ஈரான் இஸ்ரேல் யுத்தத்தைக் கண்டு உலக நாடுகள் அச்சப்படுவது ஏன்?
ஈரான் இஸ்ரேல் யுத்தத்தைக் கண்டு உலக நாடுகள் அச்சப்படுவது ஏன்?
÷÷÷÷÷÷÷÷÷÷÷=========÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ஈரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாட்டினரும் மாறி மாறி தாக்கி கொள்வதில் இரண்டு நாட்டினருக்குமே பலத்த சேதங்கள் ஏற்பட்டு வருவது மறுக்க முடியாத உண்மை!
இஸ்ரேலில் கொஞ்சம் அதிகமாகவே சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதுவும் உன்னையே!
"இஸ்ரேலுக்குள் ஒரு தூசி நுழைய முடியாது" என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தது அந்த நாட்டு அரசு.
அதை உண்மை என நம்பி உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருந்த உலக அரசாங்கங்களும், ஊடகங்களும் இப்பொழுது இஸ்ரேலில் நடக்கும் நேரடி கள நிலவரத்தை கண்டு அஞ்சுகின்றனர். பின் வாங்குகின்றனர்.
அது ஈரானின் தாக்குதலை கண்டு அல்ல!
இஸ்ரேல் தன் வலிமை குறித்து சொல்லி பில்டப் கொடுத்தது போல் தற்போது கள நிலவரம் இல்லையே என்று எண்ணி.
அல்லது இஸ்ரேல் அரசு சொல்லி வந்த செய்திகள் அனைத்தும் பொய்கள். பொய்களைச் சொல்லி நம்மை நம்ப வைத்து விட்டார்களே என்ற ஏமாற்றத்தை எண்ணி!
இஸ்ரேல் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதே என்று எண்ணி!!
அதே நேரம் தாக்குதலை நடத்தும் ஆளில்லாத விமானம், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சீறிவரும் ஏவுகணைகளை hack - செய்து தவறான இலக்கை நோக்கி அனுப்பி வைக்க இயலும் அல்லது அனுப்பிய நாட்டினருக்கே திருப்பி அனுப்பி வைக்க இயலும் தொழில்நுட்பத்தை அனைத்து நாட்டு ராணுவத்தினரும் அறிந்து வைத்துள்ளனர்.
ஆனால் ஈரானுடைய தாக்குதலை நடத்தும் ஆளில்லாத விமானம் உட்பட எதையும் hack - ஹேக் செய்ய இயலவில்லை என்பதை அறிந்த இஸ்ரேலும் அமெரிக்காவும் அதனை அவ்விருவர் வாயிலாக கேள்விப்பட்ட உலக நாடுகளும் பெரும் அச்சத்தில் உறைந்து போய் நிற்கின்றது.
உலகம் முழுவதும் உள்ள மனிதர்களில் சிலர் இஸ்ரேல் தாக்கப்படுவதை முழுமையாக ஆதரிக்கிறார்கள்.
சிலர் அரை மனதோடு ஆதரிக்கிறார்கள்.
சிலர் அங்கும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள் என கூறுகிறார்கள்.
சிலர் இஸ்ரேல் அடிபட்டால் தான் திருந்தும் எனக் கூறுகிறார்கள்
இதுவெல்லாம் கடந்த நான்கு நாட்களாக சமூக ஊடகங்களில் மக்கள் பதிவிட்டு வரும் கருத்துகளின் தொகுப்பு!
உலக மக்களின் ஒவ்வொருவருடைய மனநிலையும் வெவ்வேறாகவே இருக்கின்றது.
ஆனால் ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளை ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களின் மனநிலை ஈரானின் கை ஓங்குவதை விரும்பவில்லை.
Comments
Post a Comment