உயரமான இடத்தில் இருந்தவாறு உரையாற்றுகிறார்

நபி ஸல் அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
*•••••••••••÷÷÷÷÷÷÷•••••••••••••••••*
*•••••••••••÷÷÷÷÷÷÷•••••••••••••••••*

மாதம் : 6

தொடர் : 42

உயரமான இடத்தில் 
இருந்தவாறு உரையாற்றுகிறார் :
===============================

பெண் ஷைகாக இருக்கக்கூடிய, மார்க்க சட்ட வல்லுனரான, மிகப்பெரும் பேச்சாளரான பாத்திமா பின்த் அப்பாஸ் (ரஹ்) அவர்கள் ஒரு உயரமான இடத்தில் நின்று பெண்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்; 

அவரின் உரையைக் கேட்டு அங்கிருந்த பெண்கள் மிகப்பெரும் பயனை அடைந்தார்கள்; மேலும் அந்நிகழ்வுக்குப் பிறகு அங்கிருந்த பெண்கள் அனைவரும் அல்லாஹ் மற்றும் ரசூலுக்குக் கட்டுப்பட்டு தமது இதயத்தை அல்லாஹ்விற்காகவே ஒதுக்கி விட்டார்கள்.

இமாம் இப்னு தைமியா அவர்கள் அந்த பெண் ஷைகு உடைய அமலைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள்.

மேலும் அவரின் அறிவாற்றல், சிந்தனைகள், பிறரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பாங்கு, அவரின் இறையச்சம், அவரின் இறை நினைவிலான அழுகை ஆகியவற்றைக் கண்டு புகழ்ந்து பேசினார்கள்.

ஸலாஹுத்தீன் அஸ் ஸஃபதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; ஷைஹு தகியுத்தீன் பின் தைமியா (ரஹ்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை பலரும் என்னிடத்தில் கூறினார்கள். 

ஷைஹு தகியுத்தீன் பின் தைமியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; என் மனதில் பாத்திமா பின்த் அப்பாஸ் (ரஹ்) அவர்கள் குறித்து ஒர் எண்ணம் எப்பொழுதும் இருந்து வந்தது; அவர் உயரமான இடத்திற்கு ஏறுவதைக் கண்டு அவரை தடுக்க வேண்டும் என நான் விரும்பினேன்; ஆனால் அதை நான் செய்யவில்லை. 

இந்நிலையில் அன்று இரவு நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன்; அந்தப் பெண்மணி குறித்து கேட்டேன்; அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர் ஸாலிஹான நல்ல பெண்" என்று கூறினார்கள்.

நூல் : அஃயானுல் உஸ்ர் வ அஃவானுன் நுஸ்ர்.

ஒருவர் குறித்து நமக்கு தெளிவாக தெரியாத போது அவர் குறித்து யாரிடத்திலும் பேசாமல் இருப்பதே நல்லது!.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்