அல்லாஹ்வின் நினைவால் அழுது புலம்பிய ஷுஐப் அலை அவர்கள்

அல்லாஹ்வின் நினைவால் அழுது புலம்பிய ஷுஐப் அலை அவர்கள் 
==================================


அல்லாஹ் கூறுகின்றான்;

 وَإِنَّا لَنَرَاكَ فِينَا ضَعِيفًا ۖ 

"ஷஐபே! நிச்சயமாக நீர் எங்களிலேயே பலவீனராகத்தான் உம்மை நாங்கள் காண்கிறோம்." (11:91) எனும் இந்த வசனத்திற்கு "ஷுஐப் (அலை) அவர்கள் கண்பார்வையற்றவராக இருந்தார்கள்" என இப்னு அப்பாஸ் (ரலி), ஸயீத் பின் ஜூபைர் (ரலி), அஸ்ஸவ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஷுஐப் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அன்பால், தம் கண்பார்வை நீங்கும் அளவுக்கு அழுதார்கள்; எனவே, அல்லாஹ் அவருக்கு மீண்டும் கண்பார்வையைக் கொடுத்தான்.

"ஷுஐபே! நரகத்தின் அச்சத்தால் நீர் அழுகின்றீரா? அல்லது சொர்க்கத்தின்பால் உள்ள உமது ஆசையால் நீர் அழுகின்றீரா?" என்று அல்லாஹ் வினவினான்.

"இல்லை; உன்மீதுள்ள அன்பின் காரணத்தால்தான் நான் அழுகிறேன்; நான் உன்னைப் பார்த்துவிட்டால், (அதன்பின்) எனக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றி பொருட்படுத்த மாட்டேன்" என்று பதிலளித்தார். 

எனவே அல்லாஹ், “ஷுஐபே! என்னுடைய சந்திப்பு உமக்கு மகிழ்ச்சியளிக்கட்டும்! அதனால்தான், என்னிடம் பேச இருக்கின்ற மூஸா பின் இம்ரான் (அலை) அவர்களை உமக்குப் பணியாளராக ஆக்கினேன்" என்று கூறினான். 

நூல்: ஹாகிம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்