏனென்றால் தம்மை எதிர்த்து வரும் எதிரிகளை எதிர்கொள்ள முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றது. 

وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ (60) ۞ 

நீங்கள் இயன்ற அளவு படை பலத்தையும், குதிரை படைகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும், உங்களுக்குத் தெரியாமல், அல்லாஹ் தெரிந்து வைத்திருக்கின்ற மற்ற எதிரிகளையும் அவற்றின் மூலம் நீங்கள் எச்சரிக்கலாம் ;

அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு பொருளுக்கும் (உரிய கூலி) உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும்; நீங்கள் சிறிதும் அநீதம் இழைக்கப்பட மாட்டீர்கள். 
8 : 60

தஃப்ஸீர் ரூஹுல் மஆனி எனும் விரிவுரையை வழங்கிய ஷிஹாபுத்தீன்  ஆலூஸி (ரஹ்) அவர்கள் மேற்கண்ட வசனத்திற்கு விரிவுரையாக கூறுவதாவது;  போரை பலப்படுத்துகின்ற எந்த ஆயுதத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கின்றது. 

நூல் : ரூஹுல் மஆனி 

ஷைகு முஹம்மது ரஷீது ரிழா  (ரஹ்) அவர்கள் மேற்கண்ட வசனத்திற்கு விரிவுரையாக கூறுவதாவது; 

இமாம் ராஸீ (ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் இருந்த உலமாக்கள் அனைவரும் மேற் சொன்ன வசனத்தின் பொதுவான கருத்தின் அடிப்படையில் எதை வேண்டுமானாலும் ஆயுதங்களாக உருவாக்கி கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். 

நூல் : தஃப்ஸீருல்  மனார்

ஸஅதீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; இயந்திர துப்பாக்கிகள், துப்பாக்கிகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், அகழிகள், (பள்ளத்தை ஏற்படுத்துகின்ற வெடிகுண்டுகள்) மற்றும் தம்மை தற்காத்துக் கொள்ள பயன்படக்கூடிய அனைத்து வகை இயந்திரங்கள்

ஆகியவற்றைக் கொண்டு எதிரிகளின் தீமைகளில் இருந்து தம்மை தற்காத்துக் கொள்வதோடு, முஸ்லிம்கள் முன்னேறிச் செல்வதற்குத் தேவையான அனைத்து வகை இயந்திரங்களையும், பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது.

நூல்: தைஸீருல் கரீமுர் ரஹ்மான்

புகைப்படத்தில் இருப்பது யுரேனியம் 

யுரேனியம் குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்து கொள்ள....

World Uranium Mining Production - World Nuclear Association https://share.google/vxATtTW9P1hfYbkKE

உள்ளங்கையில் யுரேனியம்... https://share.google/DgeJoQwbVZUwUpRF6

 https://share.google/lX44jbB1xfF4scC2E

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்